அதிக அளவு பயன்களைத் தரும் பயத்தங்காய்!

அதிக அளவு பயன்களைத் தரும் பயத்தங்காய்!
Published on

பயத்தங்காயில் விட்டமின்கள், B காம்ப்ளெக்ஸ், ரிபோபிளேவின், புரதச்சத்து, மாவுச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், போன்றவை அதிகமாக அடங்கியுள்ளது.

பயத்தங்காயில் உள்ள லிக்னின் எனும் வேதிப்பொருள் உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. ஹைபர் டென்ஷனைக் குறைத்து பக்கவாதம் மற்றும் இதய நோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது. 

பயத்தங்காயில் நார்ச்சத்து மிக அதிகம். அதனால் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க, சிறுசீரகத் தொற்று ஏற்படாமல் இருக்க, உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க என பல ஆரோக்கிய விஷயங்களுக்கு இது அவசியமாகிறது.

கூந்தல் வளர்ச்சிக்குத் தேவையான புரதச் சத்து பயத்தங்காயில் அதிகமுள்ளது. இதை சாப்பிடுபவர்களுக்கு கூந்தல் சீக்கிரமாகவும் அடர்த்தியாகவும் வளரும்.

பயத்தங்காயில் உள்ள ஃபைபர் சத்து, கணையம், கல்லீரல் ஆகியவற்றில் ஏற்படும் பிரச்சினைகளைத் தவிர்க்க உதவுகிறது. குறிப்பாக மஞ்சள் காமாலை ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.

பயத்தங்காய் உடல் சூட்டைக் குறைத்து உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும். பித்தம், கபம் பிரச்சினை உள்ளவர்களுக்கு அவற்றைக் குறைக்க இது உதவுகிறது.

பயத்தங்காயில் ஃபோலேட் சத்து அதிக அளவில் இருப்பதால் கர்ப்ப காலத்தில் இந்த காயை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. இது குழந்தையின் மூளை வளர்ச்சிக்கும் உதவும்.

இதயம், சீறுநீரகம் போன்றவை சீராக இயங்க தேவையான பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் இதில் அதிகமாக நிறைந்துள்ளது.

பயத்தங்காயில் உள்ள அயோடின் தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்திக்கு மிகவும் அவசியமாகும். மேலும் தைராய்டு ஆரோக்கியத்திற்கு அவசியமான செலினியமும் இதில் உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com