இணைபிரியா தோழிகள்…

இணைபிரியா தோழிகள்…
சௌமியா சுப்ரமணியன்

என் பெயர் சௌமியா சுப்பிரமணியன். பள்ளி கல்லூரி படித்து முடித்து திருமணமாகி, என் கணவர் , மற்றும் இரண்டு மகன்கள், தாயார், என் அண்ணன், என் மற்றும் மாமியார் என அனைவரும் ஒன்றாக சென்னையில் ஒரே வீட்டில் வசித்து வருகிறோம். வீட்டில் விதவிதமாக சமைத்து குடும்பத்தாருக்கு பறிமாறுவது எனக்கு மிகுந்த மனநிறைவை தருகிறது. இது தவிர சமையல் குறிப்பு, கவிதை, சிறுகதை துணுக்கு எழுதுவது, புத்தகங்கள் படிப்பது, பாடல்கள் கேட்பது , தோட்டத்தை பராமரிப்பது எனது பொழுதுபோக்கு. வீட்டு வேலைகளை நானே செய்வதோடு, எனது தாயார் மற்றும் மாமியாரை கவணமாக பார்த்துக்கொள்கிறேன். மேலும் எங்கள் வீட்டு செல்லப்பிராணியாகிய "ஆஸ்கர்" மற்றும் "அதீனா" என்கிற இரு நாய்குட்டிகளுடன் நேரம் போவது தெரியாமல் விளையாடுவதும், என் வீட்டு மீன் தொட்டியில் உள்ள மீன்களை பார்த்து ரசிப்பதும் மனதிற்கு ஆனந்தத்தை தருகிறது.

Updated on

ங்கையர்மலர், மங்கையர் மட்டுமே படிக்கும் மலர் அல்ல. மங்கையர்மலர் வாங்கியவுடன் அதை முதலில் நான்தான் படிப்பேன். வெளியூர் செல்லும் நேரத்தில் மங்கையர்மலரையும் எடுத்துச்சென்று பயணத்தின் போது படிப்பேன்.

மங்கையர்மலர் மூலம் தெரிந்து கொண்ட விஷயங்கள் பற்பல. நமக்குத் தெரியாத விஷயங்கள் இத்தனை இருக்கிறதா? என்று வியப்படைந்துள்ளேன்.

போட்டி என்றால் கேட்கவே வேண்டாம். பரிசுகளை, வெற்றியாளர் களுக்கு  குறித்த நேரத்திற்கு வாரி வழங்குவது மங்கையர்மலர் அலுவலகம் மட்டுமே.

மங்கையர்க்கு மட்டுமல்ல மனிதர்கள் அனைவருக்குமே வரப்பிரசாதம் மங்கையர்மலர். மங்கையர்மலர் வாசகி நான் என்று சொல்லிக்கொள்வதில் பெருமையடைகிறேன்.

logo
Kalki Online
kalkionline.com