
கருப்பு கவுனி அரிசியில் இரும்பு, கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், துத்தநாகம், தாமிரம், மாங்கனீஸ், செலினியம் மற்றும் மாலிப்டினம் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன.
கருப்பு கவுனி அரிசி கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதோடு, இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
தினமும் கவுனிகளை உட்கொள்வதால், எலும்புகளில் கால்சியத்தின் அளவு அதிகரிக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வலுவான எலும்புகளை உருவாக்க கால்சியம் தேவைப்படுகிறது.
கருப்பு கவுனி அரிசியில் உள்ள அதிக அளவு நார்ச்சத்தானது, ‘LDL’ என்ற கெட்ட கொலஸ்ட்ரால் கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது. இதனால் இருதய பிரச்சனைகளின் அபாயத்தை குறைக்கிறது.
வெள்ளை அரிசியுடன் ஒப்பிடும் போது, கருப்பு கவுனி அரிசியில் அதிக புரதச்சத்து அடங்கி இருக்கிறது. இது உடலில் தசைகளை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றுகிறது.
கருப்பு கவுனியில் அதிக அளவு பொட்டாசியம் உள்ளது, இது இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுவதோடு, கொலஸ்ட்ரால் அளவையும் குறைத்து பக்கவாதம் வராமல் தடுக்கிறது.
இது வயிற்று போக்கு மற்றும் குடல் வீக்கம் போன்ற பிரச்சனைகளை சரி செய்யவும் பயன்படுகிறது.
கவுனி அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை ஆஸ்துமா நோயாளிகள் சாப்பிடுவதால் இதில் உள்ள அந்தோசயனின் சத்துக்கள் ஆஸ்துமா நோயாளிகளின் நுரையீரலில் அதிகளவு சளி உற்பத்தி ஆகாமல் தடுத்து, அவர்களுக்கு நிவாரணம் அளிப்பதாக மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கருப்பு கவுனி அரிசியில் உள்ள ஆன்தோசயனின், ஆக்ஸிடேடிவ் ஸ்ட்ரெஸ் எனப்படும் மனஅழுத்தம் மற்றும் மூளையில் ஏற்படும் அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.