டாக்டர் புவனேஸ்வரி ராஜேந்திரன்,நரம்பியல் நிபுணர்.சென்னை காவேரி மருத்துவமனையில் நரம்பியல் நிபுணராக (Consultant Neurology, Neurophysiology) இருக்கும் மருத்துவர், டாக்டர் புவனேஸ்வரி ராஜேந்திரன் மங்கையர் மலர் வாசகிகளுக்காக, நரம்பு மண்டலம் சம்பந்தமான பல பிரச்னைகள் குறித்து விளக்கம் தருகிறார். இந்த வாரம்.. கார்பல் டனல் சிண்ட்ரோம் (Carpal tunnel syndrome--CTS) அனேகம் பேருக்குத் தெரியாத பெயர் இந்த பிரச்னை உடலின் எந்த பாகத்தை பாதிக்கக் கூடியது என அவரிடம் நாம் கேட்டுக் கொண்டிருக்கும்போதே ஒரு பெண்மணி வருகிறார். “இந்தக் கை ரொம்பவும் வலிக்கிறது... அவ்வப்போது மரத்துப் போகிறது. மணிக்கட்டிலும் (wrist) வலி இருக்கிறது. என்ன செய்ய.? என கவலையுடன் சொன்னார் அந்தப் பெண்மணி.“கவலைப் படாதீர்கள்...இது கார்பல் டனல் சிண்ட்ரோம் ஆக இருக்கலாம். சோதனை செய்து பார்த்தால் தெரிந்துவிடும் என்கிறார் மருத்துவர் புவனேஸ்வரி. சற்று நேரம் அந்தப் பெண்மணிக்குத் தேவைப்படும் சோதனைகளை கவனித்து விட்டு வந்து நம் கேள்விக்கு பதிலளித்தார் டாக்டர் புவனா.“நம் விரல்களில் உள்ள நரம்புகள் மூலம் நாம் தொடு உணர்ச்சியை அறிகிறோம். இந்த நரம்புகள், நம் தோள் பட்டையிலிருந்து வரும் மீடியன் நர்வ் (Median nerve) என்னும் நரம்பிலிருந்து, மணிக்கட்டு வழியே கைகளுக்கு வருகின்றன.மேற்புறம் தசை நார்களால் ஆன பரப்பாலும் (fibrous sheath) கீழ்ப்புறம் மணிக்கட்டு எலும்புகளாலும் பாதுகாக்கப்பட்ட, ஒரு டனல் போன்ற அமைப்பின் வழியே இந்த மீடியன் நரம்பு விரல்களுக்குச் செல்கிறது. இந்த டனல் அமைப்பின் பெயர் கார்பல் டனல் (Carpal tunnel). சில நேரம் சுற்றி உள்ளவற்றால் இந்த மீடியன் நரம்பு அழுத்தப் படும்போது வலி, மரத்துப் போதல் விறுவிறுப்பு உணர்வு (Numbness and Tingling) போன்றவை ஏற்பட வாய்ப்பு உண்டு இதைத்தான் கார்பல் டனல் சிண்ட்ரோம் (Carpal tunnel syndrome) என்கிறோம். இந்தப் பிரச்னைக்கான காரணங்கள் என்ன டாக்டர்?இந்த வகை சிண்ட்ரோம் வர பல காரணங்கள் உள்ளன. பொதுவாக, டனலுக்குள் இருக்கும் மீடியன் நரம்பு அழுத்தப்படும்போது மணிக்கட்டு, கைகளில் வலி, மரத்துப்போதல் போன்றவை ஏற்படுகின்றன.இந்தப் பிரச்னைக்கு ஒருவரது கைகளின் அமைப்பும் முக்கியக் காரணமாகிறது. டனலுக்குள் இருக்கும் மீடியன் நரம்பின் உராய்வுகள், இழுத்தல் இவற்றை அதிகரிக்கச் செய்யும் வாய்ப்பு கையின் அமைப்பினாலும் ஏற்படலாம். சிலருக்கு இயற்கையிலேயே மணிக்கட்டின் அமைப்பினால், டனல் குறுகி இருக்கலாம். கர்ப்ப காலத்தில் சில பெண்களுக்கு தற்காலிகமாக இந்த சிண்ட்ரோம் ஏற்படலாம்.சர்க்கரை, தைராய்ட், ஆர்த்ரைடிஸ் உள்ளவர்களுக்கு இதற்கான ரிஸ்க் மற்றவர்களை விட சற்று அதிகம். இவர்களுக்கு சில நேரம் இரவில் விரல்களில் மரத்த உணர்ச்சி வரலாம். (Night Numbness) பொதுவாக, கட்டை விரல், ஆள்காட்டி விரல் மற்று நடுவிரல்களில்தான் மெல்ல மரத்தல், விறுவிறுப்பு உணர்ச்சி என்று ஆரம்பிக்கும் இது அடிக்கடி வந்து வந்து போகும். இதனால் அசௌகரியமாக உணரும் சிலர் அப்போது கையை உதறுவார்கள்..இதற்கான சோதனைகள் என்னென்ன?நர்வ் கண்டக்ஷன் ஸ்டடீஸ் (nerve conduction studies) மூலம் நரம்பு எவ்வளவு அழுத்தப்படுகிறது என்பதை அறிய முடியும். அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எடுக்கும் போது, மணிக்கட்டில் நரம்பின் அமைப்பு, பயன்பாடு போன்றவை தெரியவரும். பின்னர் அதற்கேற்றார்போல் சிகிச்சை தரப்படும்.சிகிச்சைகள் எப்படி தரப்படும்?மணிக்கட்டில் போட்டுக்கொள்ள கார்பல் டனல் ஸ்ப்ளின்டிங் தருகிறோம். (Wrist splinting) இது நரம்பின் அழுத்தத்தைக் குறைக்க உதவும். இரவில் இதை பயன்படுத்தும்போது மரத்துப் போகாமல், விறுவிறுப்பு இல்லாமல் இருக்க உதவும்.வலியைக் குறைக்க NSAID மருந்துகள் தரப்படுகின்றன. நரம்பைச் சுற்றி வீக்கம் (inflammation) இருந்தால் Corticosteroid injection ஊசிகள் மணிக்கட்டில் செலுத்தி சிகிச்சை தரப்படும்.இதற்கு அறுவை சிகிச்சை தேவைப்படுமா டாக்டர்?அனேகமாக இருக்காது. ஆனால், மேற்சொன்ன சிகிச்சைகளில் பலன் தெரியவில்லை என்றால் சிறிய அறுவை சிகிச்சை தேவைப்படும். மணிக்கட்டின் உள்ளங்கைப் பகுதியில் ஒரு சிறிய துளையிட்டு, டனலை இறுக்கி, மீடியன் நரம்பை அழுத்திக் கொண்டிருக்கும் தசைநார்ப் பகுதியை (ligament) எடுத்து விடுவார்கள். இதனால் டனலின் அளவு பெரிதாகி வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.பெரும்பாலும் கார்பல் டனல் சிண்ட்ரோம் வந்தவர்கள், தகுந்த சிகிச்சை எடுத்துக் கொள்ளும்போது வலி, மரத்து போதல் மற்றும் விறுவிறுப்பு இவற்றிலிருந்து விடுபட்டு குணமடைந்து விடுவதோடு கைகளின் செயல்பாடுகள் நார்மல் நிலைக்கு வந்து விடும்.