கிளி மட்டும் பேசாது... காக்கையும் பேசும்! - ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Crow Intelligence
Crow IntelligenceImg credit: AI Image
Updated on
MM strip
MM strip

நம்மில் பலர் காக்காவை ஒரு ஏளனமான பறவையாக நினைக்கிறோம்; பார்க்கிறோம்; நடத்தவும் செய்கிறோம். காக்கா ஒரு மிக புத்திசாலியான பறவை ஆகும். ஆராய்ச்சியாளர்கள் காக்கைகள் ஒரு ஏழு வயது மனித குழந்தைக்கு இருக்கும் அறிவை விட அதிக அளவு அறிவு உடையன என்று கண்டறிந்துள்ளார்கள்.

இந்த சாமர்த்திய பறவை நம்ப முடியாத செயல்களை செய்து காட்டுகின்றன. வருடங்கள் ஆனாலும் தனக்கு தொந்தரவு கொடுத்தவர்களை காக்கைகள் மறப்பதும் இல்லை; மன்னிப்பதும் இல்லை.மேலும் நீங்கள் ஒரு காக்காவை அடித்தோ துன்புறுத்தியோ தீங்கு விளைவித்தால் அது அதை பற்றி மற்ற காக்கைகளிடம் தெரியபடுத்தி அவற்றையும் உங்களுக்கு எதிராக திருப்பிவிடும். ஒரு காக்கைக்கு தீங்கு செய்தால் நீங்கள் ஒரு காக்கை பட்டாளத்திற்க்கே விரோதியாகிவிடுவீர்கள்.

ஒரு காக்கை இறந்து விட்டால் மற்ற காக்கைகள் அதை கண்டுகொள்ளாமல் போகவே போகாது. இறந்த காக்கையின் உடலை சுற்றி உட்கார்ந்து துக்கம் அனுசரிக்க செய்கின்றன. எப்படி இறந்தது என்று ஆலோசனையும் நடத்துகின்றன. அதை ஆராய்ச்சியாளர்கள் 'CROW Funeral' என்று அழைக்கிறார்கள். காக்கைகள் கருவிகளை உபயோகிப்பது மட்டுமல்லாமல் அவற்றை உருவாக்கும் அளவுக்கு புத்திசாலியாகவும் இருக்கின்றன.

காக்கைகளுக்கு பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் சாதுர்யமும் உண்டு என்று நிரூபணம் ஆகி உள்ளது. கம்பிகளை தேவைக்கேற்றவாறு வளைத்து உபயோகிக்கவும் அவற்றால் முடியும். ஒரு காக்கைக்கு அதற்கு கிடைக்கும் கொட்டைகளை உடைக்கும் உபாயமும் தெரிந்துள்ளது. நகரங்களில் காக்கைகள் தங்களுக்கு கிடைக்கும் கொட்டைகளை சாலையில் போட்டு வண்டிகள் அதன்மேல் ஏறி உடைக்கும் வரை காத்து பின்பு வெளிவந்த பருப்புகளை சொகுசாக உண்டு மகிழ்கின்றன காக்கைகள்.

இதையும் படியுங்கள்:
பூசணிக்காயை இப்படி உடைக்கிறீர்களா? ஆபத்து! இதோ சரியான முறை!
Crow Intelligence

மனிதர்களை பற்றி வம்பு பேசுவதில் ஈடுபடுவதாகவும் கண்டறிந்துள்ளனர். ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்திருக்கும் இன்னொரு விஷயம் காக்கைகளால் பல அடுக்கு புதிர்களையும் (Multiple Puzzle) தீர்க்க முடிகிறது என்பதுதான். கிளிகளால் மட்டும்தான் பேச முடியும் என்பது தவறு. காக்கைகளும் வார்த்தைகளை உச்சரிக்க செய்கின்றன. வளர்ப்பு காக்கைகள் தங்களுடைய எஜமானின் குரலை மிமிகிரி கூட செய்கின்றன. நாய் போல குறைக்கவும் பூனை போல 'மியாவ்' என்று கத்தவும் கார் ஹாரன் போல ஒலி எழுப்பவும் அவற்றால் முடியும் என்று கண்டறிந்துள்ளனர்.

எல்லாவற்றையும் விட ஒரு ஸ்பெஷல் ஐட்டம் ஒன்னு இருக்கு. அதுதான் காக்கைகளால் டிராபிக் சிக்னலை புரிந்து நடந்து கொள்ள முடிவது தான். சாலை நடுவில் கிடக்கும் உணவு துண்டை எடுக்க டிராபிக் சிக்னலை பார்த்து முடிவெடுக்கின்றனர். சிவப்பு விளக்குக்காக வாகனங்கள் நிற்கும் சமயம் பார்த்து குறுக்கே நடந்து கிடைக்கும் உணவுப் பொருளை கவ்வி கூலாக பறந்து விடுகின்றன. மொத்தத்தில் காக்கைகள் எதிலும் மனிதர்களுக்கு சளைத்ததில்லை. சாப்பிடுவதில் மட்டுமல்லாமல் எதிரிகளை எதிர்ப்பதிலும் காக்கைகள் ஒன்று கூடுகின்றன. காக்கைகள் பற்றிய இந்த அசத்தும் உண்மைகளை அறிந்தவுடன் எச்சி கையால் காக்கா ஓட்டாதவருக்கும் காக்கையை பிடித்து விடும் என்று நினைக்கிறேன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com