

பொதுவாக வீடு, தொழில் கூடங்கள், கடைகள் போன்றவை இன்னும் பல இடங்களில் அமாவாசை அன்று இன்னும் பிற சமயங்களில் திருஷ்டி கழிக்க தேங்காயில் சூடம், எலுமிச்சை பழத்தில் சூடம் மற்றும் பூசணிக்காய் போன்றவற்றில் சூடம் ஏற்றி சுற்றிக் காட்டி திருஷ்டி கழிப்பது தெரியும். இதற்கு நம் இனமே நமக்கு பகை என்பது போல், சில பேரது கண்களால் திருஷ்டி ஏற்படுவது என்னவோ உண்மைதான். அதற்குத்தான் இந்த செயல் செய்யப்படுகிறது.
அதனால் நமக்கு பலவகைகளில் துன்பங்கள், காரியத்தடங்கல்கள், உடல் நல பாதிப்புகள் வருகிறது. இவற்றிலிருந்து தப்பிக்கவே நாம் இப்படிப்பட்ட திருஷ்டி விஷயங்களை செய்து வருகிறோம். இவற்றில் பூசணிக்காய் முதலிடம் வகிக்கிறது. அதற்குத்தான் பூசணிக்காய்க்கு 'திருஷ்டி பூசணிக்காய்' என்ற பெயரும் வந்தது.
பூசணிக்காயை எந்த விதத்தில் சுற்றி உடைத்தால் நம்மை பிடித்த தீய சக்திகள், மற்றும் கண் திருஷ்டி போன்றவை நீங்கும் என்பதை பார்ப்போம்.
பூசணிக்காய் திருஷ்டி கழிக்கும் முறையை சைவ பலி என்று அழைப்பது உண்டு. இதனை திருஷ்டி கழிப்பதால் நமக்கு ஏற்பட்ட கெட்ட நேரம் விலகும் என்பதும் ஐதீகம். ஆன்மிகம் கலந்த தாந்திரீக முறையில் எப்படி திருஷ்டி கழிப்பது என்பதை பார்ப்போம். இந்த முறையில் செய்தால் கண் திருஷ்டி நீங்கி, நம்மை பிடித்த துரதிருஷ்டம் விலகி, வெற்றிகளும் நல்ல நேரமும் வந்து சேரும்.
பூசணிக்காயில் எப்படி திருஷ்டி சுற்றுவது?
முழு பூசணிக்காயை அப்படியே திருஷ்டி சுற்றி உடைத்து விடுவதுதான் முழு பலனும் நமக்கு கிடைக்கும். ஆனால் அதில் சிறுதளவு வெட்டி எடுத்துவிட்டு, அதனுள் குங்குமம் மற்றும் சில்லறை காசுகளை போட்டு, அதனை மூடிவிட்டு செய்வதுதான் நமது வழக்கமாக இருக்கிறது. இனிமேல் அப்படி செய்ய வேண்டாம். ஏனென்றால், அதனை வெட்டிவிட்டு செய்வதால், அதன் தனித்தன்மையை இழந்து மற்றும் அதன் சக்தியையும் இழந்து விடுகிறது.
எனவே இனிமேலாவது பூசணிக்காயை பின்னம் செய்யாமல், அதனை திருஷ்டி கழிப்பதற்கு பயன்படுத்தவும். முதலில் பூசணிக்காயை நன்றாக கழுவிவிட்டு, தரையில் வைத்து, நான்கு திசைகள் இருந்தும் அதனை தாண்டி, பிறகு அந்த பூசணிக்காயை தேவையான இடத்தில் திருஷ்டி சுத்த பயன்படுத்த வேண்டும்.
அப்போதுதான் அதனுடைய முழுபலனும் நமக்கு கிடைக்கும். காலை முன்னோக்கி வைத்து தாண்டுவது அவசியம் கடைப்பிடிக்க வேண்டும். அமாவாசை அன்று இதை பின்பற்றினால், தீயசக்தி அகன்றுவிடும்.
பூசணிக்காயைப் போன்று, எலுமிச்சை, ஸ்படிகம் மற்றும் படிகாரம் போன்றவற்றிலும் இதுபோல் கண் திருஷ்டிக்கு பயன்படுத்தினால் அந்த இடம் தூய்மை அடையும். இவை அனைத்திற்கும் கண் திருஷ்டியை ஈர்த்து, தன்வசம் வைத்துக்கொண்டு, அந்த இடத்தை நேர்மறை சக்தியை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டுள்ளன.