குட்டீஸ்… லூட்டீஸ்... கேள்வீஸ்!

குட்டீஸ்…  லூட்டீஸ்... கேள்வீஸ்!
nalam tharum Navarathiri
nalam tharum Navarathiri

வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

Navarathiri
Navarathiri

சில வருடங்களுக்கு முன்பு பணியில் இருந்த என் தோழி ஒருத்தி நவராத்திரி சமயத்தில் மாதவிலக்கு வந்துவிட்டதால் நைவேத்தியங்கள் செய்வது மிகவும் கஷ்டமாக இருக்கிறது என்று வருத்தப்பட்டாள். அதைக் கேட்டுக்கொண்டிருந்த அவளுடைய எட்டு வயது  மகள்    "அம்மா நீ முதல் நாளே ஒன்பது வெரைட்டி சுண்டல் பண்ணி பிரிட்ஜில் வச்சுடு. அப்புறம் தினம் ஒண்ணா கொலுவுக்கு நைவேத்தியம் பண்ணிக்கலாம் இல்லையா?” என்று கேட்டாளே பார்க்கலாம்.

- சுதா.தி.

டந்த இரண்டு வருடங்கள் முன்பாக எங்கள் வீட்டு நவராத்திரி கொலுவிற்கு எனது சகோதரியின் பேரன் பேத்திகள் வந்திருந்தார்கள், மூன்று குட்டீஸ்களும் பொம்மைகளை இடம் மாற்றி வைப்பதும், சில பொம்மைகளுக்கு சின்ன சின்ன பிட் துணிகளை கேட்டு வாங்கி  அலங்காரம் செய்வதுமாக, கொலு பொம்மைகள், சிலவற்றை இடம் மாற்றிவைப்பதுமாக, ஒரே லூட்டிதான்.

அதில் ஒரு பேரன் ஒருபொம்மையை கை தவறி உடைத்துவிட்டான், உடனே ஏனைய இரு பேரன்களும் நீ மட்டும்தான் உடைப்பாயா? நாங்களும் உடைக்கிறோம் பார் என தலா ஒரு பொம்மையை உடைத்துவிட்டார்கள். என் சகோதரி அவா்களை, அடித்துவிட்டாள். அந்த கோபத்தில் மூன்று குட்டீஸ்களும் சாப்பிட அடம் பிடிக்கவே, நான் அவா்களை சமாதானம் செய்ய நீங்க சாப்பிடாவிட்டால் பொம்மைகளும் சாப்பிடாது, எனக்கூறி சாப்பிட வைத்தேன்.

மூன்று நாள் கழித்து ஊருக்கு கிளம்பும்போது ஒரு பேரன்  “சித்தி இப்பதான் கொரோனா முடிஞ்சிருக்கு இருந்தாலும் சேப்டிக்க்காக, எல்லா பொம்மைகளுக்கும் மாஸ்க் போட்டுவிடுங்க” என அறிவுபூா்வமாய் சொன்னது மறக்கவே முடியாது.

- நா. புவனா நாகராஜன்

 டந்த வருட கொலு சமயம் என் மகன் ஒருநாள்  பள்ளி செல்லவில்லை. அதனால் அவனைத் தேடி அவன் நண்பன் வர, துண்டு மட்டும் கட்டியிருந்த என் மகன் வெட்கத்துடன் கொலுப்படிக்கு கீழே ஓடி ஒளிய, அவனை விடாது துரத்திய நண்பன் பள்ளிக்கு வராமல் இங்கே உட்கார்ந்து என்னடா செய்யறேன்னு கேட்க,  ஜெபம் செய்யறேண்டா என்றிவன் கூற,  எதுக்குடா? என்றவன் கேட்க,  படிப்பு அப்பத்தாண்டா நல்லா வரும் என்றிவன் கூற, பார்த்துக் கொண்டிருந்த எனக்கு சிரிப்பு வந்ததை இன்றும் மறக்க முடியவில்லை.

- பிரகதாம்பாள் விஸ்வநாதன்

ன் பெண் வீட்டில் கொலு வைக்கும் பழக்கம் உண்டு. அவள் படிகளில் ஒவ்வொரு பொம்மையாக எடுத்து வைக்கும்போது ஆஞ்சநேயர் பொம்மையை வைத்ததும் என் மூன்றரை வயது பேரன்,  'ஏன்மா அனுமனுக்கு முகம் இப்படி சிவந்திருக்கு. அவர் அம்மா சொல்வதை கேட்காமல் வால்தனம் பண்ணியதால் அம்மா அடித்து விட்டார்களா' என்றானே பார்க்கலாம்! “இல்லைடா கண்ணா அவர் சூரியனை விளையாட்டாக பிடிக்கப் போய் முகம் சிவந்துவிட்டது” என்றோம். அடுத்ததாக ராவணன் அரச சபை செட்டை எடுத்து வைக்கும்போது அனுமன் தன் வாலை கொண்டே இருக்கையை அமைத்துக்கொண்டு அமர்ந்த பொம்மையை பார்த்ததும், “எவ்வளவு பெரிய வாலுமா?” என ஆச்சரியப்பட்டதுடன் “ஏம்மா ராவணன் அங்கிள் அனுமனுக்கு உட்கார சீட் கொடுக்கவில்லையா” என்றானே பார்க்கலாம்!

-  கிருஷ்ணவேணி

ன் மாமியார் அம்பாள் பக்தை. அதனால் கொலு வைக்கும் ஒன்பது நாளும் 9 புது புடவையை சாற்றி பூஜை செய்தார்கள். ஒருமுறை அப்படி பூஜை செய்யும்போது என் மகன் என் மாமியாரிடம் சென்று "பாட்டி ஏன் தினமும் ஒரு புதிய புடவை சாற்றுகிறாய்?" என்று கேட்டான்.  "உனக்கு பிடித்தபோதெல்லாம் உன் அம்மாவும் அப்பாவும் அழைத்துக்கொண்டு  புது டிரஸ் வாங்கி கொடுக்கிறார்கள் இல்லையா? சுவாமிக்கு யார் வாங்கி கொடுப்பார்கள்? அதனால்தான் கொலு வைக்கும் ஒன்பது நாளும் நாம் ஒன்பது புடவை வாங்கி வைத்தால், கடவுள் சந்தோஷப்பட்டு, படிப்பதற்கு நல்ல ஆசீர்வாதம் செய்வார்" என்று சொன்னவுடன் அவனுக்கு புரிந்தும் புரியாமல் "அப்படியா பாட்டி நானும் இனிமேல் நவராத்திரி ஒன்பது நாளும் 9 புது சட்டை வாங்கிக்கொள்கிறேன்” என்று சொல்ல என் மாமியார் சிரிப்பு தாங்காமல் அவனை அணைத்து முத்துமிட்டார்.

- லக்ஷ்மி ஹேமமாலினி

இதையும் படியுங்கள்:
தீம் கொலு!
குட்டீஸ்…  லூட்டீஸ்... கேள்வீஸ்!

ங்கள் உறவினர் வீட்டில் கொலு வைத்திருந்தார்கள் அதற்காக நான் என் மனைவியை அழைத்துக்கொண்டு சென்று இருந்தேன்.  அப்போது என் தங்கையின் மகனும் விடுமுறைக்கு வந்திருந்ததால்  அவனும் எங்களுடன் வந்தான்.  அவர்கள் வீட்டில் மிகப் பெரிய கொலு பார்க் எல்லாம் வைத்திருந்தார்கள். அவன் எல்லாவற்றையும் தொடாமல் பார்த்து ரசித்தான்.  கிளம்பும்போது என் மனைவிக்கு வெற்றிலை பாக்கு சுண்டல் அவற்றுடன் ஒரு ரவிக்கை துணி எல்லாம் வைத்துக் கொடுத்தார்கள்.. அவன் சிறுவன் என்பதால் அவனுக்கு சுண்டல் மட்டும் கொடுத்தார்கள். எனக்கு ஒன்றுமே கொடுக்கவில்லை.  உடனே அவன் அந்த வீட்டில் இருப்பவர்களிடம் "ஏன் ஆண் பிள்ளைகளுக்கு வெற்றிலை பாக்கு இதெல்லாம் கொடுக்கக் கூடாதா? என் மாமா பாவம் இல்லையா? அவருக்கு ஏன் ஒன்றும் கொடுக்கவில்லை" என்று வெடுக்கென்று கேட்டு விட்டான். உடனே அவர்கள் அதை எதார்த்தமாக எடுத்துக்கொண்டு "ஆமாம் உன் மாமாவுக்கு ஒன்றுமே கொடுக்கவில்லையே" என்று சொல்லி புதிய டி-ஷர்டை எடுத்து வந்து வெற்றிலை பாக்கு வைத்து என்னிடம் கொடுத்தார்கள். அவன் இப்படி கேட்டது எங்களுக்கு வருத்தமாக இருந்தாலும் அதை அவர்கள் தப்பாக எடுத்துக்கொள்ளவில்லை என்று நாங்கள் அவர்களிடம் சாரி என்று சொல்லி விட்டு எனது வெற்றிலை பாக்கு வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்தோம்.    

-வெ.  முத்துராமகிருஷ்ணன்

விநாயகர் சதுர்த்தியின்போது, மண் பிள்ளையார் வாங்கிவந்து, அலங்கரித்து சுண்டல் கொழுக்கட்டை படைத்து பூஜை செய்து, மூன்றாம் நாள் கடலில் கொண்டுபோய் கரைத்ததையெல்லாம் எங்கள் வீட்டு வாண்டு உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தது. நவராத்திரியின்போது பொம்மைகளை அடுக்கி நைவேத்யம் படைத்து பூஜை செய்தபோது, "அம்மா, நவராத்திரி முடிஞ்சதும் இந்த பொம்மைகளையும் கடலில் கரைச்சிடணுமா?" என அது  கேட்டதும், "இல்லடா, டப்பாக்களில் அடைத்து பரணில் வச்சுடணும்" என்றேன்.

"அப்போ பிள்ளையாரையும் அப்படி வைக்கலாம்ல.. ஏன் கடலில் போடணும்?" என்ற அவன் கேள்விக்கு பதிலளிக்காமல் முழித்தேன்.

- ஜெயகாந்தி மகாதேவன்

ட்டும் இடத்தில் இருந்த பொம்மைகள் இரண்டை எடுத்துச் சென்ற என் மகன் அவனது தலையனை அடியில் ஒளித்து வைத்துகொண்டான். அவனுக்கு தெரியாமல் அவற்றை எடுத்து குழுவில் வைப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது.

இந்த பொம்மைகளுக்கு மட்டும் ஏன் இத்தனை கைகள் இருக்கு? எனக்கு மட்டும் ரெண்டு கைதான் இருக்கு?

இத்தனை பொம்மைகள் நான் விளையாடறத்துக்காமா?

ஏன் இந்த பொம்மை எல்லாம் மட்டும் தனியா வைக்கிறோம்?

நான் என்ன பதில் சொல்வது என்று யோசிக்கும் முன்பாக கேள்விகள் அவனிடமிருந்து சரமாரியாக வந்துக் கொண்டே இருக்கும்!

-  சௌமியா சுப்ரமணியன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com