சிறுகதை; தன்யாவின் ஆசை..!

Artist: Shyam
Short Story in Tamil
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on
MM strip
MM strip

-ரா. குருராஜன்

"பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிச்சிட்டா மட்டும் போதாது. வீட்லேயும் நல்லா படிக்கிறாங்களான்னு கண்காணிக்கணும். போன வருஷம் முழுதும் தொண்ணூறு, தொண்ணூற்றைந்துன்னு மதிப்பெண் வாங்கின பெண் இப்ப வருஷ முதல் தேர்விலேயே ஒத்தைப்படை மார்க் வாங்கினா என்ன அர்த்தம்? அடுத்த தடவை இதே மாதிரி மார்க் வாங்கினா பள்ளிக்கூடத்தை விட்டே அனுப்பிடுவோம்."

தலைமையாசிரியை உரத்த குரலில் ஆவேசமாக ஆங்கிலத்தில் உறுமினார்.

தலைகுனிந்து நின்றிருந்த வதனா தன் மகள் தன்யாவைப் பார்த்தாள்.

தன்யாவின் கண்களிலும் கண்ணீர்.

"நானே அந்தக் கால எட்டாம் வகுப்பு வரை படிச்சவள். எனக்குப் பிறந்த என் மகள் மட்டும் படிப்பில் அதி புத்திசாலியாக இருப்பாள்னு எப்படி எதிர்பார்க்க முடியும்? தாய் இரண்டடியாவது பாய்ந்தால்தானே குட்டி நான்கடியாவது பாய முடியும்" - தன்னைத் தானே நொந்துகொண்டாள்.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com