சீரகம்… இதில் என்னென்ன மருத்துவப் பலன்கள் இருக்கு தெரியுமா?

 benefits of cumin
Healthy tips
Published on

மையலறையில் இருக்கும் அஞ்சறைப்பெட்டி பொருட்களே நம் ஆரோக்கியத்தை காக்கும் பெரிய காவலனாக செயல்படுகின்றன. ஒரே பொருள் பலவித நன்மைகளை உடலுக்கு தரும் என்றால் அது சீரகம்தான். அதன் சில பலன்களை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

சீரகத்தை வறுத்து பொடித்து வைத்துக்கொண்டு எந்தவித சமையலிலும் ஒரு டீஸ்பூன்போல் அன்றாடம் சேர்த்துகொள்ள சீரகத்தின் பலன் கிடைக்கும்.

சீரகம், சுக்கு, மிளகு, சித்தரத்தை அனைத்தையும் தூளாக்கி தினமும் இருவேளை இரண்டு சிட்டிகை அளவு சாப்பிட்டால் உடல் அசதி நீங்கும். த்துணர்ச்சி உண்டாகும்.

ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் தயாரித்து சாப்பிட, வயிற்று  போக்கு, நரம்பு தளர்ச்சி குணமாகும். சீரகத்தை வறுத்து அத்துடன் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வந்தால் எலும்புகள் பலமாவதுடன் நரம்பு சம்பந்தமான அனைத்து நோய்களையும் குணப்படுத்தும்.

சீரகத்துடன் மூன்று பற்கள் பூண்டு வைத்து மைய அரைத்து எ சாறு கலந்து குடித்தால் குடல் கோளாறுகள் குணமாகும். சிறிது சீரகத்துடன் 2 வெற்றிலை, நான்கு மிளகு சேர்த்து மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால் வயிற்றுப் பொருமல் நீங்கும். சீரகத்துடன் கீழாநெல்லி வைத்து அரைத்து எ சாறு கலந்து பருகி வந்தால் கல்லீரல் பிரச்னை நீங்கும்.

பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் நோய் குணமாக சீரகத்துடன் சி வெங்காயம் சேர்த்து மைய அரைத்து பசும்பாலில் கலந்து குடித்துவர நல்ல குணம் கிடைக்கும். சீரகத்தை தேயிலைத் தூளுடன் சேர்த்து கஷாயம் செய்து குடித்தால் சீதபேதி குணமாகும்.

சீரகமும், திப்பிலியும் சேர்த்து பொடித்து தேனில் குழைத்து சாப்பிட்டு வர தொடர் விக்கல் நிற்கும். மஞ்சள் வாழைப்பழத்துடன் சிறிது சீரகம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரோடு அருந்த தலைசுற்றல், மயக்கம் நீங்கிவிடும்.

அகத்தி கீரையுடன் சீரகம், சி வெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டால் ஜீரண சக்தி அதிகரிக்கும். சீரகப்பொடியை மோரில் கலந்து குடித்தால் மார்பு வலி நீங்கும். வாயுக்கோளாறுகளை நீக்கி வயிற்றுக்கு இதமளிக்கும்.

இதையும் படியுங்கள்:
பாதம் வலி உண்டாவதற்கான காரணங்களும், தீர்வும்!
 benefits of cumin

சூட்டினால் ஏற்படும் வயிற்று வலிக்கு சீரகத்தை மோரில் அரைத்து கலந்து குடிக்க சட்டென நிவாரணம் தரும். மணத்தக்காளி கீரையுடன் சீரகம், சி வெங்காயம் சேர்த்து சூப்பாக அருந்த வாய்ப்புண், வயிற்று புண் குணமாகும்.

சீரகம் பித்தத்தை தணித்து எல்லா உடல் உறுப்புக்களும் நன்கு இயங்க துணைபுரிகிறது. உடலுக்கு குளிர்ச்சியையும், தேக பளபளப்பிற்கும் சீரகம் பெரிதும் உதவுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com