
பெரும்பாலோர் குக்கரில்தான் சமைக்கிறீர்கள். இது சமையலை எளிதாக்குகிறது. நீங்கள் குளிர்காலத்தில் எரிவாயுவை சேமிக்க விரும்பினால் சமைக்கப் பயன்படுத்தும் கிண்ணங்கள் மிகவும் தடிமனாக இல்லை என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். அடிப்பகுதி கனமாக இருந்தால் சூடாக அதிகநேரம் எடுக்கும். குறிப்பாக குளிர்காலத்தில் காற்று ஈரப்பதமான இருக்கும் போது சமையலுக்கு எப்போதும் மெல்லிய பாத்திரங்கள் பயன்படுத்துவதே நல்லது.
சமைக்கும்போது கேஸ் உபயோகத்தைக் குறைக்க மூடிவைத்து சமைக்கவும். மூடிவைத்து சமைக்க விரைவில் வேகும். எரிவாயு மிச்சமாகும்.
எரிவாயுவை சேமிக்க பர்னரில் அடைப்பு மற்றும் குழாயிலிருந்து லேசாக வாயு கசிவது சாத்தியமாகும். பர்னர்களை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள் அழுக்காக இருக்கும்போது வாயு சரியாக வெளியேறாது. பர்னரிலிருந்து சிவப்பு அல்லது மஞ்சளாக சுடர் வந்தால் அதை உடனே சுத்தம் செய்யவேண்டும்.
எரிவாயுவைப் பயன்படுத்திய பிறகு ரெகுலேட்டரை அணைக்க பலர் மறந்துவிடுகிறார்கள். இந்தப் பழிக்கத்தை மாற்றுங்கள். ரெகுலேட்டரை அணைக்கவில்லை என்றால் உங்களுக்குத் தெரியாமல் சிறிய அளவிலாவது வாயு வெளியேறும் வாய்ப்பு உள்ளது.
சிலர் அடுப்பில் எதையாவது வைத்துவிட்டு துணி துவைக்க மற்றும் டி. வி.பார்க்க சென்றுவிடுவார்கள். இதனால் அதிக எரிவாயு வேஸ்ட் ஆகும். அடுப்பில் வைத்திருக்கும் பொருள் பொங்கி பர்னரில் அடைப்பு ஏற்படும். சமயலறை முடித்த பிறகே சமயலறையை விட்டு வெளியேறுங்கள்.
இன்னொரு விஷயம். நீங்கள் சிறிய பர்னரில் சமைத்தால் எரிவாயு அதிக நாட்கள் வரும்.
சமைக்கும் பொருட்களை ஊறவைத்து சமைக்க விரைவாக சமையல் முடிவதோடு எரிவாயுவும் சேமிக்கலாம்.
சிலர் அடுப்பை மூட்டிவிட்டு ஃப்ரிட்ஜ் ஜில் காய்கள் தேடுவார்கள். திட்டமிட்டு சமையலுக்கு வேண்டிய காய்கறிகளை நறுக்கிக் கொண்டும், பொருட்களை ரெடி செய்து அதன் பிறகு அடுப்பு மூட்டுங்கள். இதன் மூலமாகவும் எரிவாயுவை சேமிக்கலாம்.