பல வகையான பழங்கள் ஆரோக்கியமான தின்பண்டமாகக் கருதப்பட்டாலும் ஒருசில காம்பினேஷன்கள் உள்ள பழங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கினை ஏற்படுத்துகின்றன. ஆரோக்கிய ஆற்றலை அதிகப்படுத்தும் ப்ரூட் சாலட் அதிகப்படியான நன்மைகளைக் கொடுக்கும் என்றாலும், சில வகையான பழங்களை ஒன்றாக சாப்பிடுவது மோசமான பிரச்னையை ஏற்படுத்துவதற்கு வழிவகுக்கும். அந்த வகையில் சேர்த்து சாப்பிடக்கூடாத சில வகைப் பழங்கள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1. தர்பூசணி, முலாம் பழம் மற்றும் பிற பழங்கள்: தர்பூசணி மற்றும் முலாம் பழத்தோடு பிற எந்த பழ வகைகளையும் சேர்த்து சாப்பிட்டாலும், இதனால் செரிமான பிரச்னைகள் மற்றும் அசௌகரியம் உண்டாகும் என்பதால் இதனை தவிர்க்க வேண்டும். தர்பூசணி பழம் மற்றும் முலாம் பழத்தில் உள்ள அதிக நீர்ச்சத்து மற்றும் தனித்துவமான என்சைம்களின் காரணமாக அது பிற பழங்களுடன் இணையும்பொழுது எதிர்மறையாக வினைபுரிந்து, வயிற்று சம்பந்தப்பட்ட பிரச்னைகளை ஏற்படுத்தும் என்பதால் இவற்றோடு வேறு எந்தப் பழங்களையும் சேர்த்து சாப்பிடக் கூடாது.
2. பப்பாளி பழம் மற்றும் எலுமிச்சை பழம்: எலுமிச்சையில் உள்ள அதிக அமிலத்தன்மை பப்பாளியில் உள்ள பப்பையின் என்ற நொதியோடு வினைபுரிந்து செரிமான பிரச்னைகள் மற்றும் வயிறு அசௌகரியத்தை ஏற்படுத்துவதோடு, இந்த காம்பினேஷன் வயிற்று வலி, குமட்டல் மற்றும் பிற இரைப்பை குடல் பிரச்னைகளையும் ஏற்படுத்தும் என்பதால் பப்பாளி பழம் மற்றும் எலுமிச்சை பழத்தை சேர்த்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
3. அமிலம் நிறைந்த பழங்கள் மற்றும் இனிப்பான பழங்கள்: ஸ்ட்ராபெர்ரி, கிரேப் ஃப்ரூட், அன்னாசிப்பழம் போன்ற அமிலம் நிறைந்த பழங்களை இனிப்பான பழங்களோடு சாப்பிடுவது செரிமானத்தை சீர்குலைக்கும். அதுமட்டுமல்லாமல், பீச் அல்லது மாதுளம் போன்ற பழங்களோடு வாழைப்பழத்தை சாப்பிடுவது pH அளவை சீர்குலைத்து செரிமான பிரச்னைகளை உண்டாக்கும் என்பதால் இந்த காம்பினேஷன்களை அவசியம் தவிர்க்க வேண்டும்.
4. வாழைப்பழம் மற்றும் கொய்யாப்பழம்: வாழைப்பழத்தோடு கொய்யா பழங்களை சாப்பிடுவது மிகவும் மோசமான ஒரு காம்பினேஷன் என்பதால் இதனை கட்டாயமாகத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், வாழைப்பழத்தில் உள்ள அதிக அளவு புரோட்டின் மற்றும் நார்ச்சத்து கொய்யாப்பழத்தில் உள்ள வைட்டமின் C மற்றும் அமிலத்துடன் வினைபுரிந்து செரிமான அசௌகரியத்தையும், வயிற்று வலி, வயிற்று உப்புசம் மற்றும் வாயு தொல்லையை உண்டாக்கும் என்பதால் கொய்யாப் பழத்தோடு வாழைப் பழத்தை கண்டிப்பாக சாப்பிடக் கூடாது.
5. ஆரஞ்சு பழங்கள் மற்றும் கேரட்: ஆரஞ்சு பழங்களில் உள்ள அதிக வைட்டமின் C கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் உறிஞ்சப்படுவதில் சிக்கலை ஏற்படுத்துவதோடு இந்த காம்பினேஷன் செரிமான அசௌகரியம் மற்றும் வயிற்று வலியையும் உண்டாக்கும். ஆகவே ஆரஞ்சு பழங்களோடு கேரட் சாப்பிடுவதை தவிர்ப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை அளிக்கக் கூடியதாகும்.
மேற்கூறிய 5 வகை காம்பினேஷன் பழங்களும் பொருத்தமற்றவை என்பதால் பழங்கள் சாப்பிடும்போது இவற்றை நினைவில் வைத்து சாப்பிட வேண்டும்.