தீமையை நன்மையாக்கிய இந்தியன்! என்ன நன்மை? யார் இவர்?

Gaurav
Gaurav

உங்களில் பல பேர் ஆகாய தாமரைகளை பார்த்திருப்பீர்கள். இது பொதுவாக வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல பகுதிகளில் வளரக்கூடிய, தென் அமெரிக்காவிற்கு சொந்தமான ஒரு நீர்வாழ் தாவரமாகும். நம் இந்தியாவில் இந்த தாவரத்தை "வங்காளத்தின் பயங்கரவாதம்" என்று அழைக்கிறார்கள்.

இதன் இயல்புகள்:

  • ஆகாய தாமரை மிதக்கும் நீர்வாழ் தாவரமாகும். அதன் பளபளப்பான, கரும் பச்சை இலைகள் அகலமாகவும், அடர்த்தியாகவும், முட்டை வடிவமாகவும் இருக்கும்.

  • இந்த இலைகள் நீர் மேற்பரப்பில் இருந்து 1 மீட்டர் (3 அடி) வரை கீழ்நோக்கி வளரும் .

  • அதன் அடிப்பகுதியில் மிதக்கும் குமிழ் போன்ற முடிச்சுகளைக் கொண்டுள்ளதால், இயல்பாகவே தண்ணீரில் மிதக்க தன்மை பெற்றவை.

  • ஒவ்வொரு தாவரமும் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான விதைகளை உற்பத்தி செய்யக்கூடியவை, இந்த விதைகள் 28 ஆண்டுகள் ஆனால் கூட எந்தவித பிரச்சனையுமின்றி நிலைத்திருக்கும்.

  • தாவர எண்ணிக்கையைப் பொறுத்தவரை, அவை வெறும் 23 நாட்களில் நூறு மடங்குக்கு மேல் பெருகும்.

  • வேறு வேறு நீர்நிலைகளுக்கு மகரந்தச் சேர்க்கை(pollinate) மூலம் பரவி,பெருகி நீர் மேற்பரப்பில் காடுபோல் வளர்கின்றன.

Gaurav
GauravImg Credit: The better india

இதன் தீமைகள்:

  • ஆகாய தாமரைகள் இயற்கை வாழ்விடங்களை சீர்குலைப்பதன் மூலம் சுற்றுச்சூழல் அமைப்புகளை மாற்றுகின்றன. இது பூர்வீக நீர்வாழ் தாவரங்களின் இன பெருக்கத்தையும் குறைக்கிறது.

  • இதன் அடர்த்தியான கிளைகள் நீரை தேக்க நிலையில் வைப்பதால், இ ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு மீன்கள் இறந்துபோகின்றன.

  • இவற்றின் பெருக்கத்தால் நீர்நிலை தேக்கம் அடைவதால் கொசுக்களின் இனப்பெருக்கம் செய்யும் இடமாகவும் மாறுகிறது. இதனால் மலேரியா மற்றும் டெங்கு போன்ற நோய்களின் அபாயம் அதிகரிக்கிறது.

  • நீர்வழிகளை அடைத்து கூட்டமாக வளர்வதால், கப்பல் போக்குவரத்து, மீன்பிடித்தல் மற்றும் சுற்றுலாத் தொழில்களை பாதிக்கிறது.

தீமையை நன்மையாகிய இந்தியன்:

இந்தியாவில், ஆகாய தாமரைகள் பாரம்பரியமாக பாய்கள், காகிதம் மற்றும் பிற கைவினைப்பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப்படுகின்றன.

இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் பொறியாளர் கௌரவ் ஆனந்த், தனது புத்திசாலிதனத்தால் வேறவொரு புது முயற்சியாக இந்த ஆகாய தாமரையை பயனுள்ள மூலப்பொருளாக மாற்றியுள்ளார்.

  • TATA Steel உடன் பணிபுரியும் போது, நதியை சுத்தம் செய்கையில், நீர் முழுக்க ஆகாய தாமரைகள் ஏராளமாக இருப்பதை கௌரவ் ஆனந்த் கவனித்தார்.

  • இதன் தீமையை அறிந்த அவர், இந்த நிலைமையை முற்றிலுமாக மாற்ற தன் வேலையையும் பொருட்படுத்தாமல் கைவிட்டார்.

  • இதை முழுநேர பிரச்சனையாக கருதி அவர் ஸ்வச்சதா புகாரே அறக்கட்டளையை(Swacchata Pukare Foundation) நிறுவினார்.

  • அப்படி என்ன புதுமையான முயற்சி? ஆகாயத்தாமரை டு அசத்தல் ஆடை.

இதையும் படியுங்கள்:
அசுர வளர்ச்சியை நோக்கி மகளிர் கால்பந்து அணி!
Gaurav
  • ஆகாய தாமரைகளில் இருந்து நார்களைப் பிரித்தெடுத்து ஃப்யூஷன் புடவைகளை உருவாக்குவது என்பது கௌரவின் அற்புதமான யோசனை. இந்த யோசனையை செயல்முறைப்படுத்த முழுமூச்சாக களம் இறங்கினார் கௌரவ்.

  • ஒவ்வொரு சேலைக்கும் தோராயமாக 25 கிலோ ஆகாய தாமரைகள் தேவைப்படுகிறது.

  • இந்த செயல்முறையானது நார்களைப் பிரித்தெடுத்தல், அவற்றை நூலாக சுழற்றுவது, வண்ணம் தீட்டுதல் மற்றும் தனித்துவமான கைத்தறி புடவைகளாக மாற்றி நெசவு செய்தல் போன்ற படிப்படியான பணிகளை கொண்டது.

  • கௌரவின் இந்த முயற்சி ஆகாய தாமரையால் ஏற்படும் சுற்றுச்சூழல் சவாலை நிவர்த்தி செய்வது மட்டுமல்லாமல் பெண்களுக்கும் பலன் அளிக்கிறது.

  • சுமார் 450 பெண்கள் இந்த ஃப்யூஷன் புடவைகளை தயாரிப்பதில் ஈடுபட்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு பங்களித்து வாழ்வாதாரத்தை ஈட்டுகின்றனர்.

  • ஒரு தொல்லையை மதிப்புமிக்க தயாரிப்பாக மாற்றுவதன் மூலம், மக்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஒரு வெற்றி சூழ்நிலையை கௌரவ் உருவாக்கியுள்ளார் என்பது பெருமித்துக்குரிய விஷயம்தானே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com