
உடல் நலம் நன்றாக இருந்தால் பணிக்கு செல்லும் கர்ப்பிணி பெண்கள் பலர் உள்ளனர். அவர்கள் உடல் நலத்தை எல்லா விதத்திலும் பாதுகாத்துக்கொள்ள வேண்டியது அவசியம். உடலை வருத்திக்கொள்ளாமல் ரிலாக்ஸ்டாக இருப்பது அவசியம்.
பணி செய்யும் இடம் பாதுகாப்பாகவும், காற்றோட்டமாகவும் இருத்தல் அவசியம்.
அலுவலகம் நீண்ட தூரத்தில் இருந்து பஸ் மாறி போதல், இரவில் தாமதமாக வர நேர்ந்தால் தயக்கமின்றி அலுவலகத்தின் அருகில் வீடெடுத்து தங்கலாம். அல்லது பணிக்கு தற்காலிக விடுப்பு எடுத்துக்கொள்வது நல்லது.
சிசுவின் வளர்ச்சி, தாயின் பாதுகாப்பைவிட வேலை பெரிதல்ல. மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகள் எடுப்பதும், சுயமாக மருந்துகள் எடுத்துக் கொள்வதையும் தவிர்க்க வேண்டும்.
வேலைக்கு போகும் அவசரத்தில் காலை உணவை தவிர்ப்பது, மாடி ஏறி அலுவலகம் செல்வது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
பேருந்திலோ, அலுவலகத்திலோ அதிக நேரம் நின்று கொண்டிருப்பதை தவிர்க்க வேண்டும். காலை தொங்கவிடாமல் அவ்வப்போது எழுந்து சிறிது நடந்துகொள்ள கால் வீக்கம், முதுகுவலி, இடுப்பு வலி வராது.
சிறுநீர் வந்தால் அடக்காமல் சென்று வருவது, தண்ணீர் அருந்துவது, ஜீஸ், சூப் போன்றவற்றை எடுத்துக்கொள்வது என பழகிக்கொள்ள உடல் சோர்வு ஏற்படாது.
இறுக்கமான ஜீன்ஸ் பேண்ட் போன்றவற்றை தவிர்த்து காற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணிவது அவசியம்.
காபி, டீ அருந்தினால் குழந்தைக்கு ஆகாது என்பதால் சத்துள்ள தாக ஸ்மூதி, கஞ்சி அல்லது ஹார்லிக்ஸ் போன்ற பானங்களை அருந்திக்கொள்ள புத்துணர்ச்சியாக இருக்கும்.
க்ரீன் டீ, டயட் என இந்த காலகட்டத்தில் உடலை வருத்தி கொள்ளக் கூடாது. எக்ஸர்சைஸ், யோகா போன்றவற்றை சரியான ஆலோசகர் முன் செய்யவேண்டும்.
கீரைகள், காய்கறிகள், பழங்கள், சமச்சீரான உணவு என கர்ப்பிணிகள் எடுத்துக்கொள்ள இருவரது உடல்நிலையும், வளர்ச்சியும் நன்றாக இருக்கும்.
அலுவலகத்தில் உட்கார்ந்து வேலை செய்வதால் மலச்சிக்கல் ஏற்பட்டால் மருத்துவ ஆலோசனையோடு, காய்கள், பழங்களை சாறாகவோ, சூப்பாகவோ சாப்பிட்டு கொள்ள மலச்சிக்கல் வராது.
வாந்தி உணர்வு ஏற்படுகிறது, சாப்பிட முடியவில்லை என உணவை தவிர்க்காமல் உடலுக்கு சேருவதை தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும்.
குதி உயர்ந்த செருப்பை முற்றிலும் தவிர்க்க வேண்டும். டைல்ஸ் தரை, பாத்ரூம் தரைகளில் பார்த்து நடக்க பாதுகாப்பாக இருக்கும்.
டூ வீலரில் செல்வதை தவிர்க்கலாம். முடியாத பட்சத்தில் நல்ல பாதை உள்ள சாலைகளையே குறைவான வேகத்தில் பயன்படுத்திட பாதுகாப்பாக இருக்கும்.
எந்தவொரு அசௌகரியமும், உடல்நலக் குறைவும் சிசுவை பாதிக்கும் என்பதால் எல்லா நேரங்களிலும் கவனமாக இருத்தல் அவசியம்.
தடுப்பூசியோ, ஸ்கேன் போன்றவையோ எதையும் மருத்துவர் ஆலோசனைப்படிதான் செய்யவேண்டும்.