நலம் காக்கும் நல்லெண்ணெய்!

நலம் காக்கும் நல்லெண்ணெய்!

ல்லெண்ணெயில் விட்டமின் ஈ சத்து அதிகம் உள்ளதால் மிகச்சிறந்த ஆன்டி ஆக்சிடென்ட் ஆக செயல்படுகிறது. வாரத்திற்கு ஒரு முறையாவது தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்துக் குளித்தால் உடல் சூடு குறையும். தலைமுடி வறட்சி நீங்கும். பொடுகு முற்றிலும் நீங்கும்.

ல்லெண்ணெயில் போலேட் எனப்படும் கூட்டு வேதிப்பொருள் அதிகளவில் உள்ளது. மேலும் மக்னீசியச் சத்தும் நல்லெண்ணெயில் தேவைக்கு அதிகமான அளவிலேயே இருக்கின்றன. இந்த இரண்டு சத்துக்களும் குடல் மற்றும் ஈரல் பகுதிகளில் உண்டாகக்கூடிய புற்றுநோய்களை தடுப்பதில் பேருதவி புரிகிறது.

ல்லெண்ணெயை தினமும் இரவில் படுக்கும் முன் உதட்டில் தடவி வந்தால், உதடுகள் மென்மையாகவும், பிங்க் நிறத்திலும் இருக்கும்.

ல்லெண்ணெயில் நிறைந்துள்ள ஜிங்க் சத்து, சருமத்தின் நெகிழ்வுத் தன்மையை அதிகரித்து, சருமத்தில் கொலாஜெனின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். அதிலும் கர்ப்பிணிகள் நல்லெண்ணெயைக் கொண்டு, வயிற்றில் மசாஜ் செய்தால், ஸ்ட்ரெட்ச் மார்க் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

ல்லெண்ணெயில் இருக்கும் மக்னீசியம், இரத்த அழுத்தத்தைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். அதிலும் நீரிழிவு நோயாளிகளுக்கு, உயர் இரத்த அழுத்தம் இருந்தால், அவர்கள் நல்லெண்ணெயை சாப்பிட்டு வர நல்ல பலனைத் தரும்.

தினமும் காலையில் எழுந்து நல்லெண்ணெயால் வாயை கொப்பளித்தால், பற்களில் தங்கியிருக்கும் சொத்தைகள் நீங்குவதோடு, பற்கள் நன்கு பளிச்சென்று ஆரோக்கியமாக இருக்கும்.

ல்லெண்ணெயில் ஆன்டி-ஸ்பாஸ்மோடிக் நிறைந்தி ருப்பதால், சுவாசப் பாதையில் ஏற்படும் பிடிப்புகள் நீங்கி, சரியான முறையில் சுவாசிக்கும் வகையில் உதவியாக இருக்கும். ஆஸ்துமா நோயாளிகள், இதனை அதிகம் உணவில் சேர்ப்பது நல்லது.

ல்லெண்ணெயை ரோஸ் வாட்டருடன் சேர்த்து குதிகால் வெடிப்பை சரி செய்யலாம். அதற்கு நல்லெண்ணெய் மற்றும் ரோஸ் வாட்டரை சரிசம அளவில் கலந்து, தினமும் இரவில் படுக்கும் முன் குதிகாலில் தடவுங்கள். மறுநாள் காலையில், காலை வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள். இதனால் விரைவில் குதிகால் வெடிப்பு நீங்கும்.

ங்கள் கண்கள் சோர்வடைந்து, கருவளையங்களுடன் காணப்படுகிறதா? இதை நல்லெண்ணெய் கொண்டு சரிசெய்யலாம். அதற்கு நல்லெண்ணெயை ப்ரிட்ஜில் வைத்து குளிர செய்து, பஞ்சுருண்டைப் பயன்படுத்தி, கண்களின் மீது தடவ வேண்டும். இப்படி செய்தால், வீங்கிய கண்களின் வீக்கம் குறைவதோடு, கருவளையங்களும் நீங்கிவிடும்.

ர்தரைட்டிஸ் எனப்படும் மூட்டுவலி நோய்களால் அவதிப்படுபவர்கள், அடிக்கடி நல்லெண்ணெய் கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் மூட்டு வலி மற்றும் வீக்கங்கள் குறைவதை அனுபவபூர்வமாக உணர முடியும்.

குழந்தைகளுக்கு நல்லெண்ணெய் கொண்டு தயாரிக்கப் பட்ட உணவுகளை கொடுப்பதால் அவர்களின் எலும்பு களின் வளர்ச்சி அதிகரிப்பதோடு வலிமையும் அதிகரிக்கிறது.

சிலருக்கு அதிக உஷ்ணத்தால் அடி வயிறு வலி, சிறுநீர் பிரிவதில் சிரமம் ஏற்படும். அவர்கள் அடி வயிற்றுப் பகுதியில் எண்ணெயை தேய்த்தால் நிவாரணம்  கிடைக்கும்.

லுமிச்சை பழம் நான்கு அல்லது ஐந்து எடுத்து வெட்டி அதை நல்லெண்ணெயில் காய்ச்சி, சுளுக்கு அல்லது வீக்கம் உள்ள இடத்தில் மசாஜ் செய்து வந்தால் சுளுக்கு வீக்கம் சரியாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com