பூஜை அறையில் சாமி படங்கள் எதைப் பார்த்தபடி இருக்க வேண்டும்? பலரும் செய்யும் பெரிய தவறு!

Vastu tips
Vastu tips
Published on
Mangayar malar strip
Mangayar malar strip

பிரதான நுழைவாயிலின் கீழே நிலத்தடி நீர், கழிவுத் தொட்டி, கால்வாய் இருக்கக் கூடாது. பிரதான நுழைவாயில் முன்னால் இடிந்த கட்டடங்கள் எதுவும் இருக்கக் கூடாது. பிரதான வாயிலுக்கு முன்னால் குப்பைகளை அகற்றுதல், தெருவிளக்குகள் கம்பம்  அல்லது கற்பாறைகள் தவிர்க்கவும். 

வீட்டின் நுழைவாயிலை கடவுள் படங்கள் அல்லது சிலைகளால் அலங்கரிப்பது நல்லது. மோசமான படங்கள் வாசலில் இருக்கக் கூடாது. காலணிகளை கதவுக்கு முன்னால் வைக்கக் கூடாது. பக்கவாட்டில் வைக்க வேண்டும். கதவு சாய்வாகவோ, வட்டமாகவோ இருக்கக் கூடாது.

பால்கனிகள் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி இருக்கவேண்டும். தெற்கு மேற்கு கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டும். 

சமயலறை வீட்டின் தென் கிழக்கு மூலையில் அமைந்திருக்க வேண்டும். சமையல் மேடை கிழக்கு நோக்கி மட்டுமே அமைக்கப்பட வேண்டும்.

சமயலறை பிரதான கதவுக்கு நேரே அமையக்கூடாது.

கண்ணாடிகள், தொட்டிகள் மற்றும் குழாய்கள் வடக்கு கிழக்கு பகுதிகளில் இருக்கவேண்டும். 

பூஜை அறை வடகிழக்கிலோ அல்லது  மத்தியப் பகுதியிலோ அமைக்க வைண்டும்.

பூஜை அறையில் மேற்கு நோக்கியவாறு கடவுள் படங்கள் இருக்க வேணடும்.

க்ரைண்டர், ஃப்ரிட்ஜ் போன்றவற்றை சமயலறை தெற்கு மேற்கு பகுதிகளில் வைக்க வேண்டும். 

இதையும் படியுங்கள்:
இந்தியாவிற்கே முன்னோடித் திட்டம்.! தமிழக ஊர்க்காவல் படையில் 50 திருநங்கைகள் சேர்ப்பு..!
Vastu tips

மாஸ்டர் படுக்கையறை தென்மேற்கு மூலையில் இருக்கவேண்டும். 

வடமேற்கில் விருந்தினர் அறை இருக்கலாம்.

டி.வி. மற்றும் கணிணி தென்கிழக்கு மூலையில் இருக்க வேண்டும்

கழிவறைகள் வடமேற்கு மூலையில் அமைக்கப்பட வேண்டும்.

- இந்திரா கோபாலன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com