சலூன் துறையில் புதிய புரட்சி! தரம், வேகம், பாதுகாப்பு - அடையாறு நேச்சுரல்ஸ் கிளை மேலாளருடன் ஒரு சிறப்பு நேர்காணல்!
இந்தியாவின் முதன்மை சலூன் பிராண்டான Naturals, இன்று லட்சக்கணக்கானோரின் அழகுக் கனவுகளை நனவாக்கி வருகிறது. அந்தப் பெருமைமிக்க பயணத்தில், தரம் மற்றும் தூய்மையை முதன்மையாகக் கொண்டு சென்னை அடையாறு இந்திரா நகர் கிளை (Naturals Indira Nagar Branch) மிகச்சிறப்பாக இயங்கி வருகிறது.
இக்கிளையின் உரிமையாளர் சங்கர் அவர்கள், இல்லத்தரசிகள் முதல் ஐடி ஊழியர்கள் வரை அனைத்துத் தரப்பினருக்கும் ஏற்ற வகையில், உயர்தரச் சேவைகளை மிகச் சரியான பட்ஜெட்டில் வழங்கி வருகிறார்.
வெறும் அழகு நிலையம் என்பதையும் தாண்டி, ஒரு குடும்பமாக வாடிக்கையாளர்களுக்கு சேவை புரிகிறார்.
இந்த நேர்காணலில், பட்ஜெட் பேக்கேஜ்கள், நவீன சேவைகள் மற்றும் வேலைவாய்ப்பு குறித்த சுவாரஸ்யமான தகவல்களைக் பகிர்ந்து கொள்கிறார்.
Naturals என்றால் என்ன? அதன் உரிமம் (Franchisee) பெறுவது எப்படி?
2000ல் சி.கே. குமரவேல் மற்றும் வீணா குமரவேல் ஆகியோரால் தொடங்கப்பட்ட Naturals, இன்று இந்தியாவின் முன்னணி 'பேமிலி சலூன்' பிராண்டாகும். 2004-05 முதல் கிளைகளை (Franchise) விரிவுபடுத்திய இந்நிறுவனம், சுமார் 6 லட்ச ரூபாய் பிராண்ட் கட்டணத்தில் தொழில் தொடங்க வழிவகை செய்கிறது. கடையின் உள் அலங்காரம் முதல் அரசுச் சான்றிதழ்கள் வரை நிறுவனம் முழுமையாக வழிகாட்டுகிறது. மேலும், மும்பை வல்லுநர்கள் மூலம் ஊழியர்களுக்கு உயர்தரப் பயிற்சியும் வழங்கப்பட்டு, இல்லத்தரசிகளையும் சாமானியர்களையும் வெற்றிகரமான தொழில்முனைவோராக இது மாற்றுகிறது.
சிறப்பு சேவைகள் (Special Services) என்னென்ன?
நேச்சுரல்ஸ் நான்கு முக்கியப் பிரிவுகளில் சிறந்து விளங்குகிறது: தலைமுடி பராமரிப்பில் (hair care) கெரட்டின் போன்ற நவீன நுட்பங்கள், சருமப் பராமரிப்பில் (skin care) பிரபலமான ஹைட்ரா ஃபேஷியல், மணமக்களுக்கான பிரத்யேக (bridal) அலங்காரம் மற்றும் மன அழுத்தத்தைப் போக்கும் ரிஃப்ளெக்சாலஜி (Reflexology) சிகிச்சை. காலத்திற்கேற்ற மாற்றங்களுடன், தரம் மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய இந்த 4 சேவைகள் வாடிக்கையாளர்களுக்குப் புத்துணர்ச்சியையும் முழுமையான திருப்தியையும் அளிக்கின்றன.
உங்கள் மனைவியும் இந்தத் துறையில் உங்களுடன் இருக்கிறார்கள். அவர்களுடைய தனித்தன்மை என்ன ?
என் மனைவி சுமன் ஜோஷி, 2005 முதல் 'நேச்சுரல்ஸ்' நிறுவனத்தில் உள்ளார். 30 ஆண்டுகால அனுபவம் கொண்ட அவர், அடிமட்டத்திலிருந்து உயர்ந்து மேக்கப் மற்றும் ஹேர் சர்வீஸ்களில் நிபுணத்துவம் பெற்றவர். ஆண்களுக்கான ஹேர்கட் முதல் சருமப் பராமரிப்பு வரை அனைத்தையும் கற்றுத் தருவதோடு, இன்றும் புதிய நுட்பங்களைக் கற்க ஆர்வம் காட்டுகிறார். எங்களின் இந்த ஒருமித்தப் பயணம் இத்துறையில் பெரும் பலமாகும்.
நடுத்தரக் குடும்பத்தினர் தங்கள் பட்ஜெட்டுக்குள் அடங்கும் வகையில் உங்களுடைய ‘இந்திரா நகர் கிளை’யில் என்னென்ன சிறப்பான பேக்கேஜ்கள் (Budget Packages) வைத்துள்ளீர்கள்?
பொதுவான விலைப்பட்டியல் இருந்தாலும், தனித்தனியாகச் சேவைகளைத் தேர்ந்தெடுக்கும்போது செலவு அதிகமாகும். எனவே, ஹேர்கட், ஹேர் ஸ்பா, வேக்சிங் போன்றவற்றை ஒருங்கிணைத்துச் சிறப்புத் தள்ளுபடியுடன் கூடிய பேக்கேஜ்களை வழங்குகிறோம். இது பணத்தைச் சேமிக்க உதவுவதுடன், மெனிக்யூர், பெடிக்யூர் போன்ற புதிய சேவைகளை முதன்முறை அனுபவிக்க விரும்புவோருக்கும் மிகச் சிறந்த வாய்ப்பாகும்.
திருமண சீசன் வந்துவிட்டாலே செலவு அதிகமாகும். ஒரு மணமகன் அல்லது மணமகள் மிகக் குறைந்த செலவில், அதே சமயம் நேர்த்தியாகத் தெரிய, உங்கள் கிளையில் என்னென்ன ஸ்பெஷல் மேக்கப் திட்டங்கள் உள்ளன?
மணமகன் மற்றும் மணமகளுக்கெனத் தனித்தனி பேக்கேஜ்கள் எங்களிடம் உள்ளன. குறிப்பாக, முதன்முறையாக ஃபேஷியல் செய்யும் மணமகன்களின் சருமத்தைப் பராமரிக்க சில்வர் மற்றும் கோல்டு பேக்கேஜ்கள் வழங்குகிறோம். இதில் உயர்தர ஃபேஷியல், மெனிக்யூர், பெடிக்யூர் மூலம் திருமணத்திற்கு முன்பே சருமத்தைத் தயார் செய்கிறோம். மணமக்கள் இருவருக்கும் சேர்த்து முன்பதிவு செய்தால் சிறப்புத் தள்ளுபடி உண்டு. மேலும், திருமண இடத்திற்கே நேரில் வந்து அலங்காரம் செய்யும் (On-site Makeup) வசதியும் எங்களிடம் உள்ளது.
வெயிலினாலும், சென்னையின் உப்புத் தண்ணீரினாலும் பலருக்கும் முடி கொட்டுதல் மற்றும் முகம் கருமையாதல் போன்ற பிரச்னைகள் உள்ளன. இதற்கு நிரந்தரத் தீர்வாக நீங்கள் தரும் 'ஸ்பெஷல் ட்ரீட்மென்ட்' என்ன?
அழகுச் சிகிச்சைகள் வெளிப்புறப் பாதுகாப்பையே தரும்; நிரந்தரத் தீர்வு உங்கள் வாழ்க்கை முறையில் உள்ளது. உப்புத் தண்ணீர் பயன்பாட்டைக் குறைத்து, போதுமான நீர் அருந்துதல், ஆரோக்கியமான உணவு, சரியான ஓய்வு மற்றும் எண்ணெய் உணவுகளைத் தவிர்ப்பது அவசியம். நாங்கள் வழங்கும் சிகிச்சைகளும் தரமான தயாரிப்புகளும் உங்கள் சருமத்தையும் முடியையும் பாதுகாக்க உதவும். ஆரோக்கியமான வாழ்க்கை முறையே உண்மையானத் தீர்வு.
பெரியவர்கள் மட்டுமில்லாமல், குழந்தைகளுக்கு ஹேர் கட் செய்யவும், முதியவர்களுக்குப் பாத மசாஜ் (Leg Massage) செய்யவும் உங்கள் கிளையில் என்னென்ன தனிப்பட்ட வசதிகள் உள்ளன?
எங்களது சலூனில் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு எனத் தனித்தனியாக ஹேர் கட் செய்கிறோம். குறிப்பாகக் குழந்தைகளைக் கையாள்வது சற்று சவாலானது என்பதால், அவர்களுக்கு என்றே தனித்துவமான ஒரு பகுதியை (Separate Area) ஒதுக்கி வசதிகள் செய்துள்ளோம்.
அடுத்ததாக, பாத மசாஜ் என்பது முதியவர்களுக்கு மட்டுமல்ல, விளையாட்டு வீரர்கள், நீண்ட நேரம் நின்று அல்லது உட்கார்ந்து வேலை பார்ப்பவர்கள் என அனைவருக்கும் ஏற்றது. இதற்காக நாங்கள் 'ரிஃப்ளெக்சாலஜி' (Reflexology) எனும் சீன முறையிலான சிறப்பு மசாஜ் சேவையை வழங்குகிறோம். உடலில் உள்ள அனைத்து நரம்புகளும் பாதங்களில் முடிவடைவதால், அங்கு அழுத்தப் புள்ளிகளைத் தூண்டுவதன் மூலம் ரத்த ஓட்டம் சீராகி உடல் வலி குறையும். இதற்காக ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனி இட வசதிகள் எங்களிடம் உள்ளன.
உங்கள் சலூனில் வாடிக்கையாளர்களின் சருமப் பாதுகாப்பிற்கு (Skin Safety) நீங்கள் பயன்படுத்தும் பொருட்கள் எவ்வளவு பாதுகாப்பானது?
இங்கு பெரும்பாலான பொருட்களில் இயற்கையான மூலப்பொருட்களே அதிகம் உள்ளன. ஒரு பொருளைப் பாதுகாத்து வைப்பதற்காக (Preservatives) மட்டுமே மிகக் குறைந்த அளவு கெமிக்கல்கள் பயன்படுத்தப்படுகின்றன. நாங்கள் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட டாப் பிராண்டுகளை (Top Brands) மட்டுமே பயன்படுத்துகிறோம்.
உதாரணத்திற்கு, சுருட்டை முடியை நேராக்க (Hair Straightening) வேண்டும் என்றால் அங்கு அறிவியலும் கெமிக்கலும் தேவைப்படுகிறது. ஆனால், எங்களது ஊழியர்களுக்கு எந்தப் பொருளைச் சருமத்தில் படச் செய்யலாம், எதை மயிர்க்கால்களுக்கு (Scalp) சற்று இடைவெளி விட்டுப் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்த முறையான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. உங்கள் சருமமும் கூந்தலும் எந்த அளவிற்கு ஏற்குமோ அந்த அளவிற்குப் பாதுகாப்பான தரமான பொருட்களை மட்டுமே நாங்கள் பயன்படுத்துகிறோம்.
ஐடி (IT) ஊழியர்கள் மற்றும் வேலைக்குச் செல்லும் பெண்கள் நேரமில்லாமல் தவிக்கிறார்கள். அவர்களுக்கு மிக விரைவாகவும், அதே சமயம் நேர்த்தியாகவும் செய்து முடிக்கக்கூடிய 'குவிக் சர்வீஸ்' (Quick Services) ஏதேனும் உண்டா?
பொதுவாக சலூன் என்பது மக்கள் மன அமைதியுடன் ரிலாக்ஸ் செய்ய வரும் இடமாகும். கெமிக்கல் சேவைகள் அல்லது ஹேர் ஸ்பா (Hair Spa) போன்றவற்றிற்கு என்று ஒரு குறிப்பிட்ட கால அளவு (Processing Time) உண்டு. அதை விடக் குறைவாகச் செய்தால் சரியான பலன் கிடைக்காது.
இருப்பினும், அவசரத் தேவைகளுக்காக வரும் வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் ஆட்களை அதிகப்படுத்தி வேலையை விரைவுபடுத்துகிறோம். உதாரணமாக, ஒருவருக்கு நான்கு மணி நேரம் ஆகும் வேலையை, மூன்று நிபுணர்கள் இணைந்து செய்வதன் மூலம் நேரத்தைக் குறைக்கிறோம். ஆனாலும், தரத்தில் சமரசம் செய்யாமல் அந்தப் பொருட்களுக்கான முறையான கால அவகாசத்தைக் கொடுத்து நேர்த்தியாகச் செய்து முடிக்கிறோம்.
இப்போதெல்லாம் ஹைட்ரா ஃபேஷியல் (Hydra Facial) போன்ற நவீன சிகிச்சைகள் பிரபலமாக உள்ளன. இதை ஏன் செய்துகொள்ள வேண்டும்? இதனால் அவர்களுக்குக் கிடைக்கும் உடனடி மாற்றம் என்ன?
முன்பெல்லாம் ஃபேஷியல் என்றாலே கைகளால் மசாஜ் செய்வதுதான் (Manual Massage) வழக்கமாக இருந்தது. ஆனால், இப்போது தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. ஹைட்ரா ஃபேஷியல் என்பது ஒரு மெஷின் மூலம் செய்யப்படும் சிகிச்சை. இதில் தண்ணீர் மற்றும் சீரம் (Serum) பயன்படுத்தப்படுகிறது. இது சருமத்தின் ஆழமான அடுக்குகளுக்குச் சென்று அழுக்குகளை நீக்குகிறது.
ஏன் இதைச் செய்ய வேண்டும் என்றால், இன்றைய காலகட்டத்தில் மாசு மற்றும் தூசு அதிகம். ஹைட்ரா ஃபேஷியல் செய்த உடனே உங்கள் முகம் மிகவும் பொலிவாகவும் (Glow), புத்துணர்ச்சியாகவும் மாறுவதை நீங்கள் கண்கூடாகப் பார்க்கலாம். திருமணங்கள் அல்லது விசேஷங்களுக்குச் செல்பவர்களுக்கு இது ஒரு உடனடி மாற்றத்தைத் தரும் சிறந்த சிகிச்சையாகும்.
மற்ற சலூன்களுக்குப் போவதற்கும், உங்கள் Adyar நேச்சுரல்ஸ் கிளைக்கு வருவதற்கும் உள்ள அந்த ஒரு முக்கிய வித்தியாசம் (Unique Point) என்ன?
எங்கள் கிளையின் மிக முக்கியமான தனித்துவமான 'சுகாதாரம்' (Hygiene) தான். நாங்கள் பயன்படுத்தும் துண்டுகள் (Towels) முதல் அனைத்தும் முறையாகத் துவைக்கப்பட்டு, உலர வைக்கப்பட்டு, மிகத் தூய்மையாகப் பராமரிக்கப்படுகின்றன.
அடுத்ததாக, எங்களது 'வாடிக்கையாளர் சேவை' (Customer Service). ஒரு வாடிக்கையாளர் உள்ளே நுழைந்தது முதல் வெளியே செல்லும் வரை அவருக்குத் தேவையான அனைத்து வசதிகளையும், மரியாதையையும் எங்களது ஊழியர்கள் மிகச் சிறப்பாக வழங்குவார்கள்.
தரமான பொருட்கள் மற்றும் நேர்த்தியான சேவை என அனைத்திலும் நாங்கள் ஒரு படி மேலே இருக்கிறோம்.
உங்களிடம் இருக்கும் 'கஸ்டமர் ஃபர்ஸ்ட் கார்டு' (Customer First Card) மூலம் ஒரு குடும்பமே எப்படி லாபம் அடைய முடியும்? இதனால் சாதாரண மக்களுக்கு எவ்வளவு பணம் மிச்சமாகும்?
இந்த 'Customer First Card' என்பது சாதாரண மக்களுக்கு ஒரு வரப்பிரசாதம். இதன் சிறப்பம்சமே, இந்த ஒரு கார்டை வைத்து ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரும் (அப்பா, அம்மா, குழந்தைகள்) சேவைகளைப் பெற முடியும். உதாரணமாக, ஒரு குடும்பம் மாதம் ரூ.2,000 ரூபாய் என்று 10 மாதம் செலுத்த வேண்டும் (EMI Option) அல்லது மொத்தமாகவும் ரூ.20,000 செலுத்தலாம். பணம் செலுத்தி இந்தத் திட்டத்தில் நீங்கள் இணைத்துவிட்டால் அந்த 1 வருடம் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் அந்தக் கார்டை பயன்படுத்தி ரூ.30,000 மதிப்புள்ள சேவைகளைப் பெற முடியும். மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால் இது அனைத்து Naturals கிளைகளிலும் செல்லுபடியாகும். இதன் மூலம் ஒரு குடும்பம் வருடத்திற்கு சுமார் ரூ.10,000 வரை தாராளமாக மிச்சப்படுத்த முடியும்.
வேலை வாய்ப்புகள்
எங்களது அடையாறு கிளையில் வேலை வாய்ப்புகள் எப்போதும் உள்ளன. இது குறித்து நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்:
நேச்சுரல்ஸ் அகாடமி: எங்களிடம் 'நேச்சுரல்ஸ் பியூட்டி அகாடமி' (Naturals Beauty Academy) என்ற பயிற்சி மையம் உள்ளது. இந்தியா முழுவதும் சுமார் 100 கிளைகள் உள்ளன. இங்கு ஸ்கின், ஹேர், மேக்கப் எனத் தனித்தனியான கோர்ஸ்கள் உள்ளன.
பணியாளர் நிலைகள் (L1, L2, L3): எங்களிடம் ஊழியர்கள் மூன்று நிலைகளாகப் பிரிக்கப்படுகிறார்கள்:
L1: பெடிகியூர், மெனிகியூர் மற்றும் ஹெட் மசாஜ் போன்ற அடிப்படை சேவைகளைச் செய்பவர்கள்.
L2: அடிப்படை சேவைகளுடன் ஃபேஷியல் மற்றும் சாதாரண ஹேர் கட் (U-cut, Straight cut) செய்பவர்கள்.
L3: இவர்கள் மூத்த நிபுணர்கள். கெமிக்கல் சர்வீஸ்கள், மேக்கப் மற்றும் உயர்தர ஃபேஷியல்களை இவர்களே செய்வார்கள்.
புதியவர்களுக்கான வாய்ப்பு: புதியவர்கள் அகாடமியில் சேர்ந்து 6 மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை பயின்று சான்றிதழ் பெறலாம். அவர்கள் படிப்பை முடித்ததும் எங்களது சலூன்களிலேயே வேலை வாய்ப்பு (Placement) வழங்கப்படுகிறது.
தகுதிகள்: நாங்கள் அனுபவத்தை விட 'ஒழுக்கத்திற்கு' (Discipline) அதிக முக்கியத்துவம் தருகிறோம். திறமை குறைவாக இருந்தாலும் பயிற்சியின் மூலம் வளர்த்துக் கொள்ளலாம், ஆனால் ஒழுக்கம் மிகவும் அவசியம்.
தொடர்பு கொள்ள!
Address: Old No. 29, New No. 63, Raksha Arcade, 1st Floor, Kamaraj Ave 2nd Street, Near Poppat Jamal, Kasturba Nagar, Adyar, Chennai - 600020
Call: +91 90805 69144

