ஸ்ட்ராப்லெஸ் பிரா பற்றித் தெரியுமா?

Different Types Of Bra's For Women
Different Types Of Bra's For WomenImage Credits: Dermawear

பெண்கள் வெளிப்படையாகப் பேசுவதற்கு கூச்சப்படும் விஷயங்களில் உள்ளாடைகளும் ஒன்றாகும். கடைகளுக்குச் செல்லும்போது தனக்கு வேண்டிய உள்ளாடைகளின் டிசைன், சைஸ் போன்றவற்றைக் கேட்டு வாங்குவதற்குத் தயக்கம் காட்டுவார்கள். அதனால் அதிகப்படியான பெண்கள் தங்களுக்குப் பொருத்தமில்லாத உள்ளாடைகளையே வாங்கி அணிகிறார்கள். இந்தக் காலத்தில் பலவிதமான உள்ளாடைகள் சந்தையில் வந்துவிட்டன. இந்தப் பதிவில் பெண்களுக்கு எத்தனை வகையான பிராக்கள் இருக்கின்றன என்பதைப் பற்றி பார்ப்போம்..

ஒயர் லெஸ் பிரா(Wireless bra)

ஒயர்லெஸ் பிரா என்பது பெயருக்கு ஏற்றார்போலவே பிராவினுள் ஒயர்கள் பொருத்தப்படாமல் இருக்கும். இதனால் பிரா மென்மையாகவும், நெகிழ்வான தன்மையுடனும் இருக்கும். இது எடையைத் தாங்கு வதற்காக வடிவமைக்கப்படாமல் அணியும்போது வசதியாக இருக்கிறதா? என்பதிலேயே கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது.

லேஸ் பிரா (Lace bra)

லேஸ் பிரா நெகிழ்வான தன்மையுடனும், அணிவதற்கு வசதியாகவும் இருக்கும். இந்தப் பிராவினுடைய கப் மற்றும் ஸ்ட்ராப்பில் நுணுக்கமான வடிவமைப்புகள் செய்யப்பட்டிருக்கும். இதைப் பெண்கள் அணியும்போது அவர்களுக்கு நளினத்தைக் கொடுக்கும்.

பேடட் பிரா (Padded bra)

பேடட் பிரா மார்பகத்தைப் பெரிது பண்ணி காட்டுவதற்காக உள்ளே பேட் அமைக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதன் உள்ளே வைக்கப்பட்டிருக்கும் பேட் தண்ணீர், நுரை, ஜெல் போன்றவற்றால் செய்யப்பட்டது. இந்த பேட் வேண்டுமென்றால் வைத்துக்கொண்டு இல்லையென்றால் அகற்றி விடுவதுபோல வடிவமைக்கப்பட்டிருக்கிறது.  இது தினமும் அணிந்துக்கொள்வதற்கு வசதியாக இருக்கும்.

புஷ்அப் பிரா (Push up bra)

புஷ்அப் பிரா மார்பகங்களை உயர்த்தி, எடுப்பாகக் காட்டுவதற்காக பயன்படுத்தப்படுகிறது. சிறிய மார்பகங்கள் உள்ளவர்களுக்கு இந்த வகை பிரா பொருந்தும். இதை லோ கட் நெக் உடை அணிந்திருக்கும்போது பயன்படுத்தலாம். புடவைகள் அணியும்போது புஷ்அப் பிராக்கள் பயன்படுத்துவதே சிறந்ததாகும்.

மல்ட்டிவே பிரா(Multiway bra)

இந்தப் பிராவை பலவிதமாக அணிந்துகொள்ளலாம். இதில் இருக்கும் ஸ்ட்ராப் அகற்றக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்ட்ராப் வைத்தோ அல்லது ஸ்ட்ராப் இல்லாமலோ இந்தப் பிராவை அணிந்து கொள்ளலாம். இதை தினப் பயன்பாட்டிற்கும், ஜிம்மிற்குச் செல்லும்போதும் பயன்படுத்தலாம். இந்தப் பிராவை எல்லா வகையான உடைகளுடனும் அணிந்துகொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
விதவிதமான சீஸ் வகைகளை பற்றித் தெரிந்து கொள்ளலாம் வாங்க!
Different Types Of Bra's For Women

பிராலெட் பிரா (Bralette bra)

புதிதாக பிரா அணியத் தொடங்கும் பெண்களுக்கு இது சிறந்த தேர்வாகும். இந்த வகை பிராக்களில் அதிகமாக ஸ்டைலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பிராவை சிறிய மார்பகங்கள் உள்ளவர்கள் அணியலாம். கிராப் டாப், பேக்லெஸ் (Backless) உடைக்கு இதை அணிந்துகொள்வது சிறப்பாக இருக்கும்.

ஸ்ட்ராப்லெஸ் பிரா(Strapless bra)

இந்தப் பிரா பெயருக்கு ஏற்றாற்போலவே ஸ்ட்ராப் இல்லாமல் அணியக்கூடியதாகும். இதன் உள்ளே பொருத்தப்பட்டிருக்கும் சிலிக்கான் லைனிங் இதை விழாமல் தாங்கிப்பிடிக்க உதவுகிறது. இதை ஆஃப் ஷோல்டர், ட்யூப் டாப் போன்ற உடைகளுக்கு அணிந்துகொள்ளலாம். இந்தப் பிராவை sleeveless blouse அணியும்போது போட்டுக்கொள்வது வசதியாக இருக்கும்.

ஃப்ரன்ட் ஓப்பன் பிரா(Front open bra)

பெண்களுக்கு பிரா அணிவதில் இருக்கும் மிகப் பெரிய சிரமமே அதை பின்பக்கமாகப் போடுவதும், கழட்டுவதும்தான். இந்த வகை பிராவில் ஹூக் முன்பக்கம் வந்து விடுவதால் பெண்கள் பின்பக்கமாக ஹூக்கை கழட்டி சிரமப்பட தேவையில்லை. அதனால் இந்தப் பிரா பெண்கள் மத்தியிலே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

நர்சிங் பிரா(Nursing bra)

பாலூட்டும் தாய்மார்களுக்கு ஏற்றார்போல வடிவமைக்கப்பட்டது. குழந்தைகளுக்குப் பாலூட்டுவதற்கு வசதியாக இந்தப் பிராவை திறந்து மூடிக்கொள்வதுபோல அமைக்கப்பட்டிருக்கிறது. இதை ‘மெட்டர்னிட்டி பிரா’ என்றும் அழைப்பார்கள்.

ஸ்போர்ட்ஸ் பிரா (Sports bra)

உடற்பயிற்சி செய்யும்போது, அணிந்துகொள்ள ஸ்போர்ட் பிரா வடிவமைக்கப்பட்டுள்ளது. இது இருக்கமாக இருப்பதால், உடற்பயிற்சி செய்யும்போது பெண்களின் மார்பகங்களை அசையாமல் பார்த்துக்கொள்ளும். நடைப்பயிற்சி, யோகா, ஜிம் போன்ற இடங்களுக்கு இதை அணிந்துகொள்ளலாம். இது தினமும் பயன்படுத்துவதற்கு உகந்ததில்லை.

டிரான்ஸ்பரெண்ட் பிரா(Transparent bra)

இந்த வகை பிராக்களின் ஸ்ட்ராப் கண்களுக்குத் தெரியாதது போன்று அமைக்கப்பட்டிருக்கும். பிரா ஸ்ட்ராப் தெரியுமோ என்ற கவலையில்லாமல் இதை அணிந்துகொள்ளலாம். இந்தப் பிராவை பார்ட்டி, திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு அணிந்துகொள்வது சிறப்பு.

பிராக்கள் A முதல் J வரையுள்ள கப் சைஸ்களில் வருகிறது. A கப் சைஸ்தான் இதில் சிறியதாகும். J கப் சைஸ் மிகவும் பெரியது. முதலில் டேப் ஒன்றை எடுத்து மார்பகங்களின் அளவை அளந்துகொள்ளுங்கள். இதை Bust என்று சொல்வார்கள். பின்பு டேப்பை வைத்து விலாக்கூடு என்று சொல்லப்படும் Ribcage பகுதியை அதாவது மார்புக்கு கீழ் உள்ள பகுதியை அளந்துகொள்ளவும். இப்போது இது இரண்டையும் கழிக்கும்போது வரும் Inchஐ வைத்து கப் சைஸ் நிர்ணயிக்கப்படுகிறது. இதை பெண்கள் சரியாக அளந்து அதை பொருத்து பிரா வாங்கி அணியும்போது, அது அவர்களுக்குக் கச்சிதமாக பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com