கோடை வெயிலை வெல்லும் கடலை மாவு: பளபளப்பான சருமத்திற்கு 5 வழிகள்!


For glowing skin
For glowing skin
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

வெயிலில் அடிக்கடி செல்பவர்களுக்கு, சூரிய ஒளி பட்டு முகம் கருப்பாகும். இதனை நீக்க தேங்காய் பால் 1 ஸ்பூன், கடலை மாவு ஒரு ஸ்பூன் எடுத்து கலந்து பசை போல பிசைந்து,முகத்தில் பூச வேண்டும். உலர்ந்ததும் கழுவ வேண்டும். வாரம் இருமுறை செய்தால் முகம் பிரகாசமாக இருக்கும்.

நிறைய பெண்களுக்கு முழங்கை மற்றும் கழுத்துகளில் கருமையாக இருக்கும். இத்தகைய கருமையைப் போக்குவதற்கு, கடலை மாவில், தயிர் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கருமையாக உள்ள இடங்களில் தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் கழுவி, நல்லெண்ணெய் கொண்டு மசாஜ் செய்தால், கருமை விரைவில் நீங்கி விடும்.

இதையும் படியுங்கள்:
Gen Z-களின் ஃபேவரிட் ஃபேஷன் – என்னன்னு தெரியுமா உங்களுக்கு?

For glowing skin

உருளைகிழங்கு சாறுடன், கடலை மாவையும் சேர்த்து முகத்தில் பேக் செய்யும்போது ,பார்லரில் பேசியல் செய்தது போன்ற ஒரு பளபளப்பை கொடுக்கும். சோப்பிற்கு பதிலாக தினமும் கடலை மாவு பயன்படுத்தும் போது பருக்களற்ற தூய்மையான முகத்தை பெறலாம்.

-கவிதா பாலாஜிகணேஷ்

logo
Kalki Online
kalkionline.com