

இன்றைய காலக்கட்டத்தில் இந்திய ஃபேஷன் உலகம் Indo-Western Fusion எனும் ஒரு மிகப்பெரிய மாற்றத்தைச் சந்தித்து வருகிறது.
ஒரு காலத்தில் பெண்கள் என்றால் அவர்களின் உடை புடவையே என்று முத்திரை குத்தப்பட்டிருந்தது. அதிலும் குறிப்பாக, இடத்திற்கு ஏற்ற புடவை வகைகள் இருந்தன. திருமண வீடு என்றால் பாந்தமாக பட்டுப் புடவை கட்டி, தலைநிறைய மல்லிகைப் பூ சரம் வைத்துகொண்டு செல்ல வேண்டும் என்ற மரபு 90s கிட்ஸோடு முடிந்து விட்டது.
ஆனால் இன்றைய நவீன யுகத்தில், ஆடை என்பது தங்களுக்கு வசதியானதோடு அதே சமயம் ஸ்டைலானதாகவும் இருக்க வேண்டும் என்று நினைத்து, இன்றைய இளைய தலைமுறை அந்த பழைய விதிகளை எல்லாம் தூக்கி எறிந்து, Indo-Western Fusion கலாச்சாரத்தை கடைப்பிடிக்கத் தொடங்கியுள்ளது.
பட்டுப் புடவை கட்டினால் அதற்கு மேட்சாக செருப்பு (Sandals) அணிய வேண்டி தேடிக்கொண்டிருந்த காலம் போய், புடவைக்கு மேட்சாக ஸ்னீக்கர்ஸ் (Sarees with Sneakers) அணிவது இப்போது ‘ஸ்டாண்டர்ட்’ ஃபேஷனாகி விட்டது. அதுவும் குறிப்பாக கல்லூரிகள் மற்றும் திருவிழாக்களில் இதைக் காணலாம். இதற்கு முக்கிய காரணம் “Comfort over Tradition” என்கிறார்கள் இன்றைய யுவதிகள்.
Sneakers (ஸ்னீக்கர்கள்) என்பது பொதுவாக விளையாட்டு, உடற்பயிற்சி அல்லது அன்றாட பயன்பாட்டிற்காக அணியப்படும் மென்மையான ரப்பர் சோல் (rubber sole) கொண்ட வசதியான காலணிகளாகும். இவை பெரும்பாலும் துணி (Canvas) அல்லது தோலால் தயாரிக்கப்படுகின்றன. அதனால் நீண்ட நேரம் அணிவதற்கு ஏற்றதாக இருக்கும்.
ஒரு திருமணத்திற்கோ அல்லது கல்லூரி விழாவிற்கோ செல்லும் பெண்களுக்கு, நாள் முழுவதும் புடவை கட்டிக்கொண்டு ஹீல்ஸ் (Heels) அணிந்து நடப்பது மிகப்பெரிய சவாலாக இருந்தது. ஆனால் புடவையுடன் ஒரு கூலான ஸ்னீக்கர்ஸை இணைக்கும்போது, அது ஒரு தனித்துவமான தோற்றத்தைத் தருவதோடு, நீண்ட நேரம் சோர்வின்றி நடக்கவும் உதவுகிறது. இந்த “டெலிகேட்” மற்றும் “ரக்கட்” கலவையே இன்றைய Gen Z-களின் ஃபேவரிட்.
ஆண்களின் தேர்வு ‘ஸ்ட்ரீட்வேர்’ (Streetwear)
இந்த Indo-Western Fusion பெரும் தாக்கத்தை ஆண்களின் உடைத் தேர்விலும் ஃபேஷனிலும் காணமுடிகிறது. ஆண்களும் கூட இறுக்கமான ஆடைகளைத் தவிர்த்து, தளர்வான ஆனால் வசதியான ஆடைகளை அணிய விரும்பி ‘ஸ்ட்ரீட்வேர்’ (Streetwear) கலாச்சாரத்தில் இறங்கி விட்டனர்.
விழாக்களின்போது ஆண்கள் பாரம்பரியமான வேட்டி-சட்டை அல்லது குர்தாவுடன் ஜீன்ஸ் அணிவது பழைய ஸ்டைலாகி விட்டது. இப்போது ட்ரெண்டிங்கில் இருப்பது குர்தா மற்றும் பேக்கி கார்கோ பேன்ட் (Baggy Cargo Pants) இணைப்பாகும்.
இன்ஸ்டாகிராம் மற்றும் பின்ட்ரெஸ்ட் (Pinterest) போன்ற தளங்களில் ஃபேஷன் இன்ஃப்ளூயன்சர்கள் (Fashion Influencers) இந்த பாணியை உலகளவில் கொண்டு சென்றுள்ளனர். பாரம்பரிய உடைகளை எப்படி நவீனமாக மாற்றலாம் என்பதற்கான பல டிப்ஸ்களை அவர்கள் வழங்குகின்றனர். ஒரு சாதாரண காட்டன் புடவையை உடுத்தி, அதற்கு ஒரு டெனிம் ஜாக்கெட் (Denim Jacket) மற்றும் ஒரு பெல்ட் அணிந்தால், அது உடனடியாக ஒரு ஹை-ஃபேஷன் லுக்கைத் தருகிறது.
Zip-type Saree” அறிமுகம்
மேலும், இன்றைய யுவதிகளுக்கு சேலை கட்டுவது ஒரு பெரிய சவாலாக இருந்தது. அவர்களது சவால்களை சமாளிக்க இன்றைய வர்த்தக உலகம் “Zip-type Saree” எனும் புதிய வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் புடவையை எடுத்து சட்டைபோல அணிந்து zip-lock செய்தால் போதும்; சில நிமிடங்களில் பிரமிக்கத்தக்க வகையில் தயார் ஆகிவிடலாம்.
“பாரம்பரியத்தைப் போற்றுவோம், ஆனால் அதை எங்கள் ஸ்டைலில் செய்வோம்” என்ற இவர்களின் கொள்கை ஃபேஷன் நிறுவனங்களையும் கவர்ந்துள்ளது. பல பெரிய பிராண்டுகள் இப்போது பிரத்யேகமாக Indo-Western Fusion ஆடைகளை வடிவமைக்கத் தொடங்கியுள்ளன.
‘யூனிக் லுக்’ (Unique Look) எனப்படும் தனித்துவமான ஃபேஷன்
இந்த ‘யூனிக் லுக்’ (Unique Look) எனப்படும் தனித்துவமான ஃபேஷன், மேற்கத்திய நாடுகளின் வசதியையும் இந்தியாவின் கலைநயத்தையும் இணைக்கும் கலாச்சாரப் பரிமாற்றத்தின் புதிய வடிவமாகும்.
சமூக வலைதளங்களின் தாக்கமும் “Comfort over Tradition” என்ற எண்ணங்களும் இன்றைய இளைய சமுதாயத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. பாரம்பரிய உடையில் இருந்தாலும், அவர்களின் தனித்தன்மையை (Individuality) வெளிப்படுத்த இந்த ஃபேஷன் உதவுகிறது.