நடைப் பயிற்சி மேற்கொள்வோருக்கு...

நடைப் பயிற்சி மேற்கொள்வோருக்கு...

டைப்பயிற்சியோ, ஓட்டப் பயிற்சியோ முறையாக செய்யாவிடில் நன்மைக்கு பதில் தீமையான விளைவுகளைத் தந்துவிடும். ஓடுவதால் எந்த அளவுக்கு நன்மைகள் இருக்கிறதோ, அதை கவனமாகச் செய்யாமல் ஏனோதானோ என்று செய்தால் அதன் பலன்கள் கிடைக்காததோடு பாதிப்புகளைக் தந்து விடும். ஓட்டப் பயிற்சி செய்பவர்களுக்கு 'ரன்னர்ஸ் நீ' என்ற பிரச்னை வந்து விடும். எடுத்தவுடனேயே கடுமையாக செய்வதாலும், முறையாக செய்யாததாலும் மூட்டில் உள்ள குருத்தெலும்பு தேய்ந்து வலி கொடுக்கும். சாதரணமாக வலி இல்லாமல் மாடிப் படி ஏறுகையில் இந்த வலி கஷ்டம் தரும். நாற்காலியில் அதிக நேரம் உட்கார்ந்து இருந்தாலும் இந்த பாதிப்பை உணர முடியும்.

டற்பயிற்சிக்காக ஓடும்போது ஓடும் விதத்தைத்தான் பார்க்க வேண்டும் . ஓடும் தூரத்தைக் பார்க்கக் கூடாது. கடுமையான விதத்தில் செய்யாமல் டிரெயினர் அட்வைஸ் படி செய்யலாம். அதிக நேரம் ஒடும் பட்சத்தில் கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொண்டு மறுபடியும் ஒட்டத்தை தொடங்கலாம். பெண்கள் ஜாகிங் செய்ய, தேவையில்லாத கொழுப்புகள் கரையும். ரத்த ஓட்டம் சீராகும். உயர் ரத்த அழுத்தம் சீராகும் . எலும்பின் அடர்த்தி அதிகமாவதுடன் தசைகள் வலுவாகும்.

வாக்கிங் போகையில் கவனிக்க...

ரியான நிலையில் நடப்பது அவசியம். முதலில் மெதுவாக ஆரம்பித்து பிறகு வேகமாக நடக்கலாம்.

தலையை தாழ்த்திபடி நடந்தால் கழுத்து வலி, தோள்பட்டை வலி வரக்கூடும்.

முதுகை வளைக்காமல், நிமிர்ந்து கைகளை வீசி நடக்க வேண்டும்.

வயிற்றை உள்ளிழுத்தபடி நடக்கலாம்.

சமதளத்தில் செல்லுங்கள். ஒரே இடத்திலேயே நடக்காமல் அவ்வப்போது நடக்கும் இடத்தை மாற்றிட புத்துணர்வுடன் இருக்கும்.

நடைப்பயிற்சியை மிதமாக தொடங்கி, கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தை அதிகரிக்கவும். முடிக்கும்போது கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தை குறைத்தே முடிக்க வேண்டும்.

ஜாகிங் போகும் போது

ஜாகிங் பயிற்சிக்கு முன் உடலை பரிசோதனை பண்ணிக் கொள்ள வேண்டும். இதயநோய், சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மருத்துவர் ஆலோசனை பெறுவது அவசியம். இறுக்கமான ஆடை, காலணிகள் போடாமல் சரியான அளவுகளில் அணியவும்.

சாலை ஓரத்தில் ஓடும்போது ஒளிரும் தன்மையுள்ள உடைகளை அணிய பாதுகாப்பாக இருக்கும்.

இரண்டு நிமிடம் ஓட்டம், ஒரு நிமிடம் நடைப்பயிற்சி என செய்ய விரைவில் களைப்படையாமல் இருக்கலாம்.

ஹெட்செட் போட்டு பாட்டு கேட்பது, பேசிக் கொண்டே செல்வதை தவிர்க்க வேண்டும் .

பாக்கெட்டில் ஐ.டி. கார்டு போல முகவரி, பெயர் உள்ள அட்டையை வைத்திருக்க ஏதேனும் எமர்ஜென்சி எனில் உதவும்.

பயிற்சியின் போது மண் தரையையே தேர்ந்தெடுங்கள். தார் சாலை, சிமெண்ட் சாலையில் அதிக பயிற்சி செய்யும் போது மூட்டு வலி வர வாய்ப்புண்டு.

எந்த பயிற்சியானாலும் துவங்குவதற்கு முன், வார்ம் அப் செய்வது மிக அவசியம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com