சமையல் முதல் அழகு வரை... இந்த 3 தாவரங்கள் செய்யும் மேஜிக்!

Rosemary, Lavender, Oregano
Rosemary, Lavender, Oregano
Published on

1. ரோஸ்மேரி (Rosemary):

ரோஸ்மேரி என்பது ஒரு சுவைமிக்க மற்றும் வாசனைமிக்க மூலிகை தாவரம். இது 'Salvia rosmarinus' என்ற உயிரியல் பெயரால் அழைக்கப்படுகிறது.

தோற்றம் மற்றும் வளர்ச்சி:

ரோஸ்மேரி தாவரம் ஒரு சுருட்டையான இலைகளை கொண்ட, எப்போதும் பசுமையாக இருக்கும் புதுப்பிக்கத்தக்க தாவரம். பொதுவாக மெடிட்டரேனியன் (Mediterranean) பகுதியில் வளர்க்கப்படுகிறது. இது கதிர்வீச்சை விரும்பும், குறைந்த தண்ணீர் தேவையுள்ள தாவரம்.

பயன்பாடுகள்:

  • சமையலில் சில்லி, இறைச்சி வகைகள், உருளைக்கிழங்கு போன்ற உணவுகளில் வாசனைக்கும் சுவைக்கும் பயன்படுகிறது.

  • நினைவு திறன், கவனக்குறைவு, சோர்வை குறைக்கும் தன்மை உள்ளது என்று சொல்லப்படுகிறது.

  • அழகு பராமரிப்புக்காக ரோஸ்மேரி எண்ணெய் கூந்தலுக்குப் பயன்படும். முடி வளர்ச்சிக்கு உதவும் என்று நம்பப்படுகிறது.

  • சிலர் வீட்டில் ரோஸ்மேரி வைத்தால் நேர்மறை சக்தி இருக்கும் என நம்புகின்றனர்.

இயற்கை குணங்கள்:

ஆன்டி ஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்டி-இன்ஃப்ளமேட்டரி (Antioxidant & Anti-inflammatory) தன்மை உள்ளது. ஜீரண நரம்பு அமைப்பை தூண்டுகிறது. பாக்டீரியா எதிர்ப்பு தன்மை கொண்டது. ரோஸ்மேரி வேருக்கு அதிக ஈரப்பதம் வந்தால் அழுகலாம், எனவே நல்ல வடிகாலமைப்பு அவசியம்.

2. லவெண்டர் (Lavender):

இதன் அறிவியல் பெயர் Lavandula angustifolia. இனிப்பு, அமைதியான, நெஞ்சைத் தூக்கும் நறுமணம் கொண்டது. பொதுவாக மஞ்சள் கலந்த ஊதா, வெள்ளை மற்றும் நீல நிற வகைகளும் உள்ளன

பயன்பாடுகள்:

  • (Essentiol oil) மனஅமைதி, தூக்கமின்மை, வலி குறைப்பு, தலைவலி போன்றவற்றுக்கு பயன்படுத்தப் படுகிறது.

  • மசாஜ் எண்ணெய்கள், ஆரோமாதெரபி, மற்றும் ஸ்கின் கேரில் பயன்படுத்தப்படுகிறது.

  • சமையல்: சிறிதளவு டீ, டெசர்ட்கள், ஜாம் போன்றவற்றில் வாசனைக்காக சேர்க்கப்படுகிறது. அதிகம் சேர்த்தால் கசப்பு ஏற்படக்கூடும்.

  • அழகுப்பொருட்கள்: சோப், ஷாம்பு, லோஷன், பெர்ஃப்யூம், ஃபேஸ்பேக் வகைகளில் வாசனைக்காக அதிகம் சேர்க்கப்படுகிறது.

  • வீட்டு பயன்பாடு: அறை அல்லது தலையணைக்கு அடியில் வைத்தால் தூக்கம் சீராகும்; பூச்சிகள் விரட்ட பயன்படுத்தப்படும்.

இயற்கை குணங்கள்:

வெயில் மிக அதிகம் தேவைப்படும் தாவரம். தண்ணீர் தேவை குறைவு மண்நிலம் சற்று உலர்ந்ததும், நல்ல வடிகால் வசதியுடனும் இருக்க வேண்டும். லவெண்டர் மன அமைதிக்கு ஏற்ற மூலிகையாக பார்க்கப்படுகிறது. தூக்கமின்மை அல்லது மனஅழுத்தம் உள்ளவர்களுக்கு சுத்தமான லவெண்டர் எண்ணெய் சிறந்தது.

இதையும் படியுங்கள்:
மாதவிடாய்: மௌனம் களைவோம், மூடநம்பிக்கை ஒழிப்போம்!
Rosemary, Lavender, Oregano

3. ஒரிகேனா (Oregano):

ஒரிகேனா என்பது ஒரு வாசனைமிக்க மூலிகைத் தாவரம். ஒரிகேனாவின் வாசனை, சுவை, மற்றும் மருத்துவப் பண்புகள் காரணமாக, இது உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் அறிவியல் பெயர்: Origanum vulgare. சிறிய பச்சை இலைகள், ஒவ்வொன்றும் நறுமணமிக்கது. கொஞ்சம் காரமான சுவையுடையது.

பயன்பாடுகள்:

  • சமையலில் முக்கியமாக இத்தாலிய உணவில் ஹெர்ப் – பீட்சா, பாஸ்தா, சாஸ் மற்றும் பிரெட் வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. உலர்த்திய ஒரிகேனா இலைகள் மிகப் பரவலாகப் பயன்படுகின்றன. ருசியை அதிகரிக்க, இறைச்சி, காய்கறி மற்றும் மூடிய உணவுகளில் சேர்க்கப்படுகிறது.

  • மருத்துவம்: நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவுகிறது. சளி, இருமல், மற்றும் தொண்டை வலி நிவாரணியாக பயன்படுத்தப்படும். நுண்ணுயிர் எதிர்ப்பு (antibacterial), பூச்சி விரட்டும் (antiseptic) பண்புகள் உள்ளன.

  • அவசிய எண்ணெய் (Essential Oil): ஒரிகேனாவில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் மிகவும் சக்திவாய்ந்தது. இது தற்காலிகமாக தொற்று எதிர்ப்பு, சரும பிரச்னைகள், அல்லது fungal பிரச்னைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. (மிகவும் dilute செய்து மட்டுமே பயன்படுத்த வேண்டும்.)

இதையும் படியுங்கள்:
திருமணம் என்பது ஜெயிப்பவர்களுக்கானது அல்ல!
Rosemary, Lavender, Oregano

இயற்கை குணங்கள்:

வெயில் அதிகம் உள்ள இடங்களில் நன்கு வளரும். நீர் தேவை குறைவாகவே இருக்கும்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com