
சத்தான ஆகாரங்களை உட்கொள்ளாமல், ஜங்க் உணவுகளை அதிகம் உண்பது போன்றவற்றால் இயற்கையான வயதில் பூப்பெய்தல் பதினொன்று, பதினைந்து வயதில் ஏற்படாமல் காலதாமதம் ஆகலாம். ஆதனால் மன அழுத்தம், மகிழ்ச்சியான சூழ்நிலை இல்லாமல் இருக்கும். இதை தவிர்க்க சில எளிய வழிகளை கடைப்பிடிக்கலாம்.
கற்றாழையின் சதைப்பகுதியை எடுத்துக்கொண்டு அதனுடன் சிறிது படிகாரம் தூவி, பனைவெல்லம் கலந்து தினமும் காலை வெறும் வயிற்றில் குடித்து வரலாம்.
ஆலம் வேரை வாங்கி மிக்ஸியில் கரகரப்பாக பொடிக்கவும். இந்தப் பொடியை 200மிலி தண்ணீரில் கலந்து பாதியாக சுண்ட விடவும்.இதை வடிகட்டி குடித்துவர பலன் நிச்சயம் கிடைக்கும்.
முருங்கை இலை அல்லது கல்யாண முருங்கை இலையை அரைத்து 30மிலி அளவில் வடிகட்டி காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம். அதேபோல் மிதிபாகல் சாறையும் அருந்தலாம்.
பப்பாளி காயை கூட்டு செய்து சாப்பிட்டு வரலாம்.
முள்ளங்கியோடு 5 கிராம் இஞ்சியை சேர்த்து அரைத்து சாறாக்கி மோரில் கலந்து குடிக்க நல்ல பலன் கிடைக்கும்.
ஒரு ஸ்பூன் மஞ்சள் தூளுடன் சிறிதளவு பனைவெல்லம் அல்லது தேனும் தேங்காய் பாலும் கலந்து சாப்பிடலாம்.
கறுப்பு உளுந்து, கறுப்பு எள், முருங்கைக்கீரை, ஆளி விதை, எலுமிச்சை, ஆரஞ்சு பழம், அத்திப்பழம், பேரீச்சம்பழம், முருங்கை, தேங்காய் இவற்றை ஏதாவது ஒருவகையில் எடுத்துக் கொள்வதை கட்டாயமாக்கி கொள்ளவேண்டும்.
கறுப்பு திராட்சையை தோல், விதையோடு சேர்த்து அரைத்து 50லிருந்து,100மிலி யாக சுண்டும் வரை கொதிக்க வைத்து வடிகட்டி காலை, மாலை தொடர்ச்சியாக அருந்தலாம்.
தனியா, சோம்பு இவற்றை கரகரப்பாக பொடித்து கொதிக்க வைத்து இளஞ்சூட்டில் டீ மாதிரி குடிக்கலாம்.
இவற்றில் ஏதாவதொரு பக்குவத்தை செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.
இவை என் தோழியின் மகள் சித்த மருத்துவம் படிக்கிறாள். அவள் சொன்னதைக் கேட்டு உங்களுக்காக இந்த குறிப்புகள்.