வீடு சலிப்புத்தட்டுகிறது!

கவிதை!
வீடு சலிப்புத்தட்டுகிறது!

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

னவென்ன கண்டோமென

எழாமல்

உணவென்ன செய்யவென

எழுவதிலே

சுணக்கம் வந்து

அதிகாலை அழுது வடிகிறது.

ட்டமாய் மெல்லிசாய்

முறுகலாய்

நாள்தோறும் சுடப்படும்

தோசையின்

விட்டத்தில் கால்கடுக்க

முகவாட்டம் நிற்கிறது.

சிறுகுன்று உயரத்திற்கு

கழுவி

கவிழ்த்திய பாத்திரங்களின்

பளபளப்பில்

விழுகின்ற பிம்பத்தினை

சோர்வு ஆட்கொள்கிறது.

குறைகள் சொல்லிவிட

முடியாதபடி

பெருக்கி துடைக்கப்பட்ட

தரையின்

நிறைவுகளில் சிந்தனைகள்

சிறை பிடிப்பை உணர்கிறது.

துவைத்து இஸ்திரி

செய்து

மடித்து வைக்கப்பட்ட

துணிகளின்

நேர்த்திகளுக்குள் ஒருவித

விரக்தி ஒளிந்திருக்கிறது!

துவே இல்லத்தரசியின்

பொறுப்பென்று

ஆறுதல் கொண்டாலும்

அடிமனதின்

மறுப்பு பதியப்படாமலே

அந்த நாள் முடிகிறது!

கூடவே நாளையும்

இதுபோன்ற இன்னொரு

நாளே என்பதில்

வீடு சலிப்புத்தட்டுகிறது!!

logo
Kalki Online
kalkionline.com