
பெண்களுக்கு கஞ்சி போட்டு அயர்ன் செய்து காட்டன் புடவை மிடுக்கைத்தரும். கஞ்சி மாவை மைதா அல்லது ஜவ்வரிசி மாவில் செய்யலாம். ஒரு டேபிள் ஸ்பூன் மைதா மாவு அல்லது ஜவ்வரிசி மாவை நீரில் கட்டி இல்லாமல் கரைத்து கொதிக்கவிடவும். பிறகு இதை வடிகட்டவும். நன்கு உலர்ந்த புடவையை மட்டுமே கஞ்சியில் நனைக்க வேண்டும். மிகவும் இறுக்கமாக கசக்கிப் பிழியக்கூடாது. கஞ்சியில் நனைத்த பின் உங்களுக்குப் பிடித்த வாசனை திரவியத்தை கஞ்சியில் சேர்க்க புடவை நறுமணத்துடன் இருக்கும்
நீங்கள் வீட்டிலே சாதம் வடித்த கஞ்சியையும் துணிக்குப் பயன்படுத்தலாம். இதை நன்றாக வடிகட்டி பிறகு உபயோகிக்கவும்.
நீங்கள் ஜவ்வரிசி கஞ்சியை ஆறியதும் ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வையுங்கள். கால் கப் அளவு கஞ்சி எடுத்து தேவையான தண்ணீர் ஊற்றி அதில் ஒருமணி நேரம் ஊறவையுங்கள். அதற்குப் பிறகு துணிகளை சுருக்கம் இல்லாமல் உலர்த்தவும்.
ஜவ்வரிசி கஞ்சியை ஸ்ப்ரே பாட்டிலில் வடிகட்டி வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் துணியை அயர்ன் செய்யும்போது இந்த ஸ்ப்ரே பாட்டிலில் இருந்து ஸ்ப்ரே செய்து அயர்ன் செய்ய துணிகள் மொரமொரப்பாக மாறும்.
கஞ்சியில் நீலம் சில சொட்டுகள் சேர்ப்பதால் கஞ்சி துணியில் திட்டு திட்டாக இருக்காது.
உப்பையும் சேர்த்தால் கஞ்சி ஒரே சீராக புடவையில் பரவும்.
நீங்கள் கடையில் விற்கும் கஞ்சி லிக்விட் உபயோகிக்கும் போதும் அதில் உப்பு மற்றும் நீலம் சேர்த்து துணியை நனையுங்கள்.
புடவைகளின் அழுத்தமான நிறங்கள் மங்காமல் இருக்க நீங்கள் கஞ்சியில் அரை கப் காபி டிகாக்ஷன் சேர்க்கலாம்.
நீங்கள் வாஷிங் மிஷினில் துணிகளை போடுவதற்கு முன் உப்பு நீரில் ஊறவைத்து பிறகு துவைக்க உங்கள் துணிகளில் உள்ள கறைகள் அழுக்குகள் நீங்கும்.
கஞ்சி போட்டு புடவையை நீளமாக சுருக்கம் இல்லாமல் உலர்த்த அயர்ன் செய்வது சுலபமாகும்.
நீங்கள் கஞ்சிபோட கார்ன் ஃப்ளவர் மாவையும் பயன்படுத்தலாம். ஒரு புடவைக்கு ஒரு லிட்டர் தண்ணீரில் 4 டேபிள்ஸ்பூன் கார்ன் மாவு நன்கு கட்டியில்லாமல் கரைத்து கொதிக்க வைத்து ஆறிய பின் துணியை நனைத்து கஞ்சி போடலாம். இதிலும் உப்பு நீலம் சில துளிகள் சேர்க்கவும்.