உடல் அமைப்புக்கு பொருத்தமான ஆடைகளை தேர்வு செய்வது எப்படி?

Choosing Clothes
Choosing Clothes
Published on

ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள். அந்த அளவுக்கு ஆடை என்பது நம்மை பிரதிபலிப்பதில் மிகுந்த முக்கியத்துவம் காட்டுகிறது. எப்போதும் ஆடைகளை தேர்வு செய்யும்போது பிடித்தமான ஆடைகளை தேர்வு செய்வதை விட, நம் உடலமைப்புக்கு பொருத்தமான ஆடைகளை தேர்வு செய்ய வேண்டும்.

ஒல்லியாக இருக்கும் பெண்கள்:

ஒல்லியாக இருக்கும் பெண்கள் ஆடைகளை தேர்வு செய்யும் போது பெரும்பாலும் பளிச்சென்று இருக்கும் நிறங்களை தேர்வு செய்வது நல்லது. கருப்பு நிற உடைகள் உங்களை மேலும் ஒல்லியானவர்களாக காட்டும் என்பதால் கருப்பு நிறத்தை தவிர்க்கவும். ஒல்லியாக இருக்கும் பெண்கள் பெரும்பாலும் உடலை இறுக்கக்கூடிய ஆடைகளை தவிர்த்து தளர்வான ஆடைகளை அணிவது நல்லது. ஒல்லியாக இருக்கும் பெண்கள் அகல வாக்கில் கோடுகள் வைத்திருக்கும் ஆடைகளை அணிவது அவர்களை மேலும் ஒல்லியாக காட்டாமல் சற்று பூசினால் போல காட்டும்.

ஆடைகளை தேர்வு செய்யும் போது ஆடைகளின் வகைகளை தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். தூய காட்டன், சார்ஜெட் வகையான ஆடைகள் அவரது உடலின் மெலிந்து தேகத்தை சற்று மேம்படுத்தி காட்டும்.

மேலும் ஒல்லியாக இருக்கும் பெண்கள் பல்வேறு அடுக்குகளால் செய்யப்பட்ட ஆடைகளை அணிவது அவர்களின் தோற்றத்தை சிறப்பாக எடுத்துக்காட்டும். மேலும் அவர்கள் அணியும் ஆடைகள் எப்போதும் அதிகப்படியான வேலைப்பாடுகளை  கொண்டிருப்பதாக இருந்தால் அது அவர்களது தோற்றத்தை இன்னும் மேம்படுத்தி காட்ட உதவும்.

சற்று பருமனாக இருக்கும் பெண்கள் :

சற்று பருமனாக இருக்கும் பெண்கள் எப்போதும் தங்களை ஒல்லியாக காட்டுவதற்காக சிந்தடிக், பாலிஸ்டர், கிரேப், ரேயான், நல்ல காட்டன் போன்ற  ஆடைகளை தேர்வு செய்வது அவர்களின் தோற்றத்தை மேலும் பருமனாக காட்டாமல் உடல் அமைப்பை ஒல்லியாக காட்டும். மேலும் உடல் பருமனாக  உள்ளவர்கள் முன்புறத்தில் அதிக வேலைபாடுடைய ஆடைகளை அணிவது  பொருத்தமாக இருக்கும்.

உடல் பருமனாக உள்ள பெண்கள் எப்போதும் அணியும் ஆடைகளில் கையின் அளவு சற்று நீளமாக இருக்குமாறு அணிந்தால் மிகவும் நன்றாக இருக்கும். கைகளை குறைவாக வைத்து அணியும் போது அது உங்கள் உடலை மேலும் பருமனாக காட்டும். பெரும்பாலும் குர்த்தி வகைகளை அணியும்போது செங்குத்தாக கோடுகள் போட்ட அல்லது செங்குத்தாக டிசைன் போட்ட  உடைகளை அணிவது உங்களது உடல் பருமனை மேலும் அதிகரிக்காமல் காட்டும்.

இதையும் படியுங்கள்:
பிளஸ் சைஸ் பெண்களுக்கு ஏற்ற ஆடை வடிவமைப்புகள்!
Choosing Clothes

குர்த்தி வகைகளை அணியும் போது இடையில் பெல்ட் வருவது போன்ற உடைகளை அணிந்தால் அது உங்களது தோற்றத்தை மிகவும் சிறப்பாக எடுத்துக்காட்டும். குர்த்திகளை தேர்வு செய்யும் போது A-லைன் மற்றும் ஸ்ட்ரெயிட் கட் குர்த்திகளை  அணிவது பொருத்தமாக இருக்கும்.

ஆடைகளை தேர்வு செய்யும் போது  உங்கள் உடல் அமைப்பு தகுந்தவாறு உள்ளாடைகளை தேர்வு செய்வது மிகவும் அவசியம். நீங்கள் அணியக் கூடிய உள்ளாடைகள் தான் நீங்கள் அணியக்கூடிய  உடைகளின் தோற்றத்தை எடுத்துக்காட்டும். எனவே உங்கள் உடல் அமைப்பு என்ன என்பதை நன்கு அறிந்து அதற்குத் தகுந்தவாறு உள்ளாடைகளை தேர்வு செய்வது மிகவும் நல்லது. மேலும் எல்லா ஆடைகளுக்கும் ஒரே விதமான உள்ளாடைகளை அணியாமல் அணியும் ஆடைகளுக்கு ஏற்ப உள்ளாடைகளை தேர்வு செய்வதும் மிகவும் அவசியம். 

புடவைகளை அணியும் போது அதுக்கு மேட்ச்சாக போடப்படும் ஜாக்கெட்டுகள் மிகவும் பொருத்தமாக இருக்க வேண்டும். மேலும் ஆடைகளை தேர்வு செய்யும் போது நீங்கள் செல்லக்கூடிய இடங்களுக்கு தகுந்தவாறு ஆடைகளை தேர்வு செய்யுங்கள். வழக்கமாக செல்லும் அலுவலகம், கல்லூரி போன்ற இடங்களுக்கு செல்லும்போது மிக எளிமையான வேலைப்பாடுகள் கொண்ட ஆடைகளையும், ஏதாவது விசேஷ நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது அதிகமான வேலைப்பாடுகள் கொண்ட ஆடைகளையும் தேர்வு செய்வது அணிவது உங்களுக்கு பொருத்தமான தோற்றத்தை அளிக்கும்.

இதையும் படியுங்கள்:
ஆடை முதல் அணிகலன்கள் வரை: பெண்களின் அழகு அலங்கார ரகசியங்கள்!
Choosing Clothes

உங்கள் உடல் அமைப்புக்கு பொருத்தமான ஆடைகளை அணியும் போது உங்களுக்கு அது நல்ல மனநிலையையும் தன்னம்பிக்கையும் கொடுக்கும். எனவே உங்கள் உடலமைப்புக்கு பொருத்தமான ஆடைகளை தேர்வு செய்து அணியுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com