முட்டைக்கோஸை ஆரோக்கியமான வகையில் சாப்பிடுவதென்றால் எப்படி?

முட்டைக்கோஸை ஆரோக்கியமான வகையில் சாப்பிடுவதென்றால் எப்படி?
Published on

முட்டைக்கோஸை வேகவைக்கலாம். பொதுவாக, ஆவியில் வேக வைத்து எடுப்பது காய்கறிகளை ஜீரணிக்க எளிதாக்குகிறது, ஒருவேளை ஆவியில் வேக வைப்பது விருப்பமில்லை என்றால் நீரில் வேகவைத்து வடிகட்டியும் சாப்பிடலாம். இது வாயுவைக் குறைக்கவும் உதவும். அதிகப்படியான நீரை வடிகட்டும் போது இழக்கப்படும் முட்டைக்கோஸில் உள்ள ஊட்டச்சத்துக்களை தக்கவைக்க, முட்டைக்கோஸ் சூப் அல்லது மெக்சிகன் முட்டைக்கோஸ் ரோல் சூப்பை முயற்சிக்கலாம்.

முட்டைக்கோஸை எப்படிச் சாப்பிட்டால் ஆரோக்யமானது?

முட்டைக்கோஸின் சத்துக்களில் இருந்து அதிக பலனைப் பெற அதைப் பச்சையாகவோ அல்லது அரைகுறையாக வதக்கியோ சாப்பிடலாம். முழுதாக நீரில் வேக வைத்து வடிகட்டும் போது சத்துக்கள் நீரில் கரைந்து விடும். அவற்றை சூப்பாக்கி அருந்தாவிட்டால் மொத்தமும் வீணாகி விடும். அதனால் தான் அசைவ உணவகங்களில் கிடைக்கும் சாலடுகள் மற்றும் கோல்ட்ஸ்லா போன்ற பக்க உணவுகளில் முட்டைக்கோஸை சமைக்காமல் அப்படியே பயன்படுத்துகிறார்கள். அது தான் அதை உண்ணக்கூடிய வகைகளில் ஆகச்சிறந்த ஆரோக்யமான வழி!

முட்டைக்கோஸ் வைட்டமின்கள் சி மற்றும் கே, மினரல்கள் பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் பைட்டோநியூட்ரியன்களின் நல்ல மூலமாகக் கருதப்படுகிறது. அத்துடன் இதில் கலோரி குறைவாக உள்ளது, இருப்பினும் முட்டைக்கோஸ் சமைக்கும் போது நீங்கள் வெண்ணெய் சேர்த்தீர்கள் எனில் அது உங்கள் உணவின் கலோரிகளை கூட்டி விடும். எனவே முட்டைக்கோஸை வேக வைக்கும் போது அரைவேக்காட்டில் இறக்கி சில துளிகள் எலுமிச்சை சாறு கலந்து அப்படியே சாப்பிடலாம். சுவைக்கு கூடுதலாக சில துண்டுகள் கேரட் மற்றும் பீன்ஸ் சேர்த்து வேக வைக்கலாம்.

உங்கள் சாலடுகள், சூப்கள், ஃபிராங்கி ராப்கள்(வெஜ் ரோல் போன்றதொரு உணவு வகை) அல்லது சாண்ட்விச்களில் மெல்லியதாக வெட்டப்பட்ட முட்டைக்கோஸ் கொண்டு கூடுதல் மொறுமொறுப்பு சேர்க்கலாம். ஸ்லோ குக்கிங் முட்டைக்கோஸ், கீரை, தக்காளி, ஊறுகாயுடன் கொஞ்சமாக மயோனைஸ் சாஸ் சேர்ப்பதன் மூலம் உங்கள் ஹாம்பர்கர்களில் காய்கறிகளை குலுக்கிச் சேர்க்கலாம். அவை உங்கள் உணவுக்கு மேலும் சுவை கூட்டுவதோடு ஆரோக்யத்தையும் மேம்படுத்தும்.

அதிக பலனைப் பெற, வாரத்திற்கு குறைந்தது 5 நாட்களுக்கு ஒரு முறை ½ முதல் ¾ கப் வரை சமைத்த அல்லது 1 ½ கப் பச்சை முட்டைக்கோஸ் சாப்பிட முயற்சிக்கலாம். ரபேஜ் என்று சொல்லப்படக்கூடிய நார்ச்சத்தும், நீர்ச்சத்தும் நிறைந்த உணவுகளில் இது அடங்கும் எனவே இதன் மூலமாக உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனையே வராமல் தடுக்க முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com