நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஃப்ரிட்ஜை சமையலறையில் வைத்து பயன்படுத்தக் கூடாது. ஏனெனில் ஃப்ரிட்ஜின் மேல் புகை பட்டு நிறம் மாறிவிடும்.
ஃப்ரிட்ஜை அடிக்கடி திறக்கக் கூடாது, திறந்தால் உடனே மூடிவிட வேண்டும். இது மின்சாரத்தை மிச்சப்படுத்த உதவும்.
ஃப்ரிட்ஜின் பின்பக்கம் உள்ள கம்பி வலைகள் சுவரை ஒட்டி இருக்கக் கூடாது. அந்தக் கம்பியில் தண்ணீர் படாதவாறு இருக்க வேண்டும்.
ஃப்ரிட்ஜிலிருந்து வித்தியாசமாக சத்தம் வந்தால் உடனடியாக அதனை சரி செய்ய வேண்டும். அதிகப்படியான பொருட்களை அடைத்து வைக்கக் கூடாது. ஒவ்வொரு பொருளுக்கும் காற்று செல்வதற்கு ஏற்றவாறு சிறிது இடைவெளி விட்டு வைக்க வேண்டும்.
ஃப்ரிட்ஜின் உட்பகுதியை சுத்தம் செய்யும்போது கண்டிப்பாக சோப்புகளை பயன்படுத்தக் கூடாது. அதற்கு பதிலாக சோடா உப்பு கலந்த வெந்நீரை பயன்படுத்தி சுத்தம் செய்யலாம்.
உணவுப் பொருட்கள் சூடாக இருந்தால் அவற்றை குளிர வைத்த பின்புதான் வைக்கவேண்டும்.
பச்சைக் காய்கறிகளை பாலிதீன் கவர்களில் போட்டு வைக்கவும். பிரிட்ஜில் வைக்கும் பாட்டில்களை அடிக்கடி சுத்தம் செய்து வெயிலில் காயவைத்து உபயோகிக்க வேண்டும்.
ஃப்ரிட்ஜிலிருந்து துர்நாற்றம் வீசாமல் இருக்க சிறிது புதினா இலை அல்லது சாறு பிழிந்த எலுமிச்சம் பழ தோல்களை வைத்து வந்தால் நாற்றம் வருவதை தவிர்க்கலாம்.
ஃப்ரிட்ஜின் காய்கறிகள் வைக்கும் ட்ரேயின் மீது ஒரு துணி விரித்து பச்சைக் காய்கறிகளைப் வைத்தால் வெகு நாள் கூட அழுகிப் போகாமல் அப்படியே இருக்கும்.
சப்பாத்தி மாவின் மேல் சிறிது எண்ணெயைத் தடவி ஒரு டப்பாவில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்தால் நான்கு நாட்களுக்கும் மாவு ஃபிரஷாக இருக்கும்.
பொரித்த பப்படம், சிப்ஸ், பிஸ்கட் போன்றவை அதிக நாட்கள் முறுமுறுப்பாக இருக்கவேண்டும் என்றால் அவற்றை ஒரு பாலிதீன் கவரில் போட்டு ஃப்ரிட்ஜில் வைக்கவேண்டும்.
ஃப்ரிட்ஜை காற்றோட்டம் உள்ள அறையில் மட்டுமே வைக்க வேண்டும். ஃப்ரிட்ஜின் உள்ளே குறைந்தப் பொருள்களை வைத்தால் மின்சாரம் குறைவு என்பது தவறான கருத்தாகும்.
மேலும், அதிக ஸ்டார்கள் உள்ள ஃப்ரிட்ஜை வாங்கினால், மின்சாரம் அதிக அளவு ஆகாமல் குறைக்கலாம்.