
ஆடிப் பழமொழியும் அதன் உண்மையான அர்த்தமும்!
"ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும்" எனும் பழமொழி அனைவரும் அறிந்ததே. ஆனால், அதன் உண்மையான அர்த்தம் அதுவல்ல.
"ஆடிக் காற்றில் அம்மையும் பறக்கும்" என்பதே சரியான பழமொழி.. அதாவது, அம்மை உட்பட சகல வியாதிகளையும் குணப்படுத்த வல்லது ஆடிக் காற்று என்பதேயாகும்.
ஆடி பழமொழிகள்:
* ஆடிப் பட்டம் தேடி விதை,
* ஆடியில் காற்றடித்தால் ஐப்பசியில் மழை வரும்,
* ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும்,
* ஆடிச் செவ்வாய் தேடிக் குளி, அரைத்த மஞ்சள் பூசிக் குளி,
* ஆடிக் கூழ் அமிர்தமாகும்.
*ஆடிக் காற்றில் பூளைப்பூ பறந்தார் போல
* ஆடி ஞாயிறு ஐந்து பட்டால் நாடு படும்பாடு நாயும்படாது
* ஆடித்தேரை தேடி தரிசி
ஆடி புது மொழிகள்:
* ஆடி மாத அழகு பண்டிகைகளில் தெரியும்
* தள்ளுபடி வரும் முன்னே 'ஆடி' வரும் பின்னே..
* கடைக்குக் கடை தள்ளுபடி விற்பனை
* ஆடித் தள்ளுபடி பார்த்து வாங்கு
* ஆடித் தள்ளுபடியில் துணி வாங்கிப் பார்
அதைத் துவைத்துப் பார்
* தள்ளுபடி உள்ளபோதே ஜவுளி வாங்கி விடு
* ஆடித் தள்ளுபடிக்கு கடைக்குப்போய் தள்ளுமுள்ளுவில் சிக்கியது போல
* தரத்துக்கும் ஆசை தள்ளுபடிக்கும் ஆசை
* காற்றில்லாமல் ஆடியா…?
* ஆடிக்குத் தள்ளுபடி ஆதாரமா, பண்டிகை ஆதாரமா?
* தாய் எட்டு கடைக்குப் போனால், மகள் பதினாறு மால்களுக்கு போவாளாம்.
ஆடி ஜோக்ஸ்:
"என்னங்க.. ஆடி மாதம் தம்பதியர் பிரிஞ்சு இருக்கணும்னு சொல்றதைப்பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?"
"வருஷத்துல பன்னெண்டு மாசமும் ஆடி மாசமா இருந்தால் நல்லா இருக்கும்னு நினைக்கறேன்"
--------
"ஆடி மாசத்துல ஏன் யாரும் கல்யாணம் நடத்தறதில்லை தெரியுமா..?"
"தெரியலையே..."
"ஏன்னா ஆடிக் காற்றில் அம்மியும் பறக்குமே... அப்புறம் எப்படி அம்மி மிதிச்சு அருந்ததி பார்க்கறதாம்...?"
---------
"ஆடிச் சீருக்கு மாப்பிள்ளை அப்படி என்ன கேட்டுட்டாரு? ஆடிப் போய் உட்கார்ந்திருக்கியே..?"
"ஆடி கார்..!"