தாலி செயினை எத்தனை பவுனில் போடுவது நல்லது தெரியுமா?

Thali
Thali
Published on

திருமணம் என்பது ஒருவருடைய வாழ்வின் திருப்புமுனையாக கருதப்படுகிறது. அந்த திருமண வாழ்வின் அடையாளமாக பல விஷயங்கள் சொல்லப்படுகின்றன. அதில் ஒன்று தான் திருமாங்கல்யம். இதை முன்பெல்லாம் பெண்கள் மஞ்சள் கயிற்றில் அணிந்திருந்தார்கள். ஆனால், காலப்போக்கில் தங்கத்தில் அணியத்தொடங்கி விட்டார்கள். அந்த மாங்கல்யத்தை எத்தனை பவுனில் அணிந்தால் என்ன பலன் என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

தற்போது உள்ள காலக்கட்டத்தில் மாங்கல்யத்தை ஆபரணமாகவும், அழகு சாதனப்பொருளாகவும் அதை அனைவரும் பார்க்கும்படி வெளியிலே போட்டுக் கொண்டு போகக்கூடிய பழக்கமும் உள்ளது. முன்பெல்லாம் தாலியை மஞ்சள் கயிற்றில் அல்லது பட்டு நூலில் அணிந்திருந்தார்கள். அவ்வாறு அணிந்திருப்பது தான் தாலிக்கு அதிக சக்தி என்று சொல்லப்பட்டது. 

கணவனின் உயிர்நாடிக்கும், மனைவியின் உயிர்நாடிக்கும் மிகப்பெரிய இணைப்பு சக்தியை உருவாக்குவதே தாலிக்கயிறு தான் என்று சொல்லப்படுகிறது. அதனால் தான் தாலியை நம் முன்னோர்கள் கயிற்றில் கட்டும் பழக்கத்தை வழக்கமாகக் கொண்டிருந்தனர். காலப்போக்கில் பொருளாதார வளர்ச்சியின் காரணமாக தாலிக்கயிறு என்பது தங்க செயினாக மாறிவிட்டது. 

மாங்கல்யம் மகாலக்ஷ்மியின் அம்சம் என்று சொல்லப்படுகிறது. இந்த மாங்கல்யத்தில் எக்காரணத்தைக் கொண்டும் இரும்பு பொருளை சேர்க்கக்கூடாது. சிலர் இதில் Safety pin ஐ போட்டு வைத்திருப்பார்கள். அவ்வாறு செய்யக்கூடாது. இரும்பு சனீஸ்வரனின் அம்சத்தைப் பெற்றது. அதை தாலியில் சேர்க்கும் போது குடும்பத்தில் தேவையில்லாத சண்டை, சச்சரவு பிரச்னைகள் ஏற்படும்.

மாங்கல்யத்தில் இருக்கக்கூடியவை ஒற்றைப்படையிலே தான் இருக்க வேண்டும். எண்களில், ஒற்றைப்படையில் இருக்கும் எண்களை பிரிக்க முடியாது. அதுப்போல தான் தாலியில் இருக்கும் விஷயங்கள் ஒற்றைப்படையில் இருந்தால் கணவன் மனைவியை பிரிக்க முடியாது என்று சொல்வார்கள். தாலியில் சேர்க்கக்கூடிய குண்டு, கருமணி, பவளமணி இதுப்போன்ற பல்வேறு விதமான உருக்குகள் சேர்ப்பார்கள்.

கணவன் மனைவி ஒற்றுமையாக இருப்பதை வெளியில் இருந்து பார்ப்பவர்களால் கண் திருஷ்டி ஏற்படக்கூடும். அதை தடுக்க தாலியில் கருமணியை பயன்படுத்த வேண்டும். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்க வேண்டும், செல்வம் பெருக வேண்டும் என்று எண்ணுபவர்கள் பவளமணியை தாலியில் சேர்க்க வேண்டும். தாலியை ஒற்றைப்படையில் வரும்படி 1 பவுன், 3 பவுன், 5 பவுன், 7 பவுன் என்று ஒற்றைப்படையில் தங்கத்தில் தாலி செயின் எடுத்துக்கொள்வது நல்லது.

இதையும் படியுங்கள்:
கொய்யா இலை டீ குடிச்சிருக்கீங்களா மக்களே?
Thali

தாலியை பெரும்பாலும் தங்கத்தில் தான் அணிந்திருப்பார்கள். ஆனால், சிலர் தாலியை வெள்ளியில் அணிந்திருப்பார்கள். வெள்ளி மகாலக்ஷ்மியின் மற்றும் சுக்கிரனின் அம்சமாக கருதப்படுகிறது. தங்கத்தில் தாலி அணிந்திருப்பது எப்படி அதிர்ஷ்டமான பலன்களைத் தருமோ, அதேப்போல தான் தாலியை வெள்ளியில் அணிந்திருந்தாலும் நல்லது என்று சொல்லப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
டிரெண்டாகி வரும் 'கார்டிசால் காக்டைல்'... அப்படி அதில் என்ன தான் இருக்கு?
Thali

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com