தும்மல்...
தும்மல்...Image credit - krishijagran.com

ஒரு தும்மலுக்குப் பின்னால் இப்படி ஒரு அறிவியல் விளக்கமா?

மூக்கு (தும்மல்)

தூசிகள் மூக்கில் நுழைந்துவிட்டால் தும்மல் ஏற்படுகிறது. நாம் தும்மும்போது அனேகமாக ஏதோ ஒன்று மூக்கின் உட்புறத்தை உறுத்துகிறது அல்லது கிச்சு, கிச்சு மூட்டுகிறது. தும்மலுக்கு மற்றொரு பெயர் ‘ஸ்டெர் நியூட்டேசன்'. தும்மல் என்பது மூக்கில் ஏற்படும் உறுத்தலை உடல் வெளியேற்றும் ஒரு செயல்.

மூக்கின் உட்புறம் கிச்சு, கிச்சு மூட்டப்படும்போது மூளையில் உள்ள தும்மல் மையம் என்ற ஒரு தனிப் பகுதிக்கு இந்தத் தகவல் எடுத்துச் செல்லப்படுகிறது. இந்தத் தும்மல் மையம் தன் பங்கிற்குச் சம்பந்தப்பட்ட எல்லா தசைகளுக்கும் இந்தத் தகவலை அனுப்புகிறது. அவை அனைத்தும் ஒன்றுசேர்ந்து இயங்கி ஒரு வியக்கத்தக்க சிக்கலான நிகழ்ச்சி ஒன்றைத் தூண்டுகின்றன. இதையே நாம் தும்மல் என்கிறோம்.

அடிவயிறு, மார்பு, உதர விதானம், குரல் நாண்கள், தொண்டை இவற்றில் உள்ள தசைகள் இந்தச் செயலில் ஈடுபடுகின்றன.

சிலர் அதிக வெளிச்சம் பட்டஉடன் தும்முகிறார்கள். இதற்கு ஒளி தும்மல் என்று பெயர்.

மூக்கின் உட்புறத்தை உறுத்தும் எதுவும் தும்மலை தூண்டி விட முடியும். தூசி, குளிர், காற்று, மிளகு தூள், போன்ற சில சாதாரண பொருட்கள் இதில் அடங்கும்.

சளி பிடித்திருக்கும்போது அங்கே வைரஸ் கிருமிகள் தற்காலிகமாக ஓர் இடத்தை ஆக்கிரமித்துக்கொண்டு அதிகமான உறுத்தலை ஏற்படுத்துகின்றன. இதன் விளைவாக சில நேரங்களில் அங்கே வீக்கமும் ஏற்படலாம். சிலருக்கு ஒவ்வாமை இருக்கக்கூடும். அவர்கள் பூக்களில் உள்ள மகரந்த தூள், விலங்கு மேல் இருக்கும் முடி தூள்கள் போன்றவை படும்போது தும்முகிறார்கள்.

தும்மல் வரபோகிறது ஆனால், அது வராமல் சிக்கிக்கொண்டிருக்கும் வேளையில் ஒரு பிரகாசமான வெளிச்சத்தைப் பார்த்தால் ஒரு தும்மல் போட்டு, அதிலிருந்து விடுபடலாம்.

கால் (மரத்தல்)

ஒரு காலை மடித்து அதன் மேல் உட்கார்ந்து 15 நிமிடம் கழித்து கால் விசித்திரமான உணர்ச்சியில் இருந்தால் கால் உணர்ச்சி அற்றுபோய் விட்டது என்று பொருள். கால் கொஞ்சம் கனத்துபோனது போலவும், மரத்துபோனது போலவும் அல்லது  ஊசி குத்துவதுபோலவும் இருப்பதை உணரலாம். காலுக்கு ரத்த ஓட்டம் நின்று போனது என்று பலர் கூறுவார்கள்.

இதையும் படியுங்கள்:
பிளஸ் சைஸ் பெண்களுக்கு ஏற்ற ஆடை வடிவமைப்புகள்!
தும்மல்...

ஆனால், குற்றம் குறைகள் எல்லாம் நரம்புகள் மீதுதான். நரம்புகள் சிறிய நூல் இழைகளைப்போல அல்லது கம்பிகளைப்போல உடம்பு முழுவதும் பரவிக் கிடக்கின்றன. அவை நுட்பமான வலைப்பின்னலாக அமைந்துள்ளன. அவை மூளைக்கும், உடலின் பல்வேறு உறுப்புகளுக்கும் இங்கும், அங்கும் செய்திகளைச் சுமந்து செல்கின்றன. நாம் கால் மீது கால் போட்டு உட்காரும்போது அந்தப் பகுதியில் உள்ள நரம்புகளைத் தற்காலிகமாக அழுத்தி விடுகிறோம். அந்தச் சமயத்தில், இந்த நரம்புகளால் மூளைக்கு தகவல் அனுப்ப முடியவில்லை.  அந்த நேரத்தில் தொடர்பு துண்டிக்கப் படுகிறது. அந்தப் பகுதி மரத்துப் போய்விடுகிறது.

நாம் தொலைபேசியில் பேசும்போது மறுமுனையில் இருந்து பேசுபவர் பேச்சைத் துண்டித்துவிட்டு தொலைபேசியை வைத்துவிட்டால் தொலைபேசியில் நாம் பேசிக்கொண்டு இருப்போம். அங்கிருந்து பதில் ஏதும் வராது. அதுபோலத்தான் கால் பாதத்தால் பதில் எதுவும் கூற முடியாது.

logo
Kalki Online
kalkionline.com