பெண்கள் தாய்மைப்பேறு அடைய வயது வரம்பு உண்டா?

Pregnancy
Pregnancy

உலகில் வாழும் பெண்கள் அனைவருக்கும் தாய்மைப்பேறு என்பது அதிக மகிழ்ச்சியை அளிக்கக் கூடிய வரமாகும். தற்போதைய காலகட்டத்தில் பெண்கள் தாய்மைப்பேறு அடையும் வயது சீராக இல்லை எனலாம். வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில், அனைத்திலும் கலப்படங்கள் தான் நிறைந்துள்ளது. இந்தக் கலப்படத்தில் இருந்து உணவுப் பொருட்களும் தப்பவில்லை. சுவைக்காக மட்டுமே சாப்பிடும் இன்றைய தலைமுறையினர், ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவதில்லை. இதன் விளைவு தான் எண்ணற்ற நோய்களின் வரவு. இதனால் தாய்மை அடையும் பெண்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.

மகப்பேறு உலகில் முன்னோர்களின் பலவிதமான நம்பிக்கைகளும், அனுபவங்களும் இன்றுவரை நீடிக்கிறது. நவீன மயமாகி வளர்ந்து கொண்டிருக்கும் உலகில், பலருக்கும் எட்டாக்கனியாக இருக்கிறது இந்த மகப்பேறு பாக்கியம். இதனால், செயற்கை முறையிலேயே தாய்மைப்பேறு அடையும் நிலைமைக்கு தள்ளப்படுகிறது மனித சமூகம். இருப்பினும், எந்த வயது வரை கருவுறலாம் என்ற கேள்வி அனைத்துப் பெண்களுக்கும் இருக்கும். பெண்களின் உடல்நிலை, மருத்துவ நிலை மற்றும் சமூகப் பொருளாதார நிலைகளே இதனைத் தீர்மானிக்கிறது.

திருமணம் முடிந்த தம்பதியர், வாழ்வில் நல்ல நிலைமைக்கு வந்த பிறகு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் எனத் தள்ளிப் போடுவதுண்டு. ஆனால், இன்றைய காலகட்டத்தில் அப்படித் தள்ளிப் போடுவது நல்லதல்ல. உலகளவில் 30 வயதைக் கடந்தும் தாய்மை அடையாமல் இருக்கும் பெண்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக சில ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

மருத்துவர்களின் ஆலோசனைப்படி அதிகபட்சம் 35 வயதிற்குள் தாய்மைப்பேறு அடைந்து விட வேண்டும். இல்லையேல் சில நடைமுறை சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கும். 35 வயதைக் கடந்த பிறகு தாய்மைப்பேறு அடைவதை அதிக வயதில் தாய்மைப்பேறு என அழைக்கின்றனர். பொதுவாக பெண்களுக்கு வயது ஆக ஆக தாய்மைப்பேறு இயற்கையாகவே குறையும். 35 வயதுக்கு மேல் பெண்களின் கருமுட்டையின் தரம் மற்றும் திறன் மெல்ல மெல்ல குறையத் தொடங்கும். 40 வயதைக் கடக்கும் போது, கருமுட்டையின் தரம் மோசமான அளவில் குறைவது உறுதி.

இதையும் படியுங்கள்:
தாய்மை அழகானது!
Pregnancy

வயதான பிறகு, பெண்கள் தங்களின் சொந்த கருமுட்டையைக் கொண்டு தாய்மைப்பேறு அடையும் விகிதம் குறைவாக இருக்கிறது. வயதான தம்பதியருக்கு பிறக்கும் குழந்தைகளின் ஆரோக்கியம் சற்று பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அதிலும் சில குழந்தைகளுக்கு மரபியல் தொடர்பான பாதிப்புகளும் ஏற்படும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஆகையால், வயதான பெண்கள் கருவுற்றிருக்கும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இல்லையேல் அது தாய், சேய் என இரண்டு உயிர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும். மேலும் வயதான தம்பதியருக்கு பிறக்கும் குழந்தைகளை கவனமுடன் பார்த்துக் கொள்ள வேண்டியதும் அவசியமாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com