கட்டுடல் தரும் கடுக்காய்

கட்டுடல் தரும் கடுக்காய்

கடுக்காயில் நார்ச்சத்து, புரதம், இரும்பு, கால்சியம், துத்தநாகம், மெக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் பி1, பி2, சி, டி, ஈ, கே, ஃபோலேட், ரிபோஃப்ளேவின், தயாமின், பாஸ்பரஸ், தாமிரம், மாங்கனீஸ், செலினியம், அயோடின், குரோமியம், நிக்கல், கோபால்ட், வெனடியம், போரான், புளோரின், குளோரின் மற்றும் சோடியம், குளோரைடு ஆகியன அடங்கியுள்ளன.

கடுக்காய் இருதயக் கோளாறுகளின் அபாயத்தைக் குறைக்கிறது. கடுக்காய் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இதயம் தொடர்பான பல்வேறு நோய்களைத் தடுக்கலாம்.

கடுக்காய் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை மேம்படும். இது கண்புரை, கிளௌகோமா போன்றவற்றை குணப்படுத்துகிறது.

2 கிராம் கடுக்காய்ப் பொடியை வெது வெதுப்பான தண்ணீருடன் மாலையில் அருந்தி வந்தால், மஞ்சள் காமாலை நோய் நீங்கும்.

கடுக்காய், மார்பக புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய் போன்றவற்றின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.

கடுக்காய்ப் பொடியைக்கொண்டு பல் துலக்கினால், ஈறு வலி குணப்படுவதோடு ஈறில் இருந்து வரும் ரத்தம் நிற்கும்; பல்லும் உறுதியாகும்.

கடுக்காய் அனைத்து வகையான சுவாச பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமைகிறது. ஆஸ்துமா, ஜலதோஷம், இருமல் மற்றும் காய்ச்சல், மூச்சுக்குழாய் அலர்ஜி போன்ற சுவாச பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிப்பதில் மிகமுக்கிய பங்கு வகிக்கிறது.

கடுக்காய் வாயிலும் தொண்டையிலும், இரைப்பையிலும், குடலிலும் உள்ள புண்களை ஆற்றிடும் வல்லமை பெற்றது.

கடுக்காய் அதிக அளவு புரதம் மற்றும் தாதுக்களைக் கொண்டுள்ளது, இது முடி வளர்ச்சியை ஊக்குவிக்க உதவுவதோடு, முடி உதிர்வையும் தடுக்க உதவுகிறது.

கடுக்காய் பசியைத் தூண்டி இரத்தத்தைச் சுத்தப்படுத்தி வாத, பித்த, கபம் ஆகியவற்றால் வரும் ஏராளமான நோய்களைக் குணப்படுத்தும். 

கடுக்காய்ப் பொடியை சம அளவு நெய்யில் வறுத்து, இந்து உப்புடன் கலந்து 2 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால், அல்சர் குணமாகும்.

கடுக்காயில் உள்ள ஆக்சிஜனேற்ற தன்மை மனிதனின் நினைவுத்திறன், கவனம், அமைதி, விழிப்புணர்வு ஆகியவற்றை அதிகரிக்கின்றது. மூளையின் பதற்றத்தை குறைக்கிறது.

கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com