காய்கறிகள், பழங்கள் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை.

காய்கறிகள், பழங்கள் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை.

Published on

தினசரி உணவில் இடம்பெறும் காய்கறி, பழங்களை தேவைக்கேற்ப அவ்வப்போது வாங்கினால் போதும். கடைகளிலோ வீட்டிலோ அவை இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் சத்துக்களை இழக்கின்றன. நிறைய வாங்கி ஃபிரிட்ஜில் திணிப்பதால் பயனில்லை.

ஃப்ளூரசன்ட் விளக்குகளின் கீழே வைக்கப்பட்டுள்ள பழங்கள், ரசாயன மாற்றம் ஏற்பட்டு, அவற்றில் உள்ள சத்துக்கள் குறைந்து விடுவதால், அவற்றை வாங்குவதை தவிர்த்தல் நல்லது.

நிலத்துக்கடியில் விளையும் கிழங்கு வகைகள் மண்மூடி இருப்பதையே வாங்க வேண்டும். வீட்டில் இரண்டு மூன்று நாட்கள் வைத்திருக்க நேர்ந்தால் கழுவாமல் மண்ணுடன் வைத்தால் கெடாமல், காய்ந்து போகாமல் இருக்கும்.

வரில் போட்டு வைத்திருக்கும் பழங்கள், காய்களை விட, வெளியே கொட்டி வைத்த காய்கறிகளே சிறந்தது. தரமானதை பார்த்து வாங்கலாம்.

வெண்டைக்காய், வெள்ளரி போன்றவற்றை தொட்டுப் பார்த்து இளசாக உள்ளவற்றை வாங்கலாம்.

முள்ளங்கி, காலிஃபிளவர் போன்ற காய்களை வாங்கும் போது, நிறைய இலைகள் உள்ளதாக பார்த்து வாங்க வேண்டும். அப்போதுதான் நிறைய புரதச்சத்தும் இருக்கும், சுவையாகவும் இருக்கும், கெடாமலும் இருக்கும்.

மால்களிலும், டிபார்ட்மென்டல் ஸ்டோர்களிலும் காய்கறிகள், பழங்கள் வாங்காமல், வீட்டு வாசலில் வரும் காய்கறி, பழக்காரர்களிடம் வாங்கி, சிறு வியாபாரிகளை ஊக்குவிக்கலாமே.

logo
Kalki Online
kalkionline.com