
“ஆன்லைன்ல (Online) காதலிக்கிறதாச் சொன்னியே… இப்ப என்ன ஆச்சு?”
“ஒன்லைன் (One line) காதலாப் போயிடுச்சுடி…”
****************************
“கல்யாணப் பத்திரிகையிலே கூகுள் பே, பேடிஎம் விவரங்களெல்லாம் கொடுத்திருக்கீங்களே எதுக்கு?”
“கல்யாணத்துக்கு நேரடியா வர முடியாதவங்க, மொய்ப் பணத்தை அனுப்ப வசதியா இருக்கட்டுமேன்னுதான்…”
****************************
“பையனுக்குப் பார்க்கப்போற பொண்ணு ஆன்லைனில் அதிக ஆர்வம் கொண்டவள்னு எப்படிச் சொல்றே...?”
“பேஸ்புக், டுவிட்டர், வாட்சாப், இன்ஸ்டாகிராம், டெலிகிராமுன்னு அனைத்து சோசியல் மீடியாவிலயும் அக்கௌண்ட் வச்சிருக்காளே...!”
****************************
”அவரு ரியல் எஸ்டேட் பிசினஸ்தான் பண்றாருன்னு எப்படிக் கண்டுபிடிச்சே…?”
“நாம எதைச் சொன்னாலும், அது 'நமக்கு அருகிலேதான் இருக்கு'ன்னு அவர் சொன்னதை வச்சுத்தான்…!”
****************************
“நம்ம நகைக் கடைக்கு வந்த பெண்கள், புது மாடல் நகை எதுவும் இங்கே இல்லைன்னு சொல்லிக் கோவிச்சுட்டுப் போறாங்களே… அவங்களுக்கு எந்த மாடல் நகை வேணுமாம்?”
“அவங்களுக்குத் திராவிட மாடல் நகை வேணுமாம்…”
****************************
”அரசியலில் வாரிசு பிரச்னை வருதுன்னு துறவிகளைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தது தப்பாப் போச்சு…!”
“ஏன்… என்ன ஆச்சு?”
“துறவிகளான தலைவர்கள், தங்களுக்கு அடுத்து தங்களது சீடர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்கிறார்கள்…!”
****************************
“மகளிரணி, இளைஞரணி மாதிரி, அந்தக் கட்சியிலே மதுப்பிரியர் அணின்னு ஒண்ணு புதுசாத் தொடங்கியிருக்காங்களாம்.…!”
"???????"
****************************
“அந்தக் கோயில் வாசலில் இருக்கிற பிச்சைக்காரர்கள் டெவலப்பாயிட்டாங்கன்னு எப்படிச் சொல்றீங்க…?”
“முன்னாடி தட்டை வச்சுப் பிச்சை கேட்டவங்க… இப்ப கியூஆர் கோட் அட்டையை வச்சு பிச்சை கேட்கிறாங்களே…!”
****************************
“அந்த இன்ஸ்பெக்டர் முதலில் கம்ப்யூட்டர் இஞ்சினியரா இருந்திருப்பாருன்னு எப்படிச் சொல்றே...?”
“பெண்ணைக் காணோமுன்னு கம்ப்ளெயிண்ட் குடுத்தா, வீட்டுக்குப்போய்க் கூகுளிலத் தேடிப்பாருங்கன்னு சொல்றாரே...!”
****************************
“இந்த டாக்டர் போலி டாக்டரா இருப்பாரோன்னு சந்தேகமா இருக்கு…”
”எதை வச்சுச் சொல்றீங்க…?
“புற்று நோய்க்குக் கரையான் புற்று மண்ணைப் பற்று போட்டாச் சரியாப் போயிடும்னு சொல்றாரே…!”