

சிலர் வாழ்வில் சில நெறிமுறைகள் சில கோட்பாடுகள் இவைகளோடு துவங்குவாா்கள்.
அந்த வகையில் பலரது வரலாறு அவரது மறைவுக்குப் பின்னாலும் பேசப்படும். பேசப்படவேண்டும். அப்படி ஒரு வரம் அனைவருக்கும் அமையாது.
அவரது மறைவுக்குப் பின்னாலும் அவரது புகழ் தலைமுறைகளைத்தாண்டி போ் சொல்லிவருவது சிறப்பானதே!
அது அவரது ஊக்கத்திற்கும், கடினாமான உழைப்புக்கும் கிடைத்த வெற்றி.
அது பலவிழுதுகளை விட்ட பொியதொரு ஆலமரம். அந்த விழுதைப்பிடித்து வளர்ந்தவர்கள் அதிகம் .
அந்த வகையில் ஊாின் பெயர் விளங்க போ்சொல்லும் நபராய் அப்போதைய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் (தற்போதைய மயிலாடுதுறை) மணல்மேடு, புத்தமங்கலம் கிராமத்தில்,
அமரர் கல்கி அவர்கள் அவதரிக்கிறாா்.
இன்று அகில உலகமும் அவரை புகழ்கிறதே!
அதுவே ஆண்டவனின் அற்புத விஷயமாகும்.
ஆம், ரா. கிருஷ்ணமூா்த்தி அவர்களின் பிறந்தநாளாம் செப்டம்பர் 9ல் அவரது புகழ்பாட என்னதவம் செய்தேனோ!
மணல்மேடு மாாியாத்தா எல்லாம் அவள் செயலே.
மரியாதைக்குாிய பெருமகனாா் ராமசாமி அய்யர் - தையல்நாயகி அம்மையாா் இவர்களுக்கு அருமை மகனாய் அவதரித்த அஷ்டாவதானியே எங்கள் அமரர் கல்கி அவர்கள்.
(9.9.1899 - 5.12.1954)
அவர் மணல்மேடு புத்தமங்கலத்தில் திண்ணைப் பள்ளியில் சரஸ்வதி தேவியின் அருளால் படிப்பு துவங்கி, மயிலாடுதுறை தேசியபள்ளியில் தொடர்படிப்பு.
பிறகு மெட்ராஸ் பயணம். பத்திாிகையாளராய் வாழ்வின் ஆரம்பம். கல்கி எனும் புனைப்பெயருடன் எழுத்துப்பணி துவக்கம்.
அவர் ஒரு அவதார புருஷா். பொன்னியின் செல்வன் தந்த புரட்சியாளா்.
எழுத்தே உயிா்மூச்சென வாழ்ந்த வைரம்.
சிறுகதைகளின் சிந்தனைச்சிற்பி. புதினங்களின் புதியபூமி....
என அடுக்கிக்கொண்டே போகலாம்.
பயணக்கட்டுரை தந்த பன்முகம். ஆன்மிக படைப்புகளின் அவதார புருஷா்.
அலை ஓசை தந்த அணையாவிளக்கு. வரலாற்றுப் புதினங்களின் வரலாற்று நாயகன் .
கதைகளில் கதாபாத்திரங்களை உயிரோடு நிறுத்திய கலங்கரை விளக்கம்.
சுதந்திரப் போராட்ட தியாகி. உப்பு சத்தியாகிரகம் கண்ட நாயகன்.
வெள்ளையனே வெளியேறு இயக்கம் கண்ட வெற்றியாளன்.
திருச்சியில் சிறைவாசம். கிடைத்த நட்போ ஶ்ரீமான் சதாசிவம். இவர்களின் படைப்பில் வெளிவந்த கல்கி சஞ்சிகை.
போராளி மட்டுமல்ல, நகைச்சுவை நவரசம் தந்த நல்லவர், வல்லவர், எழுத்தால் தைாியமான தலையங்கம் தந்தவர்.
இசை விழாக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பன்முகமான கட்டுரை தந்ததே கல்கிதான்.
கல்கி அவர்கள் சோதனைகள் பல தாண்டிய சோழராஜன்.
கள்வனின் காதலியில் முத்திரை பதித்த முதன்மையானவர்.
பலரது முகத்திரையை கிழித்த முகில். தர்மம் கடைபிடித்த தங்கமகன். தேசப்பற்றின் உயிர்நாடி.
எளியவர், வலிமைமிக்கவர்,
1924ல் ருக்மணி அவர்களுடன் திருமண பந்தம்.
ஆசைக்கு ஒன்று ஆனந்தி, ஆஸ்திக்கு ஒன்று ராஜேந்திரன்.
நவசக்தி இதழில் துணை ஆசிாியராய் கால் பதிப்பு.
ராஜாஜியின் தோளாடு தோள் கண்ட தோழர் .
ஆனந்த விகடனில் முத்திரை பதிப்பு.
எழுபத்திஐந்திற்கு மேற்பட்ட சிறுகதைகள். சரித்திர நாவல்கள் , பல புதினங்கள் அவைகளில் சில வெள்ளித்திரையில் வலம் வந்ததும் பெருமையிலும் பெருமைதானே!
எழுத்துலகில் சரித்திரம் படைத்த திருமகனாாின் புகழைப்பாட அவர்தம் பிறந்த நாளில் படைப்பை பயத்துடன், பரவசத்துடன், படைக்கிறேன்.
அந்த அவதார புருஷனின் ஆசியோடு கல்கி ஆன்லைன் அவையில் பணிவுடன் சமர்பிக்கிறேன்.
அமரர் கல்கி புகழ் என்றும் நிலைத்திருக்கும்,
அவரது இதழில் தொடர வாய்ப்பு தந்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி.
அவர்தம் பாதையில் பயணிக்க வாய்ப்பளித்த நல்லவர் வல்லவர்களுக்கு வாழ்நாள் நன்றி!