
"சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்"என்பது கந்த சஷ்டியில் விரதமிருந்தால் ''அகப்பையாகிய கருப்பையில், குழந்தை இல்லாதவர்களுக்கு கரு உண்டாகும் என்பதன் அர்த்தம்’’. கந்த சஷ்டி விரதம் தொடர்ந்து இருந்தால் வாழ்க்கையில் எல்லா நலன்களையும் பெறலாம்.
வசிஷ்ட மாமுனிவர் முசுகுந்தச் சக்ரவர்த்திக்கு சஷ்டி விரத மகிமையையும், வரலாற்றையும், விதிமுறை களையும் உபதேசித்த பெருமை உடையது சஷ்டி.
அரசர்கள், தேவர்கள், முனிவர்கள் பலரும் இந்த விரதம் அனுஷ்டித்து வேண்டிய வரங்களை பெற்றதோடு, இம்மை, மறுமை, நீங்கி இன்பம் ஆகியவற்றை பெற்ற பெருமை சஷ்டிக்கே உரியது.
சஷ்டியில் விரதம் இருந்தால் அகப்பையில் குழந்தை பாக்கியம் வரும். இதனால் சஷ்டி விரதம் என்றாலே குழந்தை வரம் தரும் விரதம் என சொல்லப்படுகிறது.
கந்த சஷ்டி திதியை மட்டும் கேட்கும் வரங்களைத்தரும் வலிமை வாய்ந்ததாகவும், சக்தி வாய்ந்ததாகவும், பக்தியுடன் சஷ்டி விரதம் இருந்தால் கை மேல் பலன் கிடைக்கும்.முருகன் அருள் எப்போதும் துணை நிற்கும்.
சஷ்டி திதி மகிமை. மாதம் இரண்டு சஷ்டி திதி வந்தாலும் முருகனுக்குரிய ஐப்பசி சஷ்டி திதி மட்டுமே மகத்துவம் அதிகம். சாஸ்திரப்படி ஐஸ்வர்யத்தை தரக்கூடியது 6 என்ற எண்.
6 ஆம் எண்ணுக்குரிய கிரகம் சுக்கிரன். திருமணம் வாகனம், வீடு மங்களகரமான விஷயங்களை தரக்கூடியவர் சுக்கிர பகவான்தான்.
எனவே, திதிகளில் 6வதாக வரும் சஷ்டி திதியில் விரதம் இருந்தால் 16 பேறுகளில் ஒன்றாக கருதப்படும் குழந்தைப்பேறு கிடைப்பதுடன் சஷ்டி திதி உகந்த நாளாக கருதப்படுகிறது.
சஷ்டி விரதம் இருக்கும் முறை:
குழந்தை பாக்கியத்தை அருளும் சஷ்டி விரதத்தை எளிமையாக வீட்டிலும், கோவிலிலும் கடைப்பிடிக்கலாம்.
திருச்செந்தூர் முருகன் கோவிலில் விரதம் இருப்பது கூடுதல் சிறப்பு. விரதம் ஒருவேளை உணவு சாப்பிட்டும், உபவாசம் இருக்க முடியாதவர்கள் பால், வாழைப்பழப் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். முருகனுக்குரிய சம்பி, திருப்புகழ் பாடலை படிக்கலாம். 6 நாள் விரதமிருந்து முடிக்கவேண்டும்.
சஷ்டியில் குழந்தைப்பேறு பாடல்:
செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த
திருமாது கெர்ப்ப... முடலூறித்
தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில்
திரமாய ளித்த... பொருளாகி
மகவாவி னுச்சி விழியாந நத்தில்
மலைநேர்பு யத்தி... லுறவாடி
மடிமீத டுத்து விளையாடி நித்த
மணிவாயின் முத்தி... தரவேணும்
முகமாய மிட்ட குறமாதி னுக்கு
முலைமேல ணைக்க... வருநீதா
முதுமாம றைக்கு ளொருமாபொ ருட்குள்
மொழியேயு ரைத்த... குருநாதா
தகையாதெ னக்கு னடிகாண வைத்த
தனியேர கத்தின்... முருகோனே
தருகாவி ரிக்கு வடபாரி சத்தில்
சமர்வேலெடுத்த... பெருமாளே.
இதனை பாடி முருகனின் கந்த சஷ்டி நாளில் அருள் பெறலாம். சஷ்டியில் விரதம் இருந்து குழந்தைபேறு பெறலாம்.