கஷாயம் ஆறு... ஆரோக்கியம் நூறு!

கஷாயம் ஆறு... ஆரோக்கியம் நூறு!

Published on

1. தூதுவளை, கற்பூரவல்லி, துளசி இம்மூன்றையும் சமஅளவு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் சளி சேராது, இருந்தாலும் மலத்துடன் வெளியேறிவிடும்.

2. வெற்றிலை – 4, மிளகுத்தூள் ¼ தேக்கரண்டி, கொதிக்க வைத்துக்குடித்தல் நாக்கு சுத்தமாகும், கபம் சேராது.

3. வெந்தயம், தனியா சமஅளவு சேர்த்து வறுத்து பொடிசெய்து வைத்துக்கொண்டால், ஒரு தேக்கரண்டி போட்டு பனங்கற்கண்டு, சிறிது உப்பு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் பித்தநீர் வெளியேறிவிடும்.

4. கடுக்காய் பொடி மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் உடல் உஷ்ணம் சீராக இருக்கும்.

5. சுக்கு, மிளகு, சீரகம், ஓமம் சேர்த்து வறுத்து பொடிசெய்து வைத்துக்கொண்டால், ஒரு தேக்கரண்டி போட்டு பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் ஜீரணம் நன்றாக ஆகும், வயிறு சம்மந்தப்பட்ட நோய்கள் தீரும்.

6. முருங்கைக்கீரை, வெங்காயம், தக்காளி, பூண்டு, மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க வைத்து, வடிகட்டி குடித்தால், உடலுக்கு இரும்பு சத்து கிடைக்கும்.

logo
Kalki Online
kalkionline.com