கவிதை - அடுப்பங்கரை பூனைகள்!

Kavithai Image
Kavithai Imagepixabay.com

ல்லறமாம் நல்லறம்

இனிதாய்க் கால்வைப்பு.

கிழ்வாய்ப் புகுந்த

மனைவிக்குப் பணி.

டுப்பங்கரையில் 

அட்டிட வேண்டும்.

ட்டதை நிரப்பணும்

அழகாய்க் கலனில்!

சியோடு அட்டு

பசித்தோர்க்கு  நாளும்

புசித்திடக் கொடுத்து

புசித்திட வேண்டும்.

ழையதை முகர்ந்தே

பார்த்திட வேண்டும்.

கெட்டதை உண்டால்

கேடு உண்டாம்.

முகர்ந்தே அறிந்திடு

உகந்தே அட்டிடு.

டுமனையில் பூனையாய்

அடங்கியே பதுங்கணும்.

குட்டிகளை ஈன்ற

குதூகலப் பூனையாய்

குடும்பத்தில் உள்ளோர்க்கு

குதூகலத்தைத்

தந்திடணும்.

வனமாய் இருந்தே

காரியங்கள் ஆற்றிடணும்

ணவை மருந்தாக

ஊட்டச்சத்தோடு அட்டிட

விடியலில் விழிப்புநிலை

விரைந்தே அடைந்திடணும்.

நாளுக்கொரு சமையல்

நாமுமறிந்து சமைத்திடணும்.

இதையும் படியுங்கள்:
மாயம் செய்யும் முருங்கைக்கீரை நீர்.. இவ்வளவு விஷயம் இருக்கா இதுல?
Kavithai Image

றுசுவையோடு

அட்டதை

அளவாய் உண்டிடணும்.

ப்படி, அடுப்பங்கரை பூனையாய்

அடங்கியே

இருக்காமல்

புதுமை பலசெய்து

புரட்சிப்பெண்ணாய்

வாழ்ந்திடணும்.

-செ.கலைவாணி

மெல்போர்ன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com