
-கமலா முரளி
மூன்று மணி நேரத்தில்
முடியும் என்று தெரியும்!
கதையும், மாந்தரும், காட்சியும்
சிதையும், முடியும் எனத் தெரியும்!
பொய்யெனத் தெரிந்தும், மாயா
மெய்யெனவே காட்சியில் ஒன்றி,
பரிவு, பாசம் காட்டி, காதல் காட்டி,
பிரிவு, இழப்பு என துக்கம் காட்டி,
தாபம் கொண்டு, தாடி வளர்த்து,
கோபம் கொண்டு, பகை வளர்த்து,
சுபம் என வெள்ளித்திரை விழ,
திரை மறந்து நனவுலகு மீள்வோம்
நிதம் ஒரு படம் காணுகிறோமே!
இதம் அதில் கொள்கிறோமே!
வாழ்வெனும் திரைப்படத்தில்
வாழ்ந்தபடி நடித்துக்கொண்டே!