சிரி(று)கதை: புனிதா எனும் நியூஸ் சேனல்!!

வம்பும் கதைகளுக்கிடையே மறைந்திருக்கும் அசத்தல் சமையல் குறிப்புகளும் வாழ்க்கை உண்மைகளும்.
சிறுகதை
சிறுகதை Gemini image
என்.எஸ்.வி.குருமூர்த்தி

என்.எஸ்.வி.குருமூர்த்தி, ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலான எழுத்து அனுபவம் கொண்டவர். 1970 முதல் கல்கி, குமுதம், விகடன், தினமணி கதிர், இந்து தமிழ் திசை உள்ளிட்ட இதழ்களில் எழுதி வருகிறார். சிறுவர்மணியில் சுமார் 90 நாடகங்கள் வெளியாகியுள்ளன. எழுத்தாளர் சுஜாதா கையால் பரிசு பெற்றவர்.

Updated on: 
mangayar malar strip
Mangayar Malar

குப்புசாமி நகம் வெட்டிக்கொண்டு இருந்தார்.. மொத்தம் பத்து விரல்களில் வெட்டிய நகத் துண்டுகள் பிறை நிலா போல இருந்தன. கிழித்த காலண்டர் டெய்லி ஷீட்டில் அதை மடித்து குப்பையில் போடலாம் என முடிவெடுத்தார். 

மொத்தம் எட்டு தான் கைக்கு அகப்பட்டது. மீதம் இரண்டு துண்டுகளைத் தேடிய போது அவர் மனைவி கமலா கேட்டாள்..

 “நான் சொன்னது காதில் விழுந்துச்சா இல்லியா..”

தேடியபடியே “ஓ நல்லா விழுந்துச்சே.. ஏதோ வேலைக்காரி புனிதா பற்றிய சேதி சொன்னே..”

கமலா “எப்போ முழுசா காதில் வாங்கினீங்க நான் சொல்றதை.. புனிதா மருமகன் வீட்டில் சண்டை போட்டு அவ மகள் குமுதா கோவிச்சுக்கிட்டு அம்மா வீட்டுக்கு வந்திருக்காள் கைப் புள்ளையோட. நேத்து புனிதா என்னிடம் கதை கதையா சொல்லி ஆத்துப் போறாள்.. பத்து பவுன் நகை, பெரிய ஒல்லி டிவி, கட்டில் நுரை பஞ்சு மெத்தை, டபுள் டோர் ஃப்ரிட்ஜ், ஃப்ரண்ட் லோடிங் வாஷிங் மெஷின் எல்லாம் வாங்கித்தந்தாளாம்…” 

Loading content, please wait...