நெற்றிப் பொட்டு அதை எவ்வாறு அழகுபடுத்துவது என பார்ப்போமா!

நெற்றிக்கு பொட்டிட்டுக் கொள்வது....
நெற்றிக்கு பொட்டிட்டுக் கொள்வது....Image credit - padmagrahadurai.com

நெற்றிக்கு பொட்டிட்டுக் கொள்வது பெண்களின் எழிலுக்கு அற்புதமாக மெருகேற்றும். சில பெண்கள் நாகரீகம் என்ற பெயரால் பொட்டிடுவதை தவிர்க்க முயலுகிறார்கள். என்னதான் இயற்கை அழகு இருந்தாலும் செயற்கையாக அழகு செய்து கொண்டாலும் நெற்றிக்கு திலகமிட்டுக் கொள்ளாவிட்டால் அந்த அழகு ஏதோ ஒரு வகையில் பூரணத்துவம் பெறாதது போலவே தோன்றும் .

மிக சாமானிய அழகு படைத்த பெண்களும் மிக எளிய உடை உடுத்திய பெண்களும் நகைகள் அதிகமாக அணியாத பெண்களும் தங்கள் உடல் நிறத்திற்கு ஏற்ற வகையில் பளிச்சென நெற்றியிலே பொட்டிட்டுக் கொண்டால் அந்த ஒன்றே கும்மென புதுமையான எழிலை தோற்றுவிக்கும்.

பொட்டிடுவதன் மூலம் சற்று வயதான பெண்களும் இளமையான தோற்றத்துடன் திகழ முடியும்.

உடல் நிறத்திற்கும் உடை வண்ணத்துக்கும் ஏற்ப வண்ண வண்ண குங்குமம் அல்லது சாந்தினை பயன்படுத்தி பொட்டிட்டு கொள்வது பெண்களுக்கு எழில்  சேர்க்கும்.

இன்று வகை வகையாக பல வகையான டிசைன்கள் பொட்டுகள் கிடைக்கின்றன பொட்டுக்கள் வைத்துக் கொள்ள சோம்பல்படவே கூடாது.

குங்குமத்தை சாதாரணமாக நெற்றியிலிட்டுக் கொள்வதை விட கொஞ்சம் வெள்ளை வாசலின் முதலில் இட்டு அதன் மீது குங்குமத்தை பொட்டிட்டால் நீண்ட நேரம் அழியாமல் புத்தம் புதிதாக இட்டது போலிருக்கும்.

நெற்றி விசாலமாக அமையப்பெற்ற பெண்கள் பெரிய பொட்டாக வைத்துக் கொண்டால்தான் பாந்தமாக இருக்கும்.

குறுகிய நெற்றியை பெற்றவர்கள் சிறிய அளவிலேயே பொட்டிட்டு கொள்வதுதான் அழகாக இருக்கும்.

மிகுந்த சிவப்பு நிறமுடைய பெண்கள் கருநிற பொட்டு வைத்து கொண்டால் மிகவும் அழகாக இருக்கும்.

முகம் மேலும் கீழும் நீள வாக்காக உள்ள பெண்கள் நெற்றியில் வட்டமாக பொட்டிடாமல் நெற்றியின் அகல வாக்கில் ஒன்றரை அங்குல நீளத்துக்கு விபூதி பூச்சு போல் தடிப்பாக பொட்டிட்டு கொண்டால் நன்றாக இருக்கும்.

குறுகான முகஅமைப்பு பெற்றவர்கள் திருஷ்டி போட்டு எனப்படும் புள்ளியை வைக்காமல் இருப்பதுதான் நல்லது பரந்த முகங்களுக்கு தான் அது பாந்தமாக இருக்கும்.

கோவிலுக்கு செல்லும்போது வெறும் பொட்டாக இட்டுக் கொள்ளாமல் மேலும் விபூதியும் சிவப்பு நிற குங்குமம் இட்டுக் கொண்டால் அது பார்ப்போருக்கு உயர்வான மதிப்பை தரும்.

நெற்றியில் பாம்பு போன்ற நாகரிக ஸ்டிக்கர் பொட்டு வைத்து கொள்ள கூடாது. ஏனென்றால் புருவம் மத்திக்கு நேர் பின்னால் மூளையின் ஒரு பகுதியாக நெற்றிக்கண் சுரப்பி அமைந்துள்ளது இது மூளையின் ஒரு  முக்கிய பகுதி என அறிவியலாளர்கள் உணர்த்தி வருகிறார்கள். இதனை நெற்றிக்கண் என கூட சொல்லலாம். இந்த நெற்றிக்கண்ணுடன் தொடர்பு உள்ள புருவத்தின் மத்தியில் ஒரு சக்தி குவியும் இடமாகும். அதனால் கண்ட கண்ட பொட்டுகளை இடக்கூடாது.

இதையும் படியுங்கள்:
சமைத்து உண்பதால் உடலுக்கு அதிக ஆரோக்கியம் தரும் 10 காய்கறிகள்!
நெற்றிக்கு பொட்டிட்டுக் கொள்வது....

பெண்கள் மீது ஏற்படும் எதிர்மறை தாக்குதலை சரி செய்யும் சூட்சம சக்தி நெற்றி பொட்டுக்கு இருக்கிறது

சுமங்கலி பெண்களானால் கட்டாயம் குங்குமம் வைத்துக் கொள்ள வேண்டும். அப்படி இல்லை என்றால் ஏதாவது ஒரு போட்டு நெற்றியில் இல்லாமல் இருக்கவே கூடாது.

நெற்றியில் பொட்டு வைப்பதால் கண் படுதல் அல்லது திருஷ்டி எனப்படும் எதிர்மறை எண்ண அலைகளையும் எண்ணங்களையும் தவிர்க்க முடியும். ஹிப்னடிசம் முதலிய மனோவசியங்கள் புருவம் மத்தியில் பொட்டு வைத்தவரை பாதிக்காது.

பெண்களே இனி நெற்றியில் பொட்டு இல்லாமல் இருக்காதீர்கள் விதவிதமாக பொட்டு வைத்து கொண்டாலும் பரவாயில்லை ஆனால் பொட்டு இல்லாத நெற்றி இருக்கவே கூடாது. பண்டிகை நாட்களில் பாரம்பரிய குங்குமம் இட்டுக் கொள்ளுங்கள் அல்லது சாந்து அல்லது சிவப்பு நிற ஸ்டிக்கர் பொட்டுகளை இட்டுக் கொள்ளுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com