
தினமும் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி இறை வழிபாடு செய்ய வேண்டிய வழக்கம் கட்டாயம் இருக்க வேண்டும். இப்படி செய்யும்போது வீட்டில் எந்த துன்பமும் நெருங்காது. இப்படியாக தீபம் ஏற்றி பூஜை அறையில் வழிபாடு செய்யும்போது ஒரு சிறிய தட்டில், ஒரே ஒரு சிறிய துண்டு வெல்லம் வைத்து விட வேண்டும். வெல்லத்தை பொடி செய்து ஒரு ஸ்பூன் அளவு வைத்தால் கூட போதும்.
அதன் பின்பு ஒரு தீபம் ஏற்றி வைக்கவேண்டும். பின்பு குலதெய்வத்தை மனதார பிரார்த்தனை செய்துகொள்ள வேண்டும். பின்பு மகாலட்சுமியையும் அஷ்டலக்ஷ்மி களையும் மனதில் நினைத்துக்கொண்டு ‘சந்தோஷம் வசிவசி’ என்ற வார்த்தையை மூன்று முறை சொல்லிவிட்டு நமஸ்காரம் செய்து இறுதியாக உங்கள் பூஜையை நிறைவு செய்து கொண்டு, பிரசாதமாக வைத்த இந்த வெல்லத்தை உங்கள் நிலை வாசல்படிக்கு வெளியே உள்ள இடத்தில் போட்டு விடுங்கள். அந்த வெள்ளத்திற்கு நிச்சயமாக எறும்புகள் மொய்க்கும்.
அந்த எறும்புகள் வெல்லத்தை தினம்தோறும் வந்து சாப்பிட தொடங்கும். இப்படி செய்து வர உங்களுடைய வாழ்க்கையில் தினம் தினம் சந்தோஷம் பொங்கி வழியும். வெல்லத்திற்கு பதிலாக வேறு எந்த இனிப்பான பொருட்களையும் வைக்க வேண்டாம். அதாவது நாட்டு சர்க்கரை, டைமண்ட் கற்கண்டு, வெள்ளை சர்க்கரை என்று வேறு எந்த இனிப்பையும் வைக்காதீர்கள். மண்டை வெல்லம் கடையில் கிடைக்கும். அதை வாங்கி இந்த பரிகாரத்திற்க்கு பயன்படுத்த வேண்டும்.
தினமும் இத்தனை நாள்தான் என்ற கணக்கெல்லாம் கிடையாது. இந்த பரிகாரத்தை யார் வேண்டுமென்றாலும் செய்யலாம். உங்களுடைய வாசல்படியில் போட்ட வெல்லத்தை எறும்புகள் சாப்பிட சாப்பிட உங்களுடைய முன் ஜென்ம பாவங்கள் குறையும். ஜாதக கட்டத்தில் கஷ்டம் கொடுக்கக் கூடிய கிரகங்களின் தாக்கம் குறையும். வீட்டில் சுப காரிய தடைகள் இருந்தால் அந்த பிரச்சனைகள் எல்லாம் விலகும். பணக்கஷ்டம் மனக்கஷ்டம் எல்லாம் சரியாகிவிடும். சந்தோஷம் உங்கள் வசமாகும்.
பகிர்வு: செளமியா சுப்ரமணியம்.