கப்பிள் (Couple) தெரியும்... அதென்ன த்ரூப்பிள் (Throuple) ?

Lifestyle articles
Lifestyle articlesimage credit - people.com
Published on

னடாவின் க்யூபெக் மாகாணத்தில், இரண்டு பேருக்கு மேற்பட்ட பெற்றோர் உள்ள குடும்பங்களுக்கு (Multi-parent families) அரசு சட்டபூர்வ அனுமதி வழங்கி நடைமுறைப்படுத்தியுள்ளது. சமீபத்திய ட்ரெண்டிங். பழைய பாரம்பரிய முறைப்படி இருந்து வந்த, ஒரு ஆணும் ஒரு பெண்ணும் சட்டப்படி உறவில் இணைந்து குழந்தைகளுக்குப் பெற்றோராயிருந்து வளர்த்து வரும் முறை அறவே மாறிவிட்டது.

அதற்குப் பதில் இரண்டிற்கும் மேற்பட்ட நபர்கள் உறவில் இணைந்து Multi-parent குடும்ப முறையை உருவாக்கி வருகின்றனர். தற்போது, சமூக ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட 'கப்பிள்ஸ்' முறை மறைந்து 'த்ரூப்பிள்' முறை பரவலாக பின்பற்றப்பட்டு வருகிறது. இதில் ஒரு பெண் இரண்டு ஆண்களை அல்லது ஒரு ஆண் இரண்டு பெண்களை காதலிக்கவும், கல்யாணம் செய்துகொண்டு குடும்பம் நடத்தவும் அனுமதி உண்டு.

பிறக்கும் குழந்தைகளுக்கு, குடும்ப அமைப்பின் பங்குதாரர் என்ற முறையில் மூவரும் பொறுப்பேற்று, பிள்ளைகளின் நலனில் அக்கறை கொண்டு வளர்த்து வருவார்கள். க்யூபெக்கை தொடர்ந்து ஒண்டாரியோ, பிரிட்டிஷ் கொலம்பியா ஆகிய மாகாணங்களிலும் த்ரூப்பிள் முறை குடும்ப அமைப்பு மற்றும் Multi-parent families அமல்படுத்தப்பட்டுள்ளன.

த்ரூப்பிள் முறையிலான காதல் உறவில், சம்பந்தப்பட்ட மூவரும் சம அளவில் ஒருவருக்கொருவர் பொறுப்புடனும் அர்ப்பணிப்புடனும் செயலாற்ற கடமைப்பட்டவர் களாகின்றனர். இதில் சம்பந்தப்பட்ட மூவரும் ஒரே பாலினத்தை சேர்ந்தவராகவும் இருக்கலாம். இந்த கூட்டணியின் பார்ட்னர்கள் எவராயிருப்பினும், அன்பு, ஆதரவு, தனித்துவம் போன்றவை மூவருக்குள்ளும் சரிசமமாகப் பகிர்ந்துகொள்ள வேண்டியதும், அதற்கு அவர்கள் மனப்பூர்வமாக சம்மதிப்பதும் அவசியம். மூவரும் ஒரே வீட்டில் தங்கி, நிதிச் சுமையைப் பகிர்ந்து, குழந்தைகளின் வளர்ச்சியில் ஆர்வமுடன் பங்கேற்பது அவர்களின் கடமையாகிறது.

இதையும் படியுங்கள்:
குழந்தைகளுக்கு கதை சொல்லுங்க... அவங்களோட இந்த 5 நடவடிக்கைகள் கண்டிப்பா மாறும்!
Lifestyle articles

உலகின் பிற நாடுகளில் சமூக ரீதியாக இம்முறை ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், சட்ட ரீதியாக பாதுகாக்கப் படவில்லை. ஒரு ஆண் ஒரு பெண் மட்டும் மணமுடித்துள்ள குடும்ப அமைப்பு, அதாவது ஒருதார மணம், வாரிசுரிமை, குழந்தை வளர்ப்பு, ஆரோக்கியம் போன்றவைகளைச் சுற்றியே சட்டங்கள் இயற்றப் படுகின்றன.

க்யூபெக்கில் த்ரூப்பிள் முறையை அனுமதிக்கவும், குழந்தைகள், இரண்டிற்கும் மேற்பட்ட நபர்களை பெற்றோராக ஏற்றுக்கொள்ளவும் சட்டம் இடமளிக்கிறது. த்ரூப்பிள் முறை உறவில் சம்பந்தப்பட்ட மூவர் தவிர, ஓபன் ரிலேஷன்ஷிப் முறையில் இருப்பதுபோல் வெளி நபருடன் உணர்ச்சிபூர்வ உறவில் ஈடுபட உரிமை இல்லை.

த்ரூப்பிள் முறை உறவில் சவால்களும் உண்டு. ஒருவர் மீது பொறாமை ஏற்படுவது, மனதில் உள்ளதை வெளிப்படையகப் பேச முடியாத சூழல் உறுவாவது, மரியாதை தருவதிலும் பெறுவதிலும் குறைபாடு ஏற்படுவது போன்றவற்றை குறிப்பிட்டு சொல்லலாம். இதற்கு தீர்வாக, முடியுமானால் முன்கூட்டியே சட்ட ரீதியான, எழுத்துருவில் ஒப்பந்தம் போட்டுக்கொள்ளலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com