

மங்கையர் மலரின் 44வது ஆண்டினை முன்னிட்டு நமது கல்கி ஆன்லைனில் 44 கேள்விகளைக் கொடுத்து அதற்கான பதில்களைக் கேட்டிருந்தோம். ஏகப்பட்ட வாசகர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர். அனைவருக்கும் நன்றி.
இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் ஒருவர் கூட 44 கேள்விகளுக்கும் சரியான விடை அளிக்கவில்லை என்பது தான். 43 கேள்விகளுக்கு சரியான விடைகள் அளித்தவர்களும் இல்லை.
44 கேள்விகளுள் அதிகபட்சமாக 42 கேள்விகளுக்கு 7 பேர் மட்டுமே சரியான விடையளித்து, ஆசிரியர் குழுவின் தீர்மானத்தின் படி, பரிசை பெறுகிறார்கள். இவர்களுக்கு வாழ்த்துகள்.
சரியான விடைகளையும், பரிசு பெற்றவர்களின் விவரங்களையும் கீழே கொடுத்திருக்கிறோம்.
R.பிருந்தா, சென்னை.
லட்சுமி வாசன், சென்னை.
என்.கோமதி, திருநெல்வேலி.
சித்ரா, சேலம்.
தி.வள்ளி, திருநெல்வேலி.
S.நித்யலட்சுமி, கும்பகோணம்.
பாக்கியலட்சுமி, மதுரை.
1. தாத்தா – பாட்டி பேரன் பேத்தி புகைப்படப் பகுதி?
என் செல்லமே
2. ஐந்து தலைமுறைகளை தெரியப்படுத்தும் பகுதி எது?
பஞ்சாமிர்தம்
3. பல வருடங்கள் நடத்தப்பட்ட மிக பிரபலமான சமையல் போட்டி?
இம்மாத இல்லத்தரசி
4. அச்சு வடிவில் இறுதியாக வெளிவந்த மங்கையர் மலரின் விலை?
ரூ. 30
5. 'பாப்கார்ன்' பக்கங்கள் எதையெல்லாம் குறிக்கும்?
பல தரப்பட்ட குட்டி குட்டிப் படைப்புகள்
6. ஆண்டு மலர் வெளியிடப்படும் மாதம்?
பிப்ரவரி
7. பெருங்குளம் ராமகிருஷ்ணன் எழுதிய ராசிபலன் பகுதி?
நல்லதே நடக்கும்
8. அன்பு வட்டத்திற்கு பதில் கூறுபவரின் பெயர் என்ன?
அனுஷா நடராஜன்
9. பெண் ஆளுமைகளை அறிமுகப்படுத்திய பகுதி எது?
அசர வைக்கும் ஆளுமைகள்
10. இல்லறம் தொடங்க உதவிய பகுதி?
திருமண மலர்
11. தலையங்க பகுதி?
ஒரு வார்த்தை
12. 1980களில் மங்கையர் மலரின் ஆசிரியர் யார்?
மஞ்சுளா ரமேஷ்
13. மங்கையர் மலர் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு?
1981
14. பட்டிமன்றம் ராஜா எழுதிய தொடரின் பெயர்?
பூர்ணிமா.காம்
15. மங்கையர் மலரின் வெள்ளிவிழா எந்த ஆண்டு கொண்டாடப்பட்டது?
2005 - 2006
16. பாரதி பாஸ்கர் எழுதிய தொடரின் தலைப்பு?
சில பாதைகள் சில பயணங்கள்
17. மாணவர்களுக்காக கல்லூரிகளில் நடத்தப்பட்ட கலை நிகழ்ச்சி/போட்டி?
பூஞ்சாரல்
18.மங்கையர் மலரில் வெளியான புதிர் போட்டிகளை தொகுத்து வழங்கியவர் யார்?
GSS
19. மங்கையர் மலர் வெள்ளிவிழாவின்போது ஆசிரியராக இருந்தவர் யார்?
ரேவதி சங்கரன்
20. பிரபலமான வாசகர் டிப்ஸ் 'ஆஹா .......' ?
50
21. இந்த வட்டம் மிகப் பிரபலமானது, அது எந்த வட்டம்?
அன்பு வட்டம்
22. தன் மனைவியின் நினைவாக திரு.ராஜகோபாலன் நடத்திய சிறுகதை போட்டி?
ஜெயஸ்ரீ ராஜ் நினைவு சிறுகதைப் போட்டி
23. 34x24 போட்டிக்கான பரிசுகளை வழங்கியது யார்?
ஆர்எம்கேவி
24. மங்கையர் மலர் எந்த வருடத்திலிருந்து மாதமிருமுறையாக வெளிவந்தது?
2013
25. சௌந்தரபாண்டியன் போன் அண்ட் ஜாயின்ட் மருத்துவமனை வழங்கிய ஆர்த்தோ கட்டுரைகள்?
துள்ளுவதோ இளமை
26. ஒரு ...... ஒரு....... ? (இந்திரா சௌந்தர்ராஜனின் தொடர்கதை)
முள், மலர்
27. 1982ல் வெளிவந்த 'எப்போதும் பெண்' தொடரை எழுதியது யார்?
சுஜாதா
28. Office எனும் சொர்க்கம் என்ற தலைப்பில் எழுதியவர் யார்?
சுமதி நாராயணன்
29. முதல்முதலில் அச்சிட்ட இதழ் விலை என்ன?
ரூ 1.50
30. மல்லிகா பத்ரிநாத் வழங்கிய சமையல் குறித்த கேள்வி – பதில் பகுதியின் தலைப்பு?
சமையலறை சந்தேகங்கள்
31. பெண்களை உயர்த்தும் ஆன்மிகம் என்ற தலைப்பில் வெளிவந்த குட்டிபுக் எழுதியவர்?
சுகிசிவம்
32. பளிச் பல்ப் என்பது?
வாசகர் கேள்வி வாசகர் பதில்
33. குழந்தைகளின் குறும்புச்செய்திகள் வெளியிடப்பட்ட பகுதி?
குட்டீஸ் லூட்டி
34. 1982ல் வெளிவந்த லலிதா கணபதிராமன் கற்றுத் தந்தது?
தையல் கலை
35. கல்லூரி மாணவர்களை ஊக்குவித்து அறிமுகப்படுத்திய இணைப்பு?
மிஸ் மலர்
36. வாசகிகளின் கைவண்ணத்தில் 2014 ஆம் ஆண்டு மாதம் ஒருமுறை வெளியிடப்பட்ட MTR இடித்த மசாலா வழங்கிய குட்டி புக்?
M மயக்கும் T டேஸ்டி R ரெசிபிஸ்
37. அழகு கலை நிபுணர் வசுந்தரா எழுதிய தொடர்?
அழகாய் இருக்க ஆலோசனை
38. 'கல்வெட்டு சமையல் முதல் கட்லெட் வரை' எனும் தலைப்பில் நமக்கு பயனுள்ள ரெசிபிகள் அளித்த சூப்பர் செஃப்?
செஃப் ஜேக்கப்
39. 'வைர மங்கை' சிறப்பு சந்தா திட்டம் அறிமுகப்படுத்திய வருடம்?
2010
40. சந்திரமெளலி எழுதிய நடிகை சச்சு குறித்த 'அச்சு வெல்லத் தொடர்?
ரோஜா மலரே ராஜகுமாரி
41. கடைசியாக வெளிவந்த அச்சு இதழின் தேதி?
16–30 மார்ச் 2021
42. டாக்டர் விஜயலட்சுமி பந்தையன் அளித்த மனநல பயிற்சி?
மை டியர் மைண்ட் பவர்
43. மங்கையர் மலர் தலைப்புடன் வந்த வாசகம்?
யாதுமாகி நிற்பாள்
44. மங்கையர் மலர் வெள்ளிவிழா ஆண்டின்போது 'அபார்ட்மெண்ட்' பரிசாக அளித்த நிறுவனம்?
KGEYES Builders