மறக்க முடியாத அனுபவங்களை அள்ளித் தந்த மங்கையர் மலர்!

மறக்க முடியாத  அனுபவங்களை  அள்ளித் தந்த மங்கையர்  மலர்!
மங்கையர் மலர்

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

ங்கையர் மலர் மலர்ந்து வீசத்  தொடங்கிய  முதல்  இதழில்  இருந்து  இன்றுவரை அதன்  வாசகி என்பதில்  பெருமகிழ்ச்சி  அடைகிறேன். சமையல்  குறிப்புகள்   கோலங்கள், மருத்துவக்  குறிப்புகள், ஆன்மீகம்  என்று  பல  வகையிலும்  உறுதுணையாக இருந்து  வழிகாட்டி  வந்ததை  மறக்க முடியாது. இப்போது  உள்ளதைப்  போல  YouTube கள்   இல்லாத  காலத்தில்  ராணியாக 
திகழ்ந்தது.  நானும்  கடிதம்  எழுத அந்த  முதல்  கடிதமே  பிரசுரம்  ஆக, மகிழ்ச்சியைத்  தொடர்ந்து,  வரும்  கடிதங்களில்  ஒன்று  பரிசுக்கு  உரியதாக  மாறியதும்  சிறப்பு. அது  தொடர்ந்து  சிறு  குறிப்புகள்  போட்டிகள்  எ‌ன்று  நீண்டு  பயணக் கட்டுரை  வரை  பரிசுகள்  பெற்றதை மறக்க முடியாது. அது  இன்றுவரை   தொடர்கிறது.  மறக்க முடியாத  அனுபவங்களை  அள்ளித் தந்த மங்கையர்  மலருக்கு  என்  வாழ்த்துக்கள். 

logo
Kalki Online
kalkionline.com