மருதாணி என்றாேலே பெண்கள் அனைவருக்கும் பிடித்த ஒரு அழகு சாதனம். அது மட்டும் இல்லாமல் கடவுளின் அருள் நிறைந்த இந்த மருதாணியை கையில் இடும் போது மனதில் மகிழ்ச்சி கிடைக்கும்.
மருதாணிசெடி மகாலட்சுமியின் மனமகிழ்ந்து ஆசி பெற்ற ஒரு அற்புத செடி. மருதாணி செடியின் களை மற்றும் விதைகளை நாம் முறைப்படி பயன்படுத்தினால் கடவுளின் அருள் நமக்கு வந்து சேரும்.
மருதாணி பொடி மற்றும் அதன் விதைகளை வைத்து பூஜை செய்தால் வீட்டில் தடைபட்ட நல்ல காரியங்கள் நடந்தேறும். அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் ஒரு அழகிய தேவதை இந்த மருதாணி செடி.
ஒரு கண்ணாடி அல்லது பித்தளைக் கிண்ணத்தில் சில்லறை காசுகளை போட்டு அதன் மீது மருதாணி பொடி மற்றும் அதன் விதைகளை அந்தக் கிண்ணம் மூழ்கும் அளவுக்கு போட வேண்டும். இதனை பூஜை அறையில் வைத்து அதன்மேல் ஒரு மண் விளக்கில் எண்ணெய் நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்தப் பூஜையை வெள்ளிக்கிழமை அன்று மட்டும் செய்ய வேண்டும். மகாலட்சுமியை நினைத்து இதனை செய்து வந்தால் நல்ல காரியங்கள் நடக்கும். வெள்ளிக்கிழமையில் மருதாணியை மகாலட்சுமி நினைத்து கையில் வைத்துக் கொண்டால் எந்த துன்பங்களும் அண்டாது. மருதாணி, தெய்வீக மூலிகை வரிசையில் துளசியை போன்று மகாலட்சுமி வாசம் செய்யும் மருத்துவம் குணம் கொண்ட செடியாகும்.
மருதாணி யாருக்கு சிவக்கும்:
ஜாதகத்தில் செவ்வாய் சுக்கிர சேர்க்கை இருப்பவர்களுக்கெல்லாம் மருதாணி நன்கு சிவந்து அழகை தரும். செவ்வாய் சேர்க்கை உள்ளவர்களுக்கு அதிக அன்புடன் ஆர்வம் இருக்கும் என ஜோதிடமும், மருதாணி கையில் அழகாக சிவப்பவர்களுக்கு எல்லாம் தங்கள் கணவர்களை சந்தோஷப்படுத்துவதில் சிறந்தவர்கள் என ஆயுர்வேத மருத்துவமும் கூறுகிறது. செவ்வாய் சேர்க்கை பெற்றவர்களுக்கு மருதாணி நன்கு சிவக்கும். சுக்கிரன் புதன் சேர்க்கை உள்ளவர்களுக்கு மஞ்சள் அல்லது ஆரஞ்சு கலரில் கை நிறம் சிவக்கும். சுக்கிரன் செவ்வாயோடு ராகு, சனி பார்வை சேர்க்கை பெற்றவர்களுக்கு கை நிறம் கறுத்து விடும்.
மருதாணி நன்மைகள்:
தொடர்ந்து மருதாணிக்கு இன்னொரு சிறப்பு உண்டு. மருதாணியை ஒருவர் கையில் வைக்கும் போது மருதாணி வைக்கப்பட்டவரின் கை சிவந்தால் எந்த நபர் மருதாணி வைத்தாரோ அந்த நபர் பாசமானவர் என்பதை உணர்த்தும். அதனால் தான் இன்றும் சில கிராமங்களில் உள்ள பெண்கள் தன் கையில் மருதாணி வைக்கும் படி கணவரிடம் சொல்வார்கள். வைத்த பின் அந்த பெண்ணின் கையில் நன்றாக சிவந்தால் தன் கணவர் தன் மேல்பாசமாக இருப்பார் என்பதை புரிந்து கொள்வாளாம்!
மேலும் மருதாணிக்கு சிறந்த கிருமி நாசினி பண்பு உண்டு. கண்ணுக்குத் தெரியாத கிருமிகளை அழிக்க வல்லது. நகங்களுக்கு எந்த நோயும் வராமல் பாதுகாக்கலாம் என ஜோதிடம் சாஸ்திரம் கூறுகிறது . புண்ணை ஆற்றும் நல்ல சக்தி உண்டு.
இத்தகைய பலன்களால் மருதாணியை வீட்டில் வளர்த்து வந்தால் மகாலட்சுமியின் அருளைப் பெறலாம்.