மாட்டுங்கா ஜிம்கானாவில் மாநில அளவிலான பிரிட்ஜ் போட்டி: குடும்ப அன்பும் விளையாட்டு உற்சாகமும் கலந்த இரு நாள் விழா!

டீம் மற்றும் ஜோடி பிரிட்ஜ் ஆட்டங்களில் கணவன்-மனைவி, தந்தை-மகன், தாய்-மகன் இணைந்து பங்கேற்று உற்சாகம்; தொழில்நுட்ப வசதிகள், ஒழுங்கான ஏற்பாடுகள், பரிசுகள், நட்புகள் அனைத்தும் கலந்து மறக்க முடியாத அனுபவம்.
bridge-tournament
bridge-tournament
Updated on
MM strip
MM strip

பிரபலமான மும்பை மாட்டுங்கா ஜிம்கானாவில், மிக சமீபத்தில்  ரமேஷ் தேதியா அவர்களின் நினைவு தினத்தை ஒட்டி,  பிரிட்ஜ் போட்டி  மாநில அளவில் நடைபெற்றது.  ரமேஷ் தேதியா,  2011-ல் பிரிட்ஜ் விளையாட்டைக் கற்றுக்கொண்டு, கிளப் லெவல் போட்டிகளில் விளையாடத் தொடங்கியவர்.  ஒரு பிரிட்ஜ் புத்தகத்தைக் கூடப் படிக்காமலேயே, தனது தனித்துவமான பாணியாலும், ஒருபோதும் மனம் தளராத மனப்பான்மையாலும் பிரிட்ஜ் மேஜையில் சிறந்த முடிவுகளைப் பெற்று வந்தவர்.  அவரது நினைவாக, குடும்பத்தினர் இந்த டூர்னமெண்டை ஏற்பாடு செய்ய,  அவரது நண்பர் டி.வி. ரமணியிடம் கூறியிருந்தனர்.

இரண்டு நாட்கள் நடந்த இந்த பிரிட்ஜ் போட்டியில் நான் கலந்து கொண்டு விளையாடினேன். மிகவும் சுவாரசியமாக இருந்தது.  பிரிட்ஜ் விளையாட்டு என்பது,  52 சீட்டுக்களைக் கொண்டு விளையாடும் அருமையான விளையாட்டாகும்.

52 சீட்டுக்களில்,  A - க்கு 4 , K க்கு 3, Q க்கு 2 , J க்கு 1 பாயிண்ட். என 10 பாயிண்ட்ஸ்.  பிறகு வரும் 10,9,8,7,6,5,4,3,2. க்கு பாயிண்ட்ஸ் கிடையாது.

ஸ்பேட், ஹார்ட்ஸ், டைமண்ட், கிளப் என 4 வித பிரிவுகள் சேர்ந்து 40 பாயிண்ட்ஸ்கள். ஒவ்வொன்றிலும் 13 கார்டுகள். ஆக மொத்தம் 52.

டீம் விளையாட்டு மற்றும் ஜோடி விளையாட்டு  என இரண்டு வகை விளையாட்டுக்கள்.  வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு ஆகிய. நான்கு  திசைகளில் அமர்ந்து விளையாடவேண்டும். நால்வர் விளையாடும்  டீம் (team of 4) விளையாட்டில், மூடிய அறையில் இருவரும், திறந்த அறையில் இருவரும் அமர்ந்து விளையாட வேண்டும்.

இருவர் மட்டும் விளையாடுவது ஜோடி விளையாட்டு (Pair game).

ஆன்லைனில் முதலிலேயே பணம் கொடுத்து  ரெஜிஸ்டர் செய்தேன். மாட்டுங்கா ஜிம்கானாவில் நுழைந்ததும் ரிஸப்ஷனில் பெயரை செக் செய்த பின், வருபவர்களின் கைககளில்,  செக்யூரிட்டி  ஒரு மெல்லிய பேட்ஜைக் கட்டிவிடுகிறார்.  எனக்கும் கட்டப்பட்டது. பிறகு,  ப்ரேக் ஃபாஸ்ட், லன்ஞ், மாலை ஹை டீக்கான மூன்று கூப்பன்களை கொடுத்தார்கள்.  வாங்கிக் கொண்டபின், லிஃப்டில் மூன்றாவது மாடிக்கு செல்ல வேண்டும்.  முதலில் வயிற்றுக்கு உணவாக  ப்ரேக் ஃபாஸ்ட்.  பிறகுதான் விளையாட்டு. பெரிய கேண்டீனுள் நுழைந்தவுடன், விதவிதமான ஐட்டங்கள். சாண்ட்விச், வெஜிடபிள் உப்புமா, இட்லி, மெதுவடை, சட்னி-சாம்பார்,  காப்பி, டீ என இருக்க, விளையாடுபவர்களுடன் நானும் சாப்பிட்டேன்.  விளையாட்டு ஹாலில், சுமார் 40 டேபிள்கள் மற்றும் நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. 

இதையும் படியுங்கள்:
நான் சாக விரும்பவில்லை - நடிகை லட்சுமி | Kalki Kalanjiyam | Mangayar Malar
bridge-tournament

ரமேஷ் தேதியாவின் படத்தின் மீது அழகான. பூக்கள் வைக்கப் பட்டிருந்தன. அவரது குடும்பத்தினர் அனைவரும் வந்திருந்தனர். அவரைப் பற்றி பேசிய பிறகு, விளையாட்டு ஆரம்பமானது.

வடக்கு-தெற்கு; கிழக்கு-மேற்கு  மற்றும் Vulnerable - non vulnerable என்று எழுதியிருக்கும் செவ்வக வடிவ போர்டின் நான்கு உள் அறைகளில்  13//13//13//13// என  சீட்டுகள் வைக்கப் பட்டிருந்தன.  Dealer, அதாவது முதலில் Bidding செய்பவர் யார் என்று தெரிவதற்காக, போர்டின் மீது அதுவும் குறிக்கப்பட்டிருந்தது.  ஒருவரும் பேசக் கூடாது. மொஃபைல் அமைதிகாக்க வேண்டும்.

ஒவ்வொருவர் அருகிலும் வைக்கப்பட்டிருக்கும்  Bidding box இலிருந்து எடுத்துத் தான்  Bidding செய்யவேண்டும்.  ஜெயித்த பின், பிரிட்ஜ் மேட்டில் அதைப் பதிவிடல் வேண்டும். பிரிட்ஜ்மேட் பதிவு கம்யூட்டருக்குச் செல்லும். அதை மானிட்டர் செய்து, ஸ்கோர் பண்ண,  டைரக்டர்,  உதவி டைரக்டர்,  இரு உதவி ஆட்கள் நியமிக்கப் பட்டிருந்தனர். படுவேகமாக இவர்கள் செயல்பட்டனர்.

ஒவ்வொரு அணியும் தாங்கள் எத்தனை 'ட்ரிக்' (tricks) வெல்வோம் என்று டிரம்ப் (Trump) அல்லது 'நோ ட்ரம்ப்' (No Trump) மூலம் தேர்வு செய்யவேண்டும். ஏலத்தின் அடிப்படையில், அதிக  சீட்டுக்களை வெல்வதே நோக்கம்.

அம்மம்மா ! கண்ணைக் கட்டுதே...!!  பிரிட்ஜ் டூர்னமென்டின் மூலம் பெற்ற  அநுபவங்கள் பல-பல!.

கௌண்டிங் மெஷின் ஒவ்வொரு போர்டிற்குள்ளும், சீட்டுக்களை 13 - 13 ஆக  கட-கடவென எண்ணி நான்கு பகுதிகளிலும் விரைவாக போடுவது;  

Bidding box மூலம் Bidding,  Pass, double என எல்லாமே வாய் பேசாமல், கைகளினால் எடுத்து வைப்பது,  *பிரிட்ஜ் மேட்டில்* ஸ்கோரைப் பதிவிடுவது.

கணினி வழியாக ரிஸல்ட்டை பெரிய ஸ்கீரினில் காட்டுவது போன்றவைகள் பாராட்டப்பட வேண்டியவைகள்.

சிநேகிதர்கள், தெரிந்தவர்கள் கணவன்-மனைவி, தந்தை-மகன், தாயார்- மகன் என்று  டீம் மற்றும் Pair விளையாட்டுக்களை அநுபவித்து  விளையாடியது சூப்பராக இருந்தது.

(இதில் தாயார்-மகன் Pair இல் என்னுடன்,  எங்களது மகனும், விளையாடியது அனைவருக்கும் வியப்பாக இருந்தது).

bridge-tournament
bridge-tournament

உபரி தகவல்கள்:

ப்ரேக் ஃபாஸ்ட் மாதிரியே,  மதிய உணவு, மாலை நேர ஹை டீ - ஸ்நாக்ஸ்  எல்லாமே சூப்பர்.

வென்றவர்களுக்கு பரிசுகள் அளிக்கப்பட்டன.

வீட்டு விசேஷம் மாதிரி, ஜே-ஜே என்று இரண்டு நாட்களும் பறந்தன. 

அநேக புதிய விபரங்கள் தெரியவர, புதிய நண்பர்களும் கிடைத்தனர்.

வீல் சேரில் அமர்ந்தும், கைககளில் ஸ்டிக் வைத்து சாய்ந்து நடந்தும் வந்து விளையாடினர்.  அல்சைமர் வியாதி இதனால் குறையும் என்றனர்.

ரமேஷ் தேதியாவை பற்றி, அவரது நெருங்கிய  நண்பர் ரமணி,  ரமேஷ் தேதியாவிற்கு பிரிட்ஜ் விளையாடுவது மிகவும் பிடிக்கும்.  திறமைசாலி. ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் அகில இந்திய அழைப்பு பிரிட்ஜ் சாம்பியன்ஷிப் போட்டியில் அவருடன் இணைந்து விளையாடும் வாய்ப்பு  எனக்குக் கிடைத்தது,  சென்ற ஆண்டு விளையாடுகையில் வெற்றி .கிடைக்க,  2026 இலும்,  நாம் வெற்றி பெற்று, பட்டத்தைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்று  அவரிடம் கூறியிருந்தேன், ஆனால் துரதிர்ஷ்டவசமாக, சென்ற வருடம்  திடீர் மாரடைப்பால் காலமானார். ரமேஷ் தேதியா குடும்பத்தினரின் பெருந்தன்மையால்,  அவருக்கு மிகவும் பிடித்த பிரிட்ஜ்  டூர்னமென்ட்  இரு தினங்களுக்கு  ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது பாராட்டிற்குரிய விஷயமாகும்"  என்றார்.

இதையும் படியுங்கள்:
ஆசை 1x; மகிழ்ச்சி 10x: அந்த காலம்... அது வசந்த காலம்...
bridge-tournament

ரமேஷ் தேதியாவின் குடும்பத்தினர்,  விளையாட வந்த அனைவரையும் அன்புடன் வரவேற்றது குறிப்பிடத்தக்கது.

பரிசு கிடைக்காவிட்டாலும், டூர்னமென்டில் பங்கேற்றது; புதிய அநுபவங்கள் பெற்றது; தனது பிஸியான வேலையிலும், நேரம் ஒதுக்கி, என்னுடன் சேர்ந்து மகன்  விளையாடியது; ஆகியவைகள்  எனக்கு மனத் திருப்தியை அளித்தன என்பது நிதர்சனம்.

logo
Kalki Online
kalkionline.com