மருத்துவத்திலும் ஆன்மீகத்திலும் பிரிஞ்சி இலைகளின் நன்மைகள்!

மருத்துவத்திலும் ஆன்மீகத்திலும் பிரிஞ்சி இலைகளின் நன்மைகள்!
Published on

மசாலாப் பொருட்களில் மிக முக்கியமானது பிரிஞ்சி இலை அதில் நம் உடலுக்கு என்னென்ன நன்மைகள் உள்ளது என்பதை இங்கே பார்ப்போம்.

பிரியாணி, ஆட்டுக்கறி குழம்பு போன்ற உணவுகளில் பெரும்பாலும் பிரிஞ்சு இலை என்ற பிரியாணி இலை கட்டாயம் சேர்த்திருப்பார்கள். பிரியாணி இலை உன்னதமான பல ஆற்றல்களை தன்னகத்தே கொண்டது.

இதன் பூர்வீகமாக கிரேக்கம் இருந்தாலும், கிரேக்க கடவுளாக கருதப்படும் அப்பாசோ பிரிஞ்சு இலையை பயன்படுத்தி வெற்றி பெற்றதாகவும் கருதப்படுகிறது. சூரியனின் தன்மையை கிரகிக்க பிரிஞ்சு இலை உதவுகிறது.

இதனை அதிகளவு பயன்படுத்தி வந்தால் ஆன்ம பலம் அதிகரிக்கும் என்றும், இதனை தலையணைக்கு கீழே வைத்து உறங்கி வந்தால் நல்ல உறக்கம் ஏற்படும் என்றும், தெளிவான மனநிலை கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

பிரிஞ்சு இலையை எரிப்பதால் ஏற்படும் புகை உடலுக்கும், மனதிற்கும் மிகவும் நல்லது. வீட்டில் இருக்கும் தீய சக்திகளை விரட்டும் வல்லமையும் கொண்டது. பிரிஞ்சு இலையை பொடியாக செய்து பன்னீருடன் சேர்த்து வீட்டில் தெளித்து வந்தால் லட்சுமி கடாக்ஷம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com