ப்ரோக்கோலியின் மருத்துவ பயன்கள்:

ப்ரோக்கோலி
ப்ரோக்கோலி

ப்ரோக்கோலி முட்டைகோஸ் வகையை சேர்ந்த ஒரு காய்கறியாக்கும் . பச்சை பூக்கோஸ் என்றும் ப்ரோக்கோலி அழைக்கபடுகிறது, சத்துள்ள காய்கறிகளில் ஒன்றாக ப்ரோக்கோலி கருதபடுகிறது. அது மட்டும் இல்லை இன்னும் நிறைய மருதுவ குணங்களும் இதில் உள்ளது. ஆரோக்கியமான டயட்டுக்குத் தேவையான காய்கறி எது என்று கேட்டால் சந்தேகமே இல்லாமல் ப்ரோக்கோலி சொல்லலாம்.

உங்களுக்கு சந்தேகம் வரலாம் ப்ரோக்கோலி அப்படி என்னதான் சத்துக்கள் உள்ளது அது நம் உடலிர்க்கு என்ன ஆரோக்கியம் தருகிறது என்று, ப்ரோக்கோலி தரும் ஆரோக்கியங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

*ஃப்ளேவிவனாய்டுகள், கரோட்டினாய்டுகள், லூட்டின், பீட்டா-கரோட்டின் மற்றும் ஸியாஸாநித்தின் இந்த அனைத்து ஆன்டி-ஆக்ஸிடண்ட் பொருட்களும் நம் ஆரோக்கியற்திறக்கு மிகவும் நல்லது.

*எலும்பு வளர்ச்சிக்கு கால்சியம் எவ்வளவு நல்லது முக்கியம் என்பது நமக்கு தெரிந்த விஷயம்தான். ஆனால், பெரும்பாலான காய்கறிகளில் கால்சியம் சத்து இருக்காது, அல்லது குறைவாக இருக்கும். இதில் கால்சியம் இருப்பதால் நம் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது.

*நம் வயிற்றில் உள்ள செரிமானப் பாதைகளை நன்றாக சுத்தம் செய்வதில் ப்ரோக்கோலி பெரும் பங்கு வகிக்கிறது.

*புற்று நோய்க்ககு இது ஒரு நல்ல மருந்தாக அமையும். ப்ரோக்கோலியில் உள்ள மினரல்கள், உயிர் வளியேற்ற எதிர் பொருட்கள் ஆகியவை புற்று நோய்யை விரட்டி அடிக்கும் தன்மை வாய்ந்தவையாக்கும்.

*ப்ரோக்கோலியில் உள்ள நார்ச்சத்து இரத்ததில் உள்ள சர்க்கரையின் அளவை சீராகவும், கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது.

*மத்திய நரம்பு மண்டலம் ஆரோக்கியமாக இருக்க ப்ரோக்கோலி பெரிதும் உதவுகிறது. ஏன்னெறால் ப்ரோக்கோலியில் பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் நிறைந்து காணபடுகிறது.

* ப்ரோக்கோலி எளிதில் கரையும் நார்ச்சத்து பொருள் நம் உடலில் உள்ள கோளஸ்ட்ரால்களைக் குறைக்க உதவுகிறது.

* ப்ரோக்கோலியில் வைட்டமின் சி, வைட்டமின் கே, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இருப்பதால் அவை நம் மானநலத்தை அதிகரிக்க உதவுகிறது. ஞாபக சக்தி அதிகரிக்கவும், புத்திசாலித்தனமாக இருக்கவும் இவை உதவுகின்றது.

*இதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலம் மற்றும் கேப்ஃபேரால் ஆகியவை அலர்ஜிக்கு எதிராக வேலை செய்ய உதவுகிறது. அதுமட்டும் அல்லாமல் பலவிதமான எரிக்கல்களையும், அலர்ஜிக்களையும் போக்குவாதற்க்கு ப்ரோக்கோலி மிகவும் பயன்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com