
உலர் கருப்பு திராட்சையில் வைட்டமின் பி, சி, ஃபோலிக் ஆசிட், இரும்புச்சத்து, கரோட்டீன்கள், லுடீன், பொட்டாசியம், கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளன.
உலர் கருப்பு திராட்சையில் தாமிர சத்துக்கள் உள்ளதால் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். இதை தொடர்ந்து சாப்பிடுவதால் எலும்பு மஜ்ஜைகள் வலுப்பெறும், இதய துடிப்பு சீராகும்.
இரவில் படுக்கும் போது ஒரு கப் நீரில் 8-10 உலர் கருப்பு திராட்சையை ஊற வைத்து, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் நீருடன் சேர்த்து அதனை உட்கொண்டு வந்தால், சிறுநீரக பாதையில் நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.
மாதவிடாய்க் காலத்தில் ஏற்படும் வயிற்று வலிக்கு உலர் கருப்பு திராட்சை அருமருந்து.
இதில் இருக்கும் டார்டாரிக் அமிலம் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளதால் பெருங்குடல் புற்றுநோய் அபாயத்தை குறைக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
உலர் கருப்பு திராட்சை உட்கொள்வது நமது தலைமுடியின் ஆரோக்கியத்தையும் இயற்கையான நிறத்தையும் பராமரிக்க மிகவும் உதவியாக இருக்கும். கருப்பு திராட்சையில் கொலஸ்ட்ரால் இல்லை.
இதில் கால்சியம் சத்து அதிகம் இருப்பதால் பற்கள் மற்றும் எலும்புகளின் வளர்ச்சிக்கு இது பெரிதும் உதவுகிறது.
உலர் கருப்பு திராட்சையை தொடர்ந்து சாப்பிடுவது ரத்த அழுத்தம் மற்றும் ரத்த சர்க்கரை அளவை சீராக வைக்க உதவுகிறது. மேலும் இதில் நிறைந்துள்ள பொட்டாசியம் பக்கவாதம் ஏற்படுவதை தவிர்க்க உதவும்.
கண் மற்றும் சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் உலர் கருப்பு திராட்சைகள் உதவுகின்றன.